Ӹ š¢

 


பகவத் கீதையின் கொள்கையை வலியுறுத்தும் வகையில் 26-11-50ல் தென்னிந்திய இந்துமகா சபையில் பேசிய ஸ்ரீசட்டர்ஜீ அவர்கள் இந்துமதத்திற் கொவ்வாத அஹிம்சா கொள்கையை இளைஞர்கள் உள்ளத்தில் வேரூன்றச் செய்வதால் நாட்டிற்குக் கதி மோட்சம் ஏற்படாது' எனக் கூறியுள்ளார். (சுதேசமித்திரன் 26-11-50)

இவையனைத்தையும் மெய்ப்பிக்க விருஷப தேவருடைய பட்டத்தரசிகள் நமக்குப் பெருஞ்சான்றாக விளங்குகின்றனர். விருஷபதேவருடைய இரு பட்டத்தரசிகளும் விஞ்சையர் மாதர்கள். விஞ்சையர் (வித்தியாதரர்) என்பவர்கள் அனைவரும், திராவிட மக்களே யாவர். இவ்வுண்மையை இராவணன், வாலி முதலியவர்களின் வரலாற்றாலும், சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, சூளாமணி முதலிய சமண நூல்களாலும் அறியலாம். விருஷப தேவருடைய முதல் பட்டத்தரசியாரின் வயிற்றிற் பிறந்த முதற் புதல்வன், பரதன்ஆவான். அப்பரதனே இந்நாடு முழுமையும் அறவழியில் ஆண்ட முதற் சக்கரவர்த்தி அதனால் இந்நாட்டிற்கு அவர் தம் பெயராலேயே பரத கண்டம் என வழங்கலாயிற்று.

மொழியிலும் ஒற்றுமை காணலாம். எழுத்து எண் இரண்டையும், விருஷபதேவரே முதல்முதல் தோற்றுவித்தார் என கூறியுள்ளோம். அவ்விரண்டையும் முறையே பிராமி, சுந்தா என்ற தம் இரு குமாரத்திகளின் மூலமாகவே அவர் ஆரம்பித்து வைத்தார். அதனாற்றான் அவ்வெழுத்துக்களுக்கு பிராமி எழுத்தென வழங்கலாயிற்று. அப்பிராமி எழுத்துக்களுக்கும், தமிழ் எழுத்துக்களுக்கும் வாவடிவில் நெருங்கிய ஒற்றுமை உண்டென்றும், பெயர் அளவில்தான் வேற்றுமையென்றும் பல ஆராய்ச்சி அறிஞர்கள் கண்ட முடிவு. மேலும் அசோகன் காலத்தில் தென்னாடும் வடநாடும் கொண்ட இந்நாடெங்கும் பிராமி என்ற ஒரு மொழி பரவியிருந்ததெனக் கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் ஆதாரத்துடன் அறிவித்துள்ளனர். அன்றியும் தமிழ் மொழிக்கே சிறப்புடையதாகிய 'ற'வும் 'ழ'வும் பிராமி எழுத்தின் இன்றளவும் காணப்படுகின்றன. எனவே விருஷப தேவான் மொழி இயல்பிலும் திராவிடக் கதிரொளியே வீசுகிறது.

இவ்வுண்மைகளை மேல்நாட்டு வரலாற்று ஆசிரியர்களும் பல சான்றுகளுடன் மெய்ப்பித்துள்ளனர். ஆகவே, ஆதிகால வரலாற்றுப்படி, அயோத்திமா நகால் பிறந்த விருஷபதேவர் (ஆதிபகவான்) திராவிடரே என்பதும், அவரே மெய்யுணர்வு அல்லது பகுத்தறிவு இயக்கத்தின் முதல்வர் என்பது உறுதிப்படுகின்றன.

கி.மு. 454-ம் ஆண்டில் கலிங்க நாட்டிலிருந்த விருஷபதேவர் சிலையை மகத நாட்டரசன் நந்தவர்த்தனன் என்பவன் கவர்ந்து சென்று பாடலிபுரத்தில் வைத்ததும், பின்னர் கலிங்க நாட்டுப் பேரரசன் காரவேலன் மகதநாட்டின்மீது படையெடுத்து வெற்றி கண்டு அச்சிலையை மீட்டுக்கொண்டு வந்து தனது நாட்டில் பிரதிஷ்டா மகோற்சவம் செய்தானென்பதும், அவ்விழாவிற்குத் தமிழ்நாட்டுப் பேரரசன் பாண்டிய மன்னன் தன் பாவாரங்களுடன் சென்று சிறப்பியற்றினான் என்பதும், கி.மு. 170-ல் உதயகிரி மலையில் பொறிக்கப் பெற்றுள்ள கல்வெட்டுச் செய்தியால் அறிகின்றோம். இதனால் விருஷபதேவர் திராவிட மக்களால் நன்கு போற்றப்பட்டவர் என்பதும் புலனாகின்றது. மேலும் வச்சிரநந்தி முனீவரால் மதுரையில் தோற்றுவிக்கப்பட்ட திராவிட சங்கமே சான்றாரும்.

