Ӹ š¢

 


உலகம் புகழும் பாலிடானா யாத்திரை


சென்னை தென்னிந்திய ஜீவரக்ஷ பிரசாரசபை

சொற்பொழிவாளர்,
T.S. ஸ்ரீபால் ஜெயின் அவர்கள் எழுதியது.

1937.

முகவுரை

உலகெங்கும் போற்றும் பாலிடானா யாத்திரையின் அற்புத காட்சியை அடியேன் நேரே கண்டு அளவிலா ஆனந்தமடைந்தேன். இவ் அரிய காட்சியைப் பலரும் அறிந்து மகிழ்வுற வேண்டுமென்றே அதன் வரலாற்றினை ஓர் புத்தகமாக வெளியிடலானேன்.

இம்மகத்தான யாத்திரை நடைபெறு முன்னரே இதன் வரலாறு முழுமையும் இந்தியாவிலுள்ள பல பாஷை பத்திரிகைகளிலும் வெளியாயிற்று. இதனை அறிந்த சாத்திர ஆசிரியர்கள் நமது நாட்டுப் பண்டைய சாத்திரங்களைப் புரட்டிப் பார்த்து 800 வருஷங்களுக்கு முன் குஜராத் அரசனும் ஜைன மதத்தினருமாகிய குமாரபால மகாராஜா இத்தகைய ஓர் யாத்திரையை நடத்தினாரென்று வெளியிட்டனர்.

இதனைக் கண்ட அடியேன் மனம் பித்து கொண்டது. இத்தகைய யாத்திரையில் எவ்வாறாகிலும் கலந்துகொள்ள வேண்டுமெனும் அவா எழுந்தது. எவ்வாறு அங்கு செல்வதெனும் ஏக்கமும் அவாவைத் தடுத்த வண்ணமாகவேயிருந்தது. நாளும் நெருங்கி விட்டது. வழியோ பிறக்க வில்லை. இரவும் பகலும் எந்நேரமும் யாத்திரை! யாத்திரை! என்ற கவலையே என்னைச் சூழ்ந்து கொண்டது. இந்த சமயத்தில் ஜீவகாருண்ய பிரசார சம்பந்தமாக மதுரை ஜில்லா செல்ல வேண்டியதாயிற்று. பிரசாரத்திற்குச் சென்றுவிட்டேன். பிரசார நேரம்போக மற்ற காலமெல்லாம் யாத்திரையைப் பற்றியே சிந்தனை!

இவ்வாறு வருந்தும் அடியேனின் நல்வினை தன் கண்களைத் திறந்து பார்த்தது. 27-01-35 காலை 11 மணிக்கு அடியேனுக்கு ஓர் தந்தி வந்தது; பிரித்துப் பார்த்தேன். (Start immediatly to Madras) 'உடனே சென்னைக்குப் புறப்படு' என்றிருந்தது. அன்றிரவே புறப்பட்டு 28-01-35 காலை சென்னை வந்து நேராக ஆபீஸக்குச் சென்று தந்தியின் செய்தியை ஆபீஸ் அட்டண்டரை விசாரிக்க அவர் புன்னகை பூத்து "உம்மை பாலிடானா யாத்திரைக்கு அனுப்பப் போகின்றார்கள்" என மொழிந்தார். ஆ! ஹா! என்னென்றுரைப்பேன்! ஆனந்தக் கடலில் மூழ்கினேன். என்றுங் காணாத மகிழ்ச்சி என் உள்ளத்தே புகுந்து உடலெங்கும் ஊடுருவி புளகாங்கிதமடையச் செய்தது! வறியவன் புதையலைக் கண்டது போலவும், மகிழ்வுற்றேன். ஆபீஸ் முழுமையும் எனது உள்ளன்போடு முழு கண்களால் பல தடவை சுற்றிச் சுற்றிப் பார்த்தேன். உடனே சீவகசிந்தாமணியின் தெய்வ மொழி நினைவிற்கு வந்தது.

