காலை வணக்கம் (Morning Prayer)

பாடம் 2

காலை வணக்கம்

நான் காலையில் விழித்தவுடன் முதலில் – அமர்ந்து, கண்களை மூடி, மனத்தை ஒருங்கிணைத்து, கைகளை குவித்து பஞ்ச மந்திரத்தை ஐந்து முரை சொல்லுவேன்

நமோ அரிஹந்தாணம்

நமோ ஸித்தாணம்

நமோ ஆயிரியாணம்

நமோ உவஜ்ஜாயாணம்

நமோ லோயே ஸவ்வ ஸாஹூணம்

ஏஸோ பன்ச நமோக்காரோ, ஸவ்வ பாபப் பனாஸனோ

மங்களானன்ச ஸவ்வேஸிம், பதமம் ஹவயி மங்களம்.

அடுத்து, பின் வருவனவற்றை எனக்கு நானே நினைவுபடுத்திக் கொள்வேன்:

அனைவரிடமும் இனிமையாகப் பழகுவேன்

யாரையும் புன்படுத்த மாட்டேன்

யாரிடமும் கோபப்பட மாட்டேன்

பொய் கூற மாட்டேன்

அடுத்தவரை இழிவுபடுத்த மாட்டேன்

தற்புகழ்ச்சியில் ஈடுபட மாட்டேன்

எல்லா உயிரினங்களையும் மதித்து நடப்பேன்.

கேள்விகள்:

1) காலையில் எழுந்தவுடன் நாம் சொல்லும் மந்திரத்தின் பெயர் என்ன?

2) காலையில் நமக்கு நாமே நினைவுபடுத்திக் கொள்ளவேண்டியவை எவை?

3) இந்த எண்ணங்கள் நமக்கு எந்த விதத்தில் உதவுகின்றன?