முகப்பு வாயில்

 


கருணாகரன்: நம்முடைய ஊரில் கன்றுபோல ஒன்றைக் கொண்டுவந்து பசுவின் எதிரில் வைத்துப் பால் கறக்கின்றார்களே, அதென்ன?

தாயார்: அப்பப்பா! அதைக் கேட்காதே. அந்தப் பாவிகள்தாம் கன்றுக்குப் பால் கொடாத பாவிகள். பணத்தாசையால் கன்றைக் கொன்று அதனால் வைக்கோலை அடைத்தூப் பசுவை ஏமாற்றிப் பால் விற்றுக்காசு பறிக்கும் கன்னெஞ்சர்கள்.

கருணாகரன்: அப்படியா, அம்மா, நம் ஊரில் அத்தகைய பாவிகளிடம் பால் வாங்கக்கூடாதம்மா.

தாயார்: ஆமாம், அதுதான் நியாயம்.

கருணாகரன்: சா சா, அம்மா ஆட்டின் பாலிலும் தயிர், மோர், நெய் முதலியவை உண்டாகுமா?

தாயார்: நம்முடைய ஊரில் தயிர், மோர், நெய் முதலியவைகள் விற்பதெல்லாம் அநேகமாக ஆட்டின் பாலிலுண்டானவைகளே யாகும்.

கருணாகரன்: சா சா, அம்மா, பால் நன்றாய்த்தா னிருக்கிறது. நம்முடைய பசியை ஆற்றிக்கொள்ளக்கூடக் கடவுள் பசு, எருமை, ஆடுகளையும் படைத்திருக்கின்றார் பார்த்தீர்களா?

தாயார்: ஆமாம், நமக்கு நன்மையைப் புரியும் பொருட்டே தொண்டர்களாக இவைகளை நம்முடைய சமூகத்திலேயே வாழும்படி கடவுள் விட்டிருக்கிறார் ஆகையினாற்றான் அவைகளுக்குப் 'பொன்னுலகநாதனின் பூவலகத் தொண்டர்கள்' என்ற பெயர் வழங்குகின்றது.

கருணாகரன்: ஆமாம்மா! ஆடுகளை வணங்குவதுண்டா?

தாயார்: உண்டு. சேவலங் கொடியோனாகிய சுப்பிரமணியன் ஆட்டை வாகனமாகக் கொண்டிருக்கின்றான். அதனாலேயே அவனுக்குத் 'தகரேறிய தயாநிதி' என்றும் மறுபெய ருண்டு. ஆகையால் ஆட்டையும்யாவரும் வணங்குகின்றார்கள்.

கருணாகரன்: சா அம்மா, பசுவைத் தெய்வமெனப் போற்றுவது போலவே நானும் ஆடுகளையும் போற்றுகிறேன். எருதுகளும் எருமைக்கடாக்களும் நம்முடைய ஊரில் வண்டிகளிழுக்கின்றதைப் பார்த்திருக்கின்றேன். காலையி லெழுந்தியிருப்பதுமுதல் மனிதர்களாகிய நமக்குக் கோழி, பன்றி, மீன், ஆடு, எருமைக்கடா பசு முதலிய எளிய பிராணிகள் சாந்தமாக வெகு சுறுசுறுப்புடன் ஏவுவாரின்றியே பிரதி உபகாரங்கள் எதிர்பாராது தங்கள் தங்கள் தொண்டுகளை ஆற்றிக் கொண்டு வருகின்றன. தொண்டர்களென்றால் இவைகளைப் போன்றல்லவோ இருக்கவேண்டும். இவைகளுக்கு என்ன கைம்மாறு செய்தாலும் இணையாகாது.

தாயார்: கைம்மாறா! ஐயோ அவைகளுக்கு உபகாரம் செய்யாவிட்டாலும் அபகாரம் செய்யாமலிருந்தால் போதாதா. சொல்லவும் நா வரவில்லையே! தினந்தோறும் மனிதப்பாவிகனுள் இந்தப் பிராணிகளின் பரோபகராத் தொண்டினைச் சற்றும் பாராது, ஒரு பிடி சாம்பலாய் அழிந்து போகும். இந்த நாற்ற உடற்கட்டையப் பெருக்க ஆயிரக்கணக்கான ஜீவன்களை அவை அம்மம்மா! என்று கதறக் கதறக் கொன்று கொன்று தின்று வாழ்கிறார்களே!

கருணாகரன்:
ஐயையோ, கொன்றுவிடுகிறார்களா! (காதை மூடிக்கொண்டு) கேட்கக் கேட்க மனம் பதைக்கின்றதே. சீச்சீ, என்ன மனிதர்! அப்பப்பா! கொடுமையா, கொலையா, ஐயோ, திக்கற்ற பிராணிகளையா கொன்று தின்கிறார்கள். அந்தோ!கடவுளே, உன்னுடைய அம்ஸமாக உன்னுடைய ஆக்கினையைத் தவறாது நிறைவேற்றும் தொண்டர்களைக் கொல்லுகின்றார்களே! உங்களுக்குத் தொயவில்லையா? ஐயோ, அம்மா, என்ன செய்வேன்! அவைகளின் நன்மைகளை நேலே அனுபவித்துக் கண்ட நான் அவைகளுக்கு நேரும் கொடுமையைக் கேட்டு இனி உயிர்வாழ விரும்பேன். அம்மா, இந்த உபகார ஜீவன்கள் என் கண் எதிரில் துன்பப்பட்டால் நான் சகித்து உயிர்வாழ முடியாது. அந்தோ பாவம்!

