முகப்பு வாயில்

 


இவ்வறிவனைப் போற்றாத இந்திய இலக்கியங்களே இல்லை என்னலாம். திருக்குறளாசிரியர் ஆதிபகவன் எனப் போற்றியுள்ளதும் இவ் வறிவனையேயாகும். தொல்காப்பியத்தில் காணப்படும் கந்தழி எனும் கடவுளும் இவரே. கந்தழி என்பது பற்றற்வர் எனப் பொருள்படும். நிக்கந்தம் எனும் பிராகிருத மொழியின் மொழிபெயர்ப்பே கந்தழி என்பது. சிலப்பதிகாரத்தில் நிக்கந்தக் கோட்டம் என வருவதாலும் அறிக. எனவே பரதகண்ட முழுமையும் பகவான் விருஷப தேவரை முதற் கடவுளாகவும், முதல்தலைவராகவும், முதல் ஆசிரியராகவும் போற்றி வந்துள்ளனர். நமது இந்திய நாட்டின் உதவி ஜனாதிபதியாய் விளங்கும் தத்துவப் பேராசிரியர் டாக்டர் இராதா கிருஷ்ணன் அவர்கள் தாம் எழுதிய 'இந்திய தத்துவங்கள்' என்னும் நூலில் பகவான் விருஷபதேவர், ரிக்வேதம், பாகவதம் போன்ற வைதிக நூல்களில் போற்றப்பட்டுள்ளாரென்றும், கி.மு. முதல் நூற்றாண்டில் பகவான் விருஷப தேவரை மக்களனைவரும் வழிபட்டு வந்தனர் என்பதற்குரிய ஆதாரங்கள் நிறைய இருக்கின்றன வென்றும் எழுதியுள்ளார். இவ்வறிஞா˘ன் வரலாற்றுரையால் கி.மு. முதல் நூற்றாண்டின் பல்வேறு மதங்கள் ஏற்பட்டு வந்தாலும் பகவான் விருஷப தேவரை அனைவரும் மதவேறுபாடின்றி அறத்தின் சின்னமாய்ப் போற்றி வந்தனர் என்பது நன்கு விளங்குகிறது. ஏதோ இடைக்காலத்தில் ஏற்பட்ட சமயப் பூசல்களால் மக்களுக்குள் பிளவுகள் ஏற்பட்டு உட்பகை வளர்ந்துவிட்டது. சகோதர உணர்ச்சி சாம்பிப் போயிற்று அன்பின் வழியதாயுள்ள உயிர் நிலை வன்பகைக் கிடனா யமைந்து விட்டது! நடு நிலைமை நாசமடைந்து வஞ்சனையும் பொறாமையும் வளம் பெற்று விட்டது.

இந்நிலை மக்கள் சமுதாயத்திற்கும் பண்பாட்டிற்கும் அழிவைத் தேடுவதாகும். மதமோ சமயமோ நாம் பிறக்கும்போது நம்முடன் கூடிப் பிறந்தவையல்ல. நமது தாய் தந்தையர் மேற்கொண்டுள்ள கொள்கைகளைப் பின்பற்றி வருகிறோமே யன்றி வேறில்லை. அறிவின் திறத்தால் ஆராய்ச்சியின் முடிவால் அனுபவத்தின் இயல்பால் நாம் நமது அறிவிற்கும் மக்கள் நல மேம்பாட்டிற்கும் ஒழுக்கத்திற்கும் சிறந்த வழியாகவுள்ள கொள்கைகளைத் தழுவிக் கொள்ளலாம். எனவே மதமும் சமயமும் நம்மைக் கட்டுப் படுத்துபவை யல்ல வென்பதையும் நன்கு உணரவேண்டும்.

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு"

என்பது தமிழ் மறையன்றோ! நமது நாட்டு மதப் பூசல்களின் வரலாற்றைப் படித்தால் நாம் எத்தனை மதங்களைத் தழுவியும் வழுவியும் வந்துள்ளோ மென்பதும் தொ˘யும். எனவே நாம் எம்மதத்தைச் சார்ந்தவராயினும் பண்டைய காலம் போலவே உலக முதல் தலைவராகவும், உலக முதல் ஆசிரியராகவும், உலக முதல் உபதேசராகவும், உலக முதல் முனிவராகவும், உலக முதல் சித்தராகவும் (வீடுபேறு பெற்றவர்) விளங்கும் ஆதிபகவனை (பகவான் விருஷப தேவர்) வழிபடச் சமணர் மலை செல்வோம்! சைவ சமயத்தவராயினும், வைணவ சமயத்தவராயினும், புத்த மதத்தினராயினும், சீக்கியராயினும், கிறிஸ்துவராயினும், இஸ்லாமியராயினும் வேறு எக்கொள்கைகளையுடைவராயினும் அனைவரும் அப்பெருமகனை வழிபடலாம். அவ்வாறு அனைவருக்கும் அவ்வறிவன் முதல்தலைராய் விளங்குவதனாற்றான் அவ்வறவோனின் உருவச் சிலைகளைத் திறந்த வெளிகளில் மலைகளிலும், குன்றுகளிலும், பாறைகளிலும் மற்றும் பல வெளியிடங்களிலும் அமைந்துள்ளனர். ஆதி பகவன் திருவறம் மன்னுயிர் அனைத்திற்கும் அரண்செய்வ தாகையால் மக்களேயன்றி விலங்கினங்களும் அவ்வறவாழி வேந்தனை வழிபட்டு அறங்கேட்டன வென்பதைக் திருக்கலம்பக ஆசிரியர்,

