Rathinamalai

ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

1. கேள்வி : ஜைன தர்மம் என்பது யாது? ஜைனர் எனப்படுபவர் யாவர்?
பதில் எவன் சை, கோபம், மயக்கம் (ராக, த்வேஷ, மோஹம்) என்னும் முக்குற்றங்களை நீக்கி, பசி தாகம் முதலாகிய பதினெட்டு தோஷங்களை நிவர்த்தி செய்து ஞானாவரணாதி எட்டு கர்மங்களை நாசம் செய்து அந்த ஞானாதி குணங்களையடைந்து, சமவசரணாதி விபூதியைப் பெற்று சகல ஜீவராசிகளுக்கும் நன்மை பயக்கும்படி உபதேசம் செய்தானோ அப்படிப்பட்ட தர்மோபதேச மொழிகளாகிய நற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்கம் (சம்யக்தா¢சனம், சம்யக்ஞானம், சம்யக்சா¡¢த்ரம்) என்னும் ரத்னத்ரயங்களைக் கடைப்பிடித்து நடப்பதே ஜைனதர்மம் கும். இதை குறைவில்லாமல் அனுஷ்டித்து நடப்பவனே ஜைனர் ஆவர்.

பதில் : இந்தி பாஷையில் ஸ்ரா + வ + க = ஸ்ரா = ஸ்ரத்தா நற்காட்சி, வ = விவேக் = நல்லறிவு, க = கி、யா = நல்லொழுக்கம். ஆகவே, இம் மும்மணியைக் கடைபிடிப்பவர்களே ஸ்ராவகர்கள் எனப்படுவர். ஸ்ராவகனும் ஜைனனும் ஒன்றே.

3. ஸ்ராவகர்களின் குணங்கள் யாவை? அவர்கள் எத்தனை வகையினர்?

பதில் : ஸ்ராவகர்கள் மூலகுணம், உத்திரகுணம் இவற்றைக் கடைப்பிடித்து பஞ்சபரமேஷ்டிகளின் குணங்களைச் சொல்லித் தலைவணங்குதலும், தானமளித்தலும் பூஜை செய்தலுமாகிய இவையே முக்கிய குணமாகும். மேலும் அறிவுமயமாகிய தர்மாமிருதத்தையே பானம் பண்ணப்பட்டவராவர். (ஸ்ராவகர்களின் வகைக் கீழ்க்கண்டவாறு:)

1) பாக்ஷ¢க் ஸ்ராவகன், 2) நைஷ்டிக் ஸ்ராவகன், 3) ஸாதக் ஸ்ராவகன் எனப்படுவர்.

1. பாக்ஷ¢க் ஸ்ராவகன் : நற்காட்சியுடன் எட்டுமூல குணங்களைக் கொண்டு ஏழு விஸனங்களை விட்டு பன்னிரண்டு விரதங்களை (முதல் ப்ரதிமா நியம ரூபத்தாலன்றி) அப்பியாசத்துடன் கடைபிடிப்பவன்.

2. நைஷ்டிக் ஸ்ராவகன் : 11 நிலைகளிலும் தோஷமின்றி ஒன்றிரண்டு அல்லது யாவற்றையும் கடைபிடிப்பவன்.

3. ஸாதக் ஸ்ராவகன் : சா£ரம் பற்றிய கர்வமும், நான்கு வகை ஆகாரமும், மனம், வசனம், காயம் மூன்றினாலும் ஏற்படக்கூடியவற்றையும் விட்டுவிட்டு தியான சுத்தத்தினால் பிராணன் நஷ்டமடையும் சமயம் தன் ஆத்மாவின் அந்தக்கரணத்தை (மனதை) சுத்தம் செய்பவன்.