ஆரியருக்குமுன் திராவிட நாகாகம்

நமது தேசிய இந்திய சர்க்காரில் நிதி மந்திரியாக விளங்கிய திரு ஸர். ஆர்.கே. சண்முகம் செட்டியாரவர்கள், 1943-ம் ஆண்டில் சென்னையில் நடந்த மகா வீர ஜெயந்தி விழாவன்று தலைமை வகித்துப் பேசுகையில் "ஆரியர்வருவதற்கு முன்னர், நமது நாட்டில் திராவிட நாகாகமே எங்கும் பரவியிருந்ததென்றும், அது சமண சமயக்கொள்கையாகவே இருந்திருக்க வேண்டுமென்றும், அதை நான் பூரணமாக நம்புகிறேன்" என்றும் கூறிய ஆராய்ச்சி உரை, நமது கொள்கைக்கு மிகமிக அரண் செய்கிறது. அறிவியக்கத்தின் தந்தையாக விருஷபதேவர் விளங்கியமையால் அவரை அறிவர் என்றே போற்றினர். வடநூலார் கேவல ஞானி எனக்கூறுவர். திருக்குறளாசிரியர் வாலறிவன் எனப் புகழ்ந்துள்ளார். விருஷபதேவர் வினைகளை வென்று வீடுபேறு பெற்றமையால், அவரைத் தொல்காப்பியர் "வினையின் நீங்கி விளங்கிய அறிவன்" எனப் போற்றியுள்ளார். எனவே, அறிவர் இயக்கம் அகில இந்தியாவிலும் பரவிற்று. எங்கும் அறவோர் பள்ளிகள் எழுந்தன. தமிழகத்திலும் அவ்வாறே பள்ளிகளும், அறிவர் கோயில்களும் அமைக்கப்பட்டன.

நமது தொண்டைமண்டலப் பகுதிக்கும் அறிவர் நாடு என்றே பெயர் வழங்கலாயிற்று. அறிஞர் பண்டாரகர் குண்டேர்ப் என்பவர் அறவம் என்பது, அரவம் என ரகர றகர மயக்கத்தால் அழைக்கப் பட்டிருக்கலாம் என்று தம் ஆய்வுரையில் குறிப்பிட்டுள்ளது நம் கருத்துக்கு அரண்செய்கிறது.

புதுக்கோட்டை சித்தன்ன வாசலுக்கடுத்த ஒரு கோயிலின் கல்வெட்டில் அறிவர் கோயில் எனப் பொறிக்ககப்பட்டுள்ளது. அங்கே அறிவர் சிலையும் அழகாகக் காட்சியளிக்கின்றது. தமிழகம் இந்த அறிவியக்கத்திற்குத் தாயகமாய் விளங்கிற்று. ஆகவே, இங்குப் பல பேரறிஞர்கள் தோன்றினர். அரும்பெருங் காவியங்களையும், நீதி நூல்களையும் இயற்றினர். இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழையும் பல கலைகளையும் வளர்த்துத் தமிழ்த் தாயை அலங்காத்தனர். மக்கள் அனைவரும், பெருமகன் திருமொழி பிறழா நோன்பின்ராயினர். தேவமூடம், பஷாண்டி மூடம், லோக மூடம் ஆகிய மும்மூடங்களையும் அகற்றி, அறிவாலும் ஒழுக்கத்தாலும் சிறந்தனர்.

"விரையார் மலர்மிசை வருவார்; திருவறம் விழைவார்;
கொலையினை விழையார்; பொய்
யுரையார்; களவினை பெயாழுகார்; பிறர்மனை நயவார்;
மிகுபொருள் உவவார்; வெஞ்
சுரையால் உணர்வினை யழியார்; அழிதசை துவ்வார்;
விடமென வெவ்வாறும்
புரையார் நறவினை நுகரார்; இரவுணல் புகழார்;
குரவரை யிகழாரே" - திருக்கலம்பகம்

என்ற இறைவன் திருமொழியின் மெய்ப் பொருளின்படி கொல்லாமை, பொய்யாமை, கள்ளாமை, பிறர்மனை நயவாமை, கள்குடியாமை, ஊன் உண்ணாமை முதலிய நல்லொழுக்கங்களுடன் மிகுபொருள் உவவாமையை மேற்கொண்டு மக்கள் பகுத்துண்டு வாழ்ந்தமையால் நாட்டின் பொருளாதார நிலை பொதுவுடைமையாக விளங்கிற்று. எனவே பொதுவுடைமைத் தத்துவம் என்றைக்கோ விதை கோலப்பட்டது.

தமிழ்ப் பொயார் திரு.வி.க. அவர்கள், தாம் எழுதிய 'பரம்பொருள் அல்லது வாழ்க்கை வழி' என்ற நூலில் 125-ம் பக்கத்தில் பின்வருமாறு விருஷபதேவான் கொள்கையை நன்கு எடுத்துக்காட்டியுள்ளார்:

சமண சமயமும் சமதர்மமும்

"பொருந்திய உணவுக்கு முதல் முதல் கால் கொண்ட நாடு நமது பாரத நாடு. அவ்வுணவால் விளையும் நலன்கள் பல. அவற்றுள் சிறப்பாகக் குறிக்கத் தக்கன இரண்டு. ஒன்று கொல்லாமை. மற்றொன்று தேவைக்குமேல் பொருள் திரட்டாமை. இவை அஹிம்ஸையின் பாற்பட்டன.