தாயார்: பொறு பொறு, உனக்குமேல் எனக்கும் ஆத்திரமும் துன்பமு முண்டாகின்றன. என்ன செய்வது இது மாத்திரமா, அஞ்ஞானத்தால் தெய்வத்தின் பேராலேயே இவைகளைப் பலியிடுகின்றார்களே.

கருணாகரன்: தூத்தூ, ஐயையோ, உடம்பு சிலிக்கிறதம்மா. பாவம், யாருங் கேட்பாரில்லையா? ஐயோ மனிதர்களே, நம்முடைய இளமைச் சகோதரர் பால் தயையில்லையா? தொண்டர் கூட்டங்களே! இயற்கைத் தொண்டர்களாகிய கோழி, பன்றி, மீன், ஆடு முதலியவை மனித சமூகத்தால் அழிகின்றனவே, பார்த்தீர்களா? உங்கள் ஊமைச் சகோதரத் தொண்டர்களல்லவா? சட்டசபை அங்கத்தினர்களே, தூங்குகின்றீர்களா? ஏவாது தொண்டியற்றும் இயற்கைக் குண்டுகளும், தோட்டிகளும், தெய்வத்தின் பேரால் மதத்தின் பேரால் மாள்கின்றனவே, இவைகளுக்காக ஒரு சட்டம் கொண்டு வரப்படாதா? அந்தோ, தெய்வம் பாலிகேட்குமா? என்ன அநியாயம், கோயிலில் கொலைபுரியும் ஜாதி நாம்தாமா? ஆசார சீர்த்திருத்தக்காரர்களே, வைதீகர்களே, கோயிலைக் கொலைக்களமாக்கப் பார்க்கின்றீர்களா? தெய்வத்திற்குக் கண்ணில்லையே, ஐயோ, எமனே! இந்தக் கொடுமையைக் காதினால் கேட்ட என்னை நேரே அக்கொடுமையைப் பார்க்குமுன் கொன்றுவிடு. இதோ இந்தப் பாழுங் கிணற்றில் விழுந்து சாகிறேன்.
(ஓடுகிறான்)

தாயார்: ஐயையோ, என் செல்வமே, என் செல்வமே, என் செல்வமே! அப்பா, அப்பா! ஐயோ, ஜனங்களே! ஓடிவாருங்கள்; பையன், பையன்! கிணறு, கிணறு!

(கூக்குரலைக் கேட்ட ஜனங்கள் ஓடி வந்து பையனைப் பிடித்துக் கொண்டார்கள்.)

ஜனங்கள்:- என்ன, என்ன! ஏனப்பா அழுகிறாய் அம்மா, என்ன செய்தாய்?

கருணாகரன்: அம்மா ஒன்றும் செய்யவில்லையே ஐயோ! பாவம்! நமக்குப் பல விதத்திலும் நன்மையைச் செய்யும் இயற்கைத் தொண்டர்களான நம்முடைய இளமைச் சகோதரர் போன்ற ஊமைப் பிராணிகளை மனிதர்கள் கொல்லுகின்றா ரென்பதைக் கேட்டு இந்த உலக வாழ்க்கையில் வெறுப்புற்றேன். சாகத் துணிந்த விட்டேன். வேறொன்றுமில்லை என்று இன்று காலையிலிருந்து தான் அனுபவித்துக் கண்ட அந்த ஜீவன்களின் பயனை அங்குள்ள ஜனங்களுக்கு விவரமாக எடுத்துக்கூறியதோடு கொல்லாவிரதத்தின் மேன்மையைப் பற்றியும், கொலையின் இழிவைப் பற்றியும், அவ்வாறு கொல்பவர் அநுபவிக்கும் நரக வேதனையைப் பற்றியும், மாமிச உணவு மனித ஆகாரமல்ல வென்றும், மரக்கறியே மனித உணவு என்பதை விளக்கியும், பலியிடுவது பயனற்ற வழக்கமென்பதை ரூபித்தும் உபந்யாசம் செய்தேன்.

அதைக் கேட்ட அங்கிருந்த பொயோர்களெல்லாம் இந்தச் சிறுவனின் உண்மை உணர்ச்சியையும் தெய்வ பக்தியையும் கண்டு, 'நாம் இவ்வளவு வயது முதிர்ந்தவர்களாகியும் இந்தச் சிறுவனுக்கிருக்கும் கருணை, பாதாபம், ஜீவகாருண்யம் நமக்கில்லையே சீ, இந்த மாமிசத்தால் ஆவதென்ன பலி கொடு, கொடுஎன்று தெய்வம் வந்துகேட்டதா? நம்முடைய முளையற்ற மூடக் கொள்கையால் இதுவரை நடந்துவிட்டோம். இன்று முதல் இவைகளை விட்டுவிடவேண்டும்' என்று உண்மை உணர்வுகொண்டு எல்லோரும் கடவுள் சாட்சியாக இனி நாங்கள் மாமிசம் உண்பதையும், தெய்வத்திற்குப் பலி கொடுப்பதையும் விட்டுவிட்டோம் என்று சத்தியம் செய்துகொண்டார்கள், கருணாகானும் அளவிலா மகிழ்வெய்தி ஆனந்தக் கடலில் களித்திருந்து அஹிம்ஸா பிரசாரகனாக மாறிப் பல கிராமங்களுக்கும் சென்று தான் கண்ட உண்மையைப் பிரசங்கித்துவந்தான்.
 

1  2


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com