4. ஸ்ராவகர்களின் மூல குணங்கள் யாவை?
பதில் :(i) சில நூல்களில் தேன், மாமிசம், கள் இம் மூன்றுடன் ஆல், அரசு, அத்தி, இரளி, கல்லத்தி இவ்வைந்தின் பழங்களையும் சாப்பிடாமல் விடுவது (8-மூலகுணம்) என்றும் (ii) வேறுசில நூல்களில் மது, கள்ளு, மாமிசத்துடன், கொலை, களவு, பொய், காமம், பா¢க்ரஹம் முதலிய எட்டும் விடுதலே அஷ்ட மூலகுணம் என்றும் (iii) மற்றுமொரு நூலில் அநுவிரங்களுடன் மது, மாமிசம், சூது முதலிய மூன்றையும் விடுதல் மூலகுணமென்றும் (iv) மற்றும் சில நூல்களில் மது, மாமிசம், கள், பஞ்சோதும்பரமும் சேர்ந்து ஒன்றாகவும் மற்ற இரவு போஜனம் செய்யாமை, தினசா¢ தேவ பூஜை, ஜீவகாருண்யம், வடித்த ஜலம் உபயோகித்தல் முதலியவை அஷ்டமூலகுணம் என்றும் சொல்லப்படுகின்றன.

5. ஸ்ராவகன் அனுஷ்டிக்க வேண்டியவை யாவை?
பதில் : நற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்கம் 3 மூலகுணம் 8-விரதம். 12-தபம், 12-சமநோக்கு, 1-நிலை, 11-தானம், 4-இரவுண்ணாமை, 1-வடித்த ஜலம் உபயோகம் முதலியன 53 ஆகும்.

6. ஜைன மதத்தில் கிரகஸ்தர்கள் இடவேண்டிய அறுவகை திலகங்கள் யாவை?
பதில் : அர்த்தசந்திராஹாரம் (அரைச்சந்திர உருவம்) முக்குடை, மானஸ்தம்பம், சிம்மாசனம், தர்மசக்கரம், தர்மசக்கரத்தினும் சிறியது. இவ்வுருவங்கள் போன்று நெற்றியில் இடவேண்டியது இவைகளில் அர்த்த சந்திராஹாரம், முக்குடை இவையிரண்டும் க்ஷத்¡¢யர்களுக்கு. குடை, மானஸ்தம்பம், சிம்மாசனம் மூன்றும் பிராமணர்களுக்கு குடையும் மானஸ்தம்பமும் வைசியர்களுக்கு. சூத்திரர்களுக்கு சக்கரத்தின் உருவம் திலகமிட வேண்டும்.

7. ஸ்நான விதிகள் யாவை?
பதில் : ஜிந பூஜை செய்ய இல்லறத்தான் தினந்தோறும் ஸ்நானம் செய்ய வேண்டும். முதலில் வடிஜலத்தால் ஸ்நானம் செய்து (சந்தியா வந்தனை) சுத்தமாகி புலனடக்கம், மெளனம் இவைகளைக் கொண்டு பகவானுக்கு பூஜை செய்தல், சாதாரண கிரகஸ்தன் கை, கால் சுத்தம் செய்து செளசம், தந்தசுத்தி, வாய் சுத்தி செய்து ஸ்நானம் செய்ய வேண்டும். பிறகு சுத்தமான வஸ்திரத்தை அணிந்து புனிதமுள்ள பொருள்களால் பகவானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். ஸ்நானம் ஐந்து வகையாகும். 1. பாதம் வரை கழுவுதல், 2. முழங்கால் வரை, 3. இடுப்பு வரை, 4. கழுத்து வரை, 5. சிரசுவரை கழுவுதலாம். பிரம்மசா、யானவன் விவசாயம் வியாபாரம் முதலிய தொழிலை விட்டு இவற்றில் எவ்வகையான ஸ்நானமும் செய்யலாம். ஆனால் ஆரம்ப இல்லறத்தான் கழுத்து வரை, (அ) சிரசுவரை (இரண்டே) ஸ்நானம் செய்ய வேண்டும்.
குறிப்பு : பூஜைக்காக சிரசுவரை ஸ்நானம் செய்தேயாக வேண்டும்.

8. இல்லறத்தான் மெளனம் கொள்ள வேண்டிய இடங்கள் யாவை?
பதில் : 1. போஜனம், ஜலம் குடிக்கும் போதும், 2. ஸ்நானம் செய்கையில், 3. மல ஜலம் கழிக்கையில், 4. ஸ்தி。 புருட சேர்க்கையில், 5. வாந்தி எடுக்கையில், 6. பூஜை சமயம், 7. சாமாயிக சமயம் மெளனம் கொள்ள வேண்டும்.