"அறவிய மனத்தராகி ஆருயிர்க் கருளை செய்யில்
பறவையும் நிழலும் போலப் பழவினை உயிரோடாடி
மறவி யொன்றானு மின்றி மனத்ததே சுரக்கும்பால
கறவையிற் கறக்குந் தம்மாற் காமுறப்பட்ட வெல்லாம்"

என்றபடி, அடியேன் சென்னை தென்னிந்திய ஜீவரக்ஷக சபையில் சொற்பொழிவாளனாக தொண்டாற்றி உண்மை உணர்ச்சியால் அருளால் திக்கற்ற பல உயிர்களைப் பலியிடுவதினின்றும் மீட்ட பெரும் புண்ணியமே நல்வினையே நமது உள்ளத்தெழுந்த அவாவினை முற்றுப் பெறச் செய்ததென மகிழ்ச்சியுற்றேன். இந்தத் திவ்ய யாத்திரையை அடியேனுக்கு எதிர்பாராவண்ணம் வாய்க்கப் பெறச் செய்தவர் ஜீவரக்ஷக சபை கெளரவ சாரியதாசி ஷா தேவ்ஸி மூல்சந்த் அவர்களாவார்கள். அப்பொயாரை எழுபிறப்பும் மறவேன்.

இந்நூலில் பல முக்கிய ஸ்தலங்களைப் பற்றியும் முக்கியமாக மெளன்ட் ஆபுவைப் பற்றியும் சற்று விரிவாக எழுதியுள்ளேன். ஏனென்றால் அது உலக அதிசயங்களில் ஒன்றாகும் என்பதனால் பலரும் அதனற்புதத்தை அறிய வேண்டுமென்னும் அவாவேயாகும்.

இப்புண்ணிய நூலினை அச்சிட சென்னை இராயப்பேட்டையிலுள்ளவரும் எங்களோடு பாலிடானாவிற்கு விஜயம் செய்தவருமாகிய சுராஜ்மல் செளகார் அவர்கள் ரூ.20-0-0ம், செளகார்பேட்டை C.N. ஷா அவர்கள் ரூ.2-0-0ம் கொடுத்துதவினார்கள். அவ்விரு பொயாரையும் நான் என்றும் மறவாது நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன்.

இங்ஙனம்,
T.S.ஸ்ரீபால்

சென்னை
27-4-1937

ஸ்ரீ அருகன் வாழ்த்து

மூவா முதலா வுலகமொரு மூன்றுமேத்தத்
தாவாத வின்பந் தலையாயது தன்னினெய்தி
யோவாது நின்றகுணத்தொண்ணிதிச் செல்வனென்ப
தேவாதி தேவனவன் சேவடி சேர்துமன்றே.

செம்பொன் வரைமேற் பசும்பொன் னெழுத்திட்டதே போல்
அம்பொற் பிதிர்வின் மறுவாயிரத் தெட்டணிந்து
வெம்புஞ் சுடாற் சுடருந் திருமூர்த்திவிண்ணோ
ரம்பொன் முடிமே லடித்தாமரை சென்னிவைப்பாம்.

பன்மாண் குணங்கட் கிடனாய்ப் பகைநண்பொடில்லான்
றொன்மாண் பமைந்த புனைநல்லறந் துன்னிநின்ற
சொன்மாண் பமைந்த குழுவின் சரண்சென்றுதொக்க
நன்மாண்பு பெற்றேனிது நாட்டுதன் மாண்புபெற்றேன்.
- திருத்தக்கதேவர்.

