என் குடும்பம் (My Family)

பாடம் 3

என் குடும்பம்

1) இவர்கள் எனது தாய், தந்தை.

2) எனது பெற்றோர் மற்றும் சகோதர, சகோதரிகளை காலையில் முதன்முறையாக காணும்போது “ஜெய் ஜிநேந்திரா” என முகமன் கூறுவேன்.

3) நாங்கள் அனைவரும் ஞாயிற்றுக் கிழமை மற்றும் வாரத்தின் இயன்ற மற்ற நாட்களில் தவறாமல் ஜிநாலயம் செல்வோம்.

4) மஹாவீரரை வணாங்கி பிரார்த்திப்போம்.

5) எனது பெற்றோர் வேலைக்குச் செல்கின்றனர். அவர்கள் தங்கள் வேலைகளில் மற்ற உயிரினங்களுக்கு துன்பம் எற்படுத்தும் எந்த ஒரு செயலையும் செய்வதில்லை.

6) எனது பெற்றோர் மளிகை மற்றும் உணவுப் பொருட்கள் வாங்கும்போது தாவரம் சார்ந்த உணவுப் பொருட்களையே வாங்குவர். ஏனெனில் சமணர்கள் புலால், கடல் உணவு, முட்டை மற்றும் மற்ற உயிரினங்களுக்கு துன்பமோ உயிரிழப்போ ஏற்படுத்தக்கூடிய எந்த உணவையும் உண்ணுவதில்லை.

7) நாங்கள் ஏழை மக்களுக்கு உடுத்த உடையும், தாவரம் சார்ந்த உணவு வகைகளையும் அளித்து உதவுவோம்.

8) நாங்கள் சமயத் தொண்டிற்காக நிதி வழங்குவோம்.

9) எனது பெற்றோர் எனக்கு சமண சமயத்தைப் பற்றி விளக்கிக் கூறுவர். அவர்கள் நாம் விலங்குகளிடமும், தாவரங்களிடமும் அன்புடன் நடந்து கொள்ளவேண்டும், ஏனெனில் அவையும் நம்மைப் போன்ற உயிரினங்களே எனக்கூறுவர். நாம் அவற்றை துன்புறுத்தவோ கொல்லவோ கூடாது. ஆகையால் நாம் புலால் மற்றும் மது அருந்தக்கூடாது.

10) உறங்கச் செல்லும் முன் தினமும் பஞ்ச மந்திரத்தை தினமும் ஐந்து முறை சொல்ல வேண்டும்.

கேள்விகள்:

1) நமது குடும்ப உறுப்பினர்களிடம் எவ்வாறு முகமன் கூறி வணங்க வேண்டும்?

2) நாம் எத்தகைய உணவுகளை வாங்க வேண்டும்?

3) எத்தகைய உணவு மற்றும் பானங்களை நாம் தவிர்க்க வேண்டும்?

4) உறங்கச் செல்லும் முன் நாம் என்ன செய்ய வேண்டும்?