9. இல்லறத்தான் எவ்வெவ் கா、யங்களுக்கு பணம் செலவு செய்ய வேண்டும்?
பதில் : 1. ஜிநேந்திர பூஜை, 2. ஆலயம் கட்டுதல் (அ) புனருத் தாரணம், 3. தீர்த்த யாத்திரை, சத்சங்கம் நடத்துதல், 4. சத்பாத்திர தானம், முனி ஸ்ராவகர்கள், அவிரத சம்யக்திருஷ்டி, பக்தி பூர்வக அன்னம். அபயம், சாஸ்திரம், ஒளஷதம் தானம் செய்தல், 5. நல்லொழுக்கமுள்ள இல்லற தருமத்தார்க்கு, தனம், வஸ்திரம் முதலியன கொடுத்தல், 6. நோய், பசி, வறுமை இவைகளால் வருந்துபவர்களுக்கு, நால்வகை தானமளித்தல், 7. முனிகள், ஆர்யகை, சிராவக, சிராவகிகள், ஜினபிரதிமை, ஆலயம், சாஸ்திரம் இவைகளுக்கு தானம் செய்தல்.

10. ஜைனர்கள் சாப்பிடத் தகாத வஸ்துக்கள் யாவை?
பதில் : 1. ஆலங்கட்டி, ஆகாயத்திலிருந்து விழுவது, 2. உளுந்து (அ) பாசிப் பயிற்றால் செய்த வடையை தயிர் (அ) மோกขல் போட்டவை. (தயிர்-மோர் வடை), 3. இரவு போஜனம், 4. அதிக விதைகள் கொண்டவை. அரண்டங்காய் ஆமணக்காய் போன்றவை, 5. கத்தாขக்காய் உன்மத்தம் செய்ய வல்லது. 6. சத்தான 24-மணி நேரத்திற்கு மேல் ஊரப்பட்ட ஊறுகாய்கள், 7. ஆல், 8. அரசு, 9. அத்தி, 10. இரளி, 11. கல்லத்தி இவைகளின் பழங்கள், 12. பேர் தொขயாததும் முன்பின் அறியாததுமாகிய பழங்கள், 13. கந்த மூலங்கள் (கிழங்கு வகைகள்), 14. மண்ணிற்குள் பயிராவன, 15. விஷம், 16. மாமிசம், 17. தேன், 18. வெண்ணெய், 19. சாராயம், 20. மிகச் சிறிய பழங்கள் (காளாகுறிஞ்சி போன்றன), 21. ஐஸ், 22. சாதத் தண்ணீர். பழரசங்கள் முதலியன. இவைகள் (அபஷ) சாப்பிடத்தகாத வஸ்துக்களாம்.

11. முனிவர்கள் இல்லறத்தார்கள் தினசாข செய்யத்தக்க அவஸ்யமான கிกขயைகள் யாவை?
பதில் : முனிவர்கள் 1. சாமாயிகம், 2. பிரதிக்ரமணம், 3. பிரத்யாக்யாணம், 4. ஸ்துதி, 5. வந்தனை, 6. காயோத்ஸர்க்கம் முதலியன.

இல்லறத்தார்கள் : 1. தேவ பூஜை, 2. குரு பக்தி, 3. ஸ்வாத்யாயம், 4. சம்யமம், 5. தபம், 6. தானம் முதலியனவாம்.

