ஜிநாலயம் (Jain Temple)

பாடம் 4

ஜிநாலயம்

1) இது ஜிநாலயம். இது அழகும் அமைதியும் நிறைந்த இடமாகும். இங்கு அருகனை வணங்க வருகிறோம்.

2) ஆலயத்திற்குள் நுழையும் முன் நாம் நமது பாதணிகளை கழற்றி விட வேண்டும்.

3) நாம் ஆலயத்திற்குள் உணவு மற்றும் பானங்கள் அருந்துவதை தவிற்க்க வேண்டும்.

4) ஆலயத்திற்குள் நுழைந்த உடன் நாம் அருகனை மும்முறை “நிஷிஹி” எனக்கூறி வணங்க வேண்டும்.

5) இது மஹா வீரரின் சிலையாகும். அவரை நினைந்து அமைதியாக வணங்குவோம்.

6) அமைதியாக அமர்ந்து, பஞ்ச மந்திரத்தை கூறி வணங்குவோம்.

7) ஆலயத்தில் கூச்சல் போட்டு ஓடி ஆடுவதை தவிற்க்க வேண்டும்.

8) ஆலய உண்டியலில் நிதி செலுத்துவோம்.

9) ஆலயத்திலிருந்து வெளியேரும் போது, நாம் அருகனுக்கு முதுகுப் புறத்தை காட்டினால் அது அவமதிப்பாகும், ஆகையால், பின்புறமாகவோ பக்க வாட்டிலோ நடந்து வெளியேறுவோம்.

கேள்விகள்:

1) ஜிநாலயம் எத்தகைய இடமாகும்?

2) ஜிநாலயத்திற்குள் நுழையும் முன் நாம் என்ன செய்ய வேண்டும்?

3) ஜினாலயத்தில் நுழைந்தவுடன் நாம் என்ன சொல்ல வேண்டும்?

4) ஜிநாலயத்தில் யாருடைய சிலை உள்ளது?

5) ஜிநாலயத்தில் நாம் என்ன செய்யவேண்டும்?

6) ஜிநாலயத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?

7) ஜிநாலயத்தில் நாம் எந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்?

8) ஜிநாலயதைவிட்டு வெளியேறும்போது என்ன செய்யக் கூடாது?