ஸ்ரீ உலகம் புகழும் ஆடம்பரமான பாலிடானா யாத்திரை

பாலிடானா வென்பது ஒரு (State) சமஸ்தானம். இந்தியாவில் மிக்க பிரஸித்தி பெற்ற கத்தியவார் மாகாணத்தைச் சேர்ந்தது. பாலிடானாவில் சத்ருஞ்சயகிரி யென்ற ஓர் அழகிய மலையிருக்கின்றது. அம்மலையினாலேயே பாலிடானாவிற்குப் பெருமையுண்டாயிற்று. அத்திருமலையில் கணக்கற்ற ஜினாலயங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. அம்மலையை கோயில்கள் சூழ்ந்த நகரம் (City of temples) எனவும் அழைப்பதுண்டு. அம்மலையில் பஞ்ச பாண்டவர்களும் முத்தியடைந்ததாகக் கூறுகின்றார்கள். ஜைனர்களுக்கு அப்பெருமலை ஓர் திவ்ய யாத்திரை ஸ்தலமாகும். அம்மலைக்கு சத்ருஞ்சய, பாகுபலி, மருதேவ், புண்டாககிரி, ரைவத்கிரி, விமலாசா, சித்தராஜ், பகீரத், சித்த க்ஷத்திரம், சஹஸ்திரகமல், முக்திநிலையம், சித்தாசல், சதகுட்கிரி, டங்க, கோடினிவாச, கதம்பகிரி, லோகித்ய, காலத்வஜ, புண்ணியராஸி, மஹாபல, தரசித்தி என இருபத்தோர் திருநாமங்களும் உண்டு. டங்க, கோடினிவாஸ, கதம்பகிரி, லோகித்ய என்ற நான்கு பெயர்களும் அம்மலையில் இரத்தினங்கள் கிடைப்பதைக் குறிப்பிடுவதாகக் கூறுகின்றார்கள். ஸ்ரீ விருஷப தீர்த்தங்கரர் இம்மலைக்கு அநேக தடவை விஜயம் செய்ததாகப் புராணங்கள் விளக்குகின்றன. ஸ்வேதாம்பர புராணப்படி 22 தீர்த்தங்கரர்கள் இவ்விடம் விஜயம் செய்து சென்றதாகக் கூறுகின்றன. புண்டாக் என்ற ஓர் தவசிரேஷ்டர் அநேக முனிகணங்களுடன் இவ்விடம் தவமிருந்து மோக்ஷமடைந்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன. இதனாலேயே இம்மலை ஜைனர்களுக்குப் புண்ணிய தலமாக விளங்குகின்றது. இம்மலையின் மேல் கிழக்குப் பக்கத்தில் ஓர் நதி ஓடுகின்றது. இதற்கு சத்ருஞ்சய நதி அல்லது புண்டாகனியென்று பெயர் வழங்குகின்றது.

இம்மலையிலுள்ள ஆலயங்களில் மிக்க பிரஸித்திபெற்றது ஆதிநாத பகவானின் திரு ஆலயம். இது முதல் முதல் மரத்தினால் சிறியதாகக் கட்டப்பட்டிருந்தது. ஒரு நாள் குஜராத் அரசனாகிய குமாரபால மகாராஜனின் மந்திரி உதயன் அவ்வாலய தாசனத்திற்குச் சென்றபோது ஓர் எலி அங்கு எரிந்துகொண்டிருந்த நெய் தீபத்தின் திரியை இழுத்துக்கொண்டு ஓடிற்று. அதைக் கண்டு உதயன் நடுநடுங்கி எங்கு அத்தீ மரத்தினாலாகிய ஆலயத்தைப் பற்றிக் கொள்ளுகின்றதோவென்று அந்த எலி வெளியே செல்லும் வரை மிக்க கலக்கத்தோடு காத்திருந்தான். அன்றையிலிருந்தே இக்கோயிலை வஜ்ஜிரப்படையாகக் கட்ட வேண்டுமென்றும் அதுவரை தான் பிரம்மச்சர்ய விரதங்கொள்வதென்றும் தீர்மானித்துத் தன் இல்லம் சென்றான். உடனே கோயில் கட்ட ஆரம்பித்து வேலை நடந்து வந்தது. ஆனால் அக்கோயில் கட்டி முடிவதற்குள் உதயன் நோய் வாய்ப்பட்டு மரணமும் சமீபித்துவிட்டது. இதனையறிந்த உதயன் மிகவருந்தித் தன் அந்தரங்கக் காரியதாசியினிடம் தன் அவாவினைத் தொவித்து தன் குமாரன் பாஹாடுவின் மூலம் அக்கோயிலைக் கட்டி முடிக்கக் கேட்டுக்கொண்டான். பிறகு பாஹாடும் தன் தந்தையின் பேரவாவை நிறைவேற்ற முனைந்து நின்று அக்கோயிலை மிக்க சிறப்போடு கட்டி முடித்தான்.

1  2  3  4  5  6  7  8


 

 

Ӹ š¢        www.jainworld.com