12. இல்லறத்தார்கள் தினம் ஆலோசிக்க வேண்டிய நியமங்கள் யாவை?
பதில் : இன்று இத்தனை முறைதான் சாப்பிடுதல் 1. அறுவகை ரசங்களில் ஒன்றை நீக்குவது, 2. போஜனம் இன்றி நீரை எத்தனை முறை பருகுவது, 3. எண்ணெய் தடவிக் குளித்துக் கொள்ளுமுன் தைலத்தை எத்தனை முறை பூசிக்கொள்வது, 5. தாம்பூலம் எத்தனை தரம் உபயோகப்படுத்துவது தா¢ப்பது, 6. உலக சம்பந்தப்பட்ட சங்கீதம் கேட்கலாமா கேட்கக் கூடாதா, 7. நாட்டியம் பார்க்கலாமா, கூடாதா, 8. இன்று பிரம்மசரியத்துடன் இருக்கலாமா, 9. இத்தனை முறைதான் ஸ்நானம் செய்வதும், 10. இத்தனை வஸ்திரம்தான் உடுத்துவது, 11. இத்தனை ஆபரணங்கள்தான் அணிவது, 12. எந்தெந்த வாகனங்களின்மீது சவா¡¢ செய்வது, 13. தூங்குவதற்கு எத்தனை பலகை உபயோகிப்பது, 14. அமருவதற்கு எத்தனை பென்ச் நாற்காலிகள் உபயோகிப்பது, 15. உயிருள்ள வனஸ்பதி இத்தனைதான் உபயோகிப்பது, 16. சகல உணவிலும் பிறவஸ்துக்கள் இவ்வளவுதான் வைத்துக்கொள்வது, 17. எத்தனை வீடு எத்தனை §க்ஷத்திரங்கள் போய் வருவதென்று இம்மாதி¡¢யான 17-நியமங்களையாவது கடைபிடித்தல் நல்லது.

13. மக்களுக்கு சிற்றின்பம் உண்டாவதற்கான காரணங்கள் யாவை?
பதில் : 1. சா£ரத்தை அழகு செய்தல், 2. கெட்ட எண்ணத்துடன் ஸ்ருங்காரரச வார்தையாடல், 3. ஹாஸ்ய விளையாட்டு, 4. சகவாச விருப்பம் பயம், 5. பஞ்சேந்தி¡¢யங்களையும் உணர்ச்சி வசமாக்கல், 6. கெட்ட எண்ணத்துடன் ஸ்தி¡£களின் சா£ரத்தைப் பார்த்தல், 7. சா£ர அலங்காரம், 8. நட்பு பெருக பரஸ்பரம் தானமளித்தல், 9. முன்னர் அனுபவித்த போகத்தை சிந்தித்தல், 10. மனதில் சிற்றின்ப எண்ணம் எண்ணுதல் போன்றன.

14. பருகுவதற்கு உ、ய பதார்த்தங்கள் யாவை?
பதில் : கனபதார்த்தம் –
தயிர் முதலிய கெட்டியான வஸ்துக்கள்,
திரவ பதார்த்தம்
பழரசம், மோர், வென்னீர் முதலியன
பசையுள்ளவை
ஒட்டக் கூடியதும், லேசானதும்,
பசையில்லாதவை
ஒட்டக்கூடாத பதார்த்தங்கள்.
நொய்கஞ்சி, பருக்கை இல்லாத கஞ்சி முதலியன.

15. அதமாதம புருஷர்களின் லக்ஷணம் யாவை?
பதில் : 1. நல்லோர்களைக் கண்டு கோபித்தல், நல்லோர் வார்த்தையை நிந்தித்தல், நல்லோரைத் தீயோர் என்றல், உண்மையில் வினயமுடையவனை முகஸ்துதி செய்வோன் என்பது, இந்தி、யங்களை வென்றவனை துர்பாக்கியன் என்பது ஸ்தி。 புருஷ சுகத்தில் மூழ்கியுள்ளவர்கள் முதலியன.

16. பூணூல் அணிபவாขடம் அமைந்திருக்க வேண்டிய குணங்கள் யாவை?

பதில் : தருமத்தில் திட நம்பிக்கையுள்ளவன் சின்னம் பூணூல். இதை அணிவதற்கு வேண்டிய குணங்கள் : 1. நாநாவித விசேஷ குணங்களில் மிக்கவன், 2. மன்னிக்கும் குணம், 3. கொடுக்கப்படாத பொருளில் நாட்டமின்மை, 4. மூல குணங்கள் 8-ம் கடைப்பிடித்தல், 5. பேராசையின்மை, 6. நல்ல ஆச்சாரம் பூஜை, ஜபம், தபம், புலனடக்கம், தகாத உணவு, பானம் அருந்தாமை, 7. தரையின் மீது மெதுவாக பார்த்துச் செல்லுதல், போஜன சமயம் மெளனம் கொள்ளல் 8 சீலவானாக இருத்தல், 9. துறவு மனப்பான்மை முதலியன.