வர்த்தமான மஹாவீரரும், ராட்சதனும் (Vardhamana and the Monster)

பாடம் 5

வர்த்தமான மஹாவீரரும், ராட்சதனும்

ஒரு மதிய வேளையில் இளவரசன் வர்த்தமானன் தனது நண்பர்களுடன் “பிடி, சவாரி செய்” விளயாடிக் கொண்டிருந்தான். இவ்விளையாட்டில் வெற்றி பெருபவர், தோல்வியுற்றவரின் முதுகில் ஏறிச் சவாரி செய்வர். அப்போது ஒரு புதிய சிறுவன் வந்து விளையாட்டில் சேர்ந்து கொண்டான். அச்சிறுவனை பிடிப்பது அனைவருக்கும் மிக எளிதாக இருந்தது. ஓவ்வொரு முறையும் அவன் தோல்வியூற்றான். கிட்டத்தட்ட அனைத்து சிறுவர்களுக்கும் அவனின் முதுகில் சவாரி கிடைத்தது. வர்த்தமானனும் அவனது முதுகில் சவாரி செய்தான்.

சில நிமிடங்களிக்குப் பிறகு…

வர்த்தமானன் அச்சிறுவனின் முதுகில் சவாரி செய்து கொண்டிருக்கும்போது, அச்சிறுவன் பெரிதாகவும், உயரமாகவும் வளர ஆரம்பித்தான். இதனை வர்த்தமானனின் நண்பர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருன்ந்தனர். பின்னர் அச்சிறுவனின் முகம் கோரமாக மாறத் துவங்கியது. பிறகுதான், அவன் வர்த்தமானனை தாக்க வந்த ராட்சதன் என்பது விளங்கிற்று. வர்த்தமானனின் நண்பர்கள் அனைவரும் பயந்து போய், பீதியுற்று ஓடத்துவங்கினர். சிலர் பயதில் மரங்களின் மீது ஏறிப் பதுங்கினர், மற்ற சிலர் தங்கள் பெற்றோரிடம் கூற ஓட்டம் பிடித்தனர். இவ்வளவு குழப்பத்திற்கிடையேயும், வர்த்தமானன் அமைதியாகவும், தைரியமாகவும் இருந்தான். அந்த ராட்சதன் கிடு கிடுவென்று உயரமாக வளர, வர்த்தமானன் அவனது தலையில் தன் கைகளினால் தாக்கினான். அவனின் அபார பலத்தினால் வலி தாங்காமல் அந்த ராட்சதன், வர்த்தமானனை தனது முதுகில் இருந்து கீழே வீச முயன்றான், ஆனால் முடியவில்லை.

கடைசியில் ராட்சதன் தப்பிக்க இயலாமல், வர்த்தமானனிடம் தன்னை மன்னிக்குமாறு கெஞ்சினான். வர்த்தமானனும் அந்த ராட்சதனை மன்னித்து விடுவித்தான். அந்த ராட்சதன், வர்த்தமனனை “மஹாவீரர்” என்று வாழ்த்தி மண்டியிட்டான். அதன் பிறகு இளவரன் வர்த்தமானன் “மஹாவீரர்” என்றே அழைக்கப்பட்டார்.

கேள்விகள்:

1) வர்த்தமானனும் அவனது நண்பர்களும் என்ன விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்?

2) வேறு எவரேனும் அவர்களுடன் விளையாட்டில் கலந்து கொண்டணரா?

3) புதிய சிறுவன் வர்த்தமானன் தன் முதுகில் ஏறிச் சவாரி செய்யும்போது என்ன செய்தான்?

4) ராட்சதனை வர்த்தமானன் என்ன செய்தான்?

5) வர்த்தமானன் ஏன் “மஹாவீரர்” என அழைக்கப் படுகிறார்?