"அடல்விடங் கொள் பாதபங்கள் அமிர்தீனுங் காலம்
அரியுனொடு கா˘யுமிருந்(து) அறங்கேட்குங் காலம்
குடா˘டங்கொள் பசியினொடு பிணிநணுகாக் காலம்
குறைந்தபொறி நிறைந்தெவருங் குணம்புரியுங் காலம்

கடல்கிளர்ந்த தெனவுலகுத் தொடர்ந் திறைஞ்சி ஏத்தக்
கடிக்கமல மடிக்கமல மேந்தத் தொல்லை
இடர்கடந்த கருணைமுகில் விசும்பிலெழுங் காலம்
எம்மனமும் காமனம்புக் கிடருழலாக் காலம்"

என்றார், சீவக சிந்தாமணியில் பகவான் அறங்கூறும் சமவசரணம் எனும் பேரவையை வருணிக்கையில்,

"பிண்டியின் கொருநிழல் பிறவி நோய்கெட
விண்டவர் கணைகதிர் வீரன் தோன்றினான்
உண்டிவண் 'அறவமிர்தம்' உண்மி னோவெனக்
கொண்டன கோடணை கொற்ற முற்றமே"

என்றார். இங்கேயும் மக்களனைவரும் சாதிமத வேறுபாடின்றி 'அறவமிர்தம் உண்ண வாĄŁர், அறவமிர்தம் உண்ணவாĄŁர்'என ஆரவாரத்துடன் கூடி அறங்கேட்கச் சென்றனர் எனக் கூறப்பட்டுள்ளது.

ஜைன அறவோர் மக்கள் பண்பாட்டைச் செம்மைப்படுத்தி உலகில் சமாதனத்தையும் சகோதர உணர்ச்சியையும் நிலவச் செய்யவேண்டும் மென்பதையே குறிக்கோளாகக் கொண்டவர்களாகையால் எங்கும் அருளறத்தையே வற்புறுத்தியுள்ளார்கள். இலக்கியங்களில் மட்டுமின்றி மலைகளிலும் பாறைகளிலும் கூட "அறம் மறவற்க" "அறமல்லது துணையில்லை" எனப் பொறித்து வைத்துள்ளார்கள். சீவக சிந்தாமணி ஆசிரியர் திருத்தக்க தேவர் தமது இணையற்ற இலக்கியத்தின் முடிவுரையில்,

"எங்குள அறத்தினோரும் இனிதூழி வாழ்க" என வாழ்த்தும் வாழ்த்துரை நமது உள்ளத்தே நின்று ஊஞ்சலாடிக் களிக்கின்றது. எந்நாட்டவராயினும், எம்மதத்தினராயினும், அறத்தின் வழி நிற்றல் வேண்டுமென்பதே தேவர்தம் திருவுள்ளம்.

அறவுரைகள்

அறிவெனப் படுவது துன்பந் துடைத்தல்
செறிவனப் படுவது மும்மையுஞ் செறிதல்
ஆண்மை யெனப்படுவது தைம்புலன் வென்றல்
கேண்மை யெனப்படுவது கேட்டிடத் துதவல்
அருமை யெனப்படுவ தறநெறி வழுவாமை
பெருமை யெனப்படுவது பிறனில் விழையாமை
அறமெனப் படுவதாருயி ரோம்பல்
உறவெனப் படுவ துற்றுழி நிற்றல்
வாய்மை யெனப்படுவது வருந்தா துரைத்தல்
தூய்மை யெனப்படுவ துள்ளந் தூய்மை
இன்பமெனப் படுவது ஈறி லின்பம்
அன்பெனப் படுவ தார்வ முடைமை
தவமெனப் படுவ தைம்புலம் வெறுத்தல்
வதமெனப்படுவது கொல்லா விரதம்.
-ஜீவஸம் போதனை

"விரையார் மலர்மிசை வருவார் திருவறம் விழைவார்
கொலையினை விழையார்பொய்
யுரையார் களவினை யொழுகார் பிறர்மனை யுவவார்
மிகுபொருள் உவவார்வெஞ்
கரையால் உணர்வினை யழியார் அழிதசை துவ்வார்
விடமென வெவ்வாறும்
புரையார் நறவினை நுகரார் இரவுணல் புகழார்
குரவரை இகழாரே"
-திருக்கலம்பகம்

அறிஞர் பெருமக்களே!

இத் திருவறங்கள் இல்லறத்தாருக்கென ஆதி பகவனால் அருளப்பெற்றவை, உலகில் சகோதர உணர்ச்சி பரவ, சமரசம் விளங்க, அன்பும் அறனும் வளர, சமாதானம் நிலவ, பொருளாதார சமத்துவ மோங்க, உலக மூடம், தேவமூடம், பாசண்டி மூடம் ஆகிய மும்மூடங்களும் அகன்று மக்களிடையே நல்லறிவும் நல்லொழுக்கமும் நிலைபெற மேற்கண்ட பேரறங்களே துணைசெய்யும். எனவே இந்நல்லறங்களைத் திருவாய் மலர்ந்தருளிய ஆதிபகவன் (பகவான் விருஷபதேவர்) அருங்குணங்களைத் திருக்குறளாசிரியர் போற்றும் குறட்பாக்களைக் கொண்டு நாமும் மனமொழி மெய்களால் சமணர் மலை அறவாழி வேந்தனை வாழ்த்தி வணங்குவோம்.

1  2  3  4  5  6  7  8  9  10


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com