முகப்பு வாயில்

 


1. அகர முதல எழுத்தெல்லாம்; ஆதி
பகவன் முதற்றே உலகு.

2. கற்றதனால் ஆய பயன்என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

3. மலர்மிசை ஏகினாள் மாண்அடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

4. வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

5. இருள்சேர் இருவினையும் சேரா: இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

6. பொறிவாயில் ஐந்துவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

7. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

8. அறஆழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறஆழி நீந்தல் அரிது.

9. கோளில் பொறியில் குணம்இலவே; என்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர்; நீந்தார்
இறைவன் அடிசேரா தவர்.
. . . .

"மன்னியபே ருலகனைத்தும்
நின்னுள்ளே நீயொடுக்கினை
நின்னின்று நீவிரித்தனை
நின்னருளின் நீகாத்தனை என வாங்கு,

ஆதிபகவனை யருகனை
மாதுயர் நீங்க வுழுத்துவம் பலவே"
-திருக்கலம்பகம்.

"ஆதிபகவன் அசோக வசலன்
சேதிய முதல்வன் சினவரந் தியம்பகன்"
-திருப்பாமாலை.

"அத்தனே என்னை ஆளீர் சரணம்
ஆதி பகவன் அருளே சரணம்"
-தோத்திரத்திரட்டு

1. வெள்ள மாரி தாத்தோய்நீ
வினையின் வாயில் அடைத்தோய்நீ
உள்ள மாட்சி யுடையோய்நீ
யுயப்போம் வண்ணம் உரைத்தோய்நீ
நள்ளென் யாமத்து யான்செய்த
நவைக ளெல்லாம் நனிகண்டும்
எள்ளலில்லாப் பொயோய்நின்
இணையில் பாதம் அணைவல்யான்.

2. மூட மூன்றும் உரைத்தோய்நீ
முரண்செய் தோற்றம் முனிந்தோய்நீ
வீடும் கட்டும் விரித்தோய்நீ
வினையின் இன்பம் வெறுத்தோய்நீ
காடு கிளர்ந்து காட்டியான்
கலக்க வொன்றுங் கலங்காத
பாடற் காய பொயோய்நின்
பழிப்பில் பாதம் பணிவல்யான்.

3. அல்லல் பிறவி அகன்றோய்நீ
ஆசை வெவ்வோர் அறுத்தோய்நீ
வெல்லற் காய வனங்கனைமெய்
வெண்ணீ றாக வெகுண்டோய்நீ
கொல்லக் கருதி வந்தோனைக்
குணங்க ளாவே வணங்குவித்த
சொல்லற் காய பொயோய்நின்
தோமில் பாதம் தொழுவல் யான்.
(வேறு)

4. அரிய வாயின செய்திட்(டு)
அமரர் துந்தபி யறைந்து
புரிய பூமழை பொழியப்
பொன்னெயில் மண்டிலம் புதைந்த
விரிகொள் தண்டளிர்ப் பிண்டி
மரநிழ லிந்திரு வினையும்
பிரியும் பெற்றியை யுரைத்தாய்
பொயவர் பொயவர் பொயாய்.

5. கண்ணினா லொன்றுங் காணாய்
காணவும் உளபொரு ளொருங்கே
பெண்ணு மல்லவுஞ் சாராய்
பிரிதலில் போன்ப முடையை
உண்ணல் யாவதும் இலையாய்
ஒளிதிகழ் உருவம துனதால்
எண்ணில் யார்நினை யுணர்வார்
இறைவர்தம் மிறைவர்க்கும் இறைவா.

6. அன்மை யாரவர் தாந்தாம்
அறிந்தன வுரைத்தபொய் யாக்கி
நின்மெ யாகிய ஞான
நிகழ்ச்சி நீவிரித் துரைத்த
சொன்மை யாரிடை தொந்தார்
தொடர்வினை முழுவதும் சுடுநின்
தன்மை யார்பிற ரறிவார்
தலைவர்தந் தலைவர்க்குத் தலைவா.
-நீலகேசி

!

1  2  3  4  5  6  7  8  9  10


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com