"பாரத நாட்டில் கொல்லாமை விதை விழுந்து பல்லாயிரம் ஆண்டுகள் ஆயின. அவ் விதையை முதல் முதல் விதைத்தவர் விருஷபதேவர். அவர் கொல்லாமையை அறிவுறுத்தியதோடு நின்றாரில்லை. தேவைக்குமேல் மனிதன் பொருள் சேர்த்து வைத்தல் கூடாதென்றும் அருளினர். தேவைக்குமேல் பொருள் சேர்த்து வைப்பது பிறரை ஹிம்ஸிப்பது என்று கருதினர். கொல்லாமையும் தேவைக்குமேல் பொருள் சேர்த்து வையாமையும் வேற்றுமை யற்ற ஒன்று என்று விருஷபதேவர் திருவுள்ளம் எண்ணியது. அவ்வெண்ணம் மெய்யுணர்வால் முகிழ்ந்தது. மெய்யுணர்வு தேவரை 'அஹிம்ஸா பரமோ தர்ம' என்று போதிக்கச் செய்தது. தேவர் அறிவுறுத்திய தர்மம் சமதர்மம். வாழ்க்கையை-சமூகத்தை-உலகத்தைப் போரின்றிக் காத்து நல்வழிப் படுத்துந் திறனுடையது. அத்தர்மம் மார்க்ஸியமும் காந்தியமும் கலந்து ஒன்று என்று இந்நாளில் யான் பேசியும் எழுதியும வருகிறேன். காந்தியம் என்பது நாட்டில் புதியாதாகத் தோன்றியதன்று. அது விருஷபதேவர் வழி வழியே வாழையடி வாழையென வளர்ந்து வருவது. விருஷபதேவர் தர்மம், போரை அறவே தொலைத்து அமைதியை ஓம்பவல்லது"

என்றும், 148-ம் பக்கத்தில் திருக்குறளைப் பற்றி அந்தப் பொயார் எழுதும்போது, "திருக்குறள் ஆராய்ச்சிக்குப் பல திறக் கலைகளின் துணைதேவை. ஒன்று ஜைனக் கலைத்துணை மற்றொன்று மார்க்ஸியக் கலைத்துணை. இரண்டும் பொருந்திய புரட்சி நிகழ்த்திக் காலத்துக்குரிய வழியில் திருக்குறளை மலைவிளக்காக்கும். தேவைக்குமேல் பொருளீட்டா அறத்திலும், வேறு சில தத்துவங்களிலும் ஜைனத்துக்கும் மார்க்ஸியத்துக்கும் தொடர்பு உண்டு" என்றும் நன்கு எடுத்து விளக்கியுள்ளார்கள்.

அதுமட்டுமல்ல; அருகன் அருகே அல்லது விடுதலை வழி' என்ற நூலில்

'பொருளொரு பாவே பெருகி மறுபால்
....................
அருகின் குழப்பம் ஆர்க்கும் என்பதை
என்றோ என்றோ என்றோ உணர்ந்து
மிகுபொருள் வேட்டலை விடுக என்றவன்'
என விருஷபதேவரைப் போற்றியுள்ளார்.

பொதுவுடைமைத் தத்துவம் ஒரு விரதம்

இவ்வாறு பொதுவுடைமை தத்துவத்ததை ஐம்பெரும் விரதங்களில் ஒன்றாக அமைத்து அறம் வகுத்தவர்கள் வேறெந்தச் சமயங்களிலும் இல்லை. விருஷபதேவர் நிலையாமையை வற்புறுத்தியதும் இக் காரணத்திற்காகவேதான். இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை ஆகிய மூன்றும் மக்களின் ஆசையை அளவுபடுத்துவதற்காகவே யன்றித் துறவறத்துக்கு மாத்திரம் அன்று. மக்களுக்கு ஆசை இயற்கையாகவே அமைந்திருப்பினும் அது அதிகாத்துப் பேராசையாகப் பாணமிக்கும்போது அவர்கள் தங்கள் நிலையினின்றும் தவறிவிடுகின்றனர். தங்கள் ஆசையைப் பூர்த்தி செய்துகொள்ள எத்தகைய தீய செயல்களிலும் ஈடுபட்டு விடுகின்றனர். மதக்கொள்கைகளை மதிப்பதில்லை. சுற்றம், நட்பு இரண்டும் அவர்கள் அகராதியில் காண முடியா. நடுநிலைமை யெனும் அறக்கோட்டையைத் தகர்த்து விடுவர். பிறருடைய இன்னல்களைச் சிறிதும் பொருட்படுத்த மாட்டார்கள். பொதுநலம் அவர்கள் கண்களில் புலப்படாது. சுயநலமே உருவாகிக் கல்நெஞ்ச ராகிவிடுவர். சிலர் தங்கள் நலத்தில்கூட அக்கறை கொள்ளமாட்டார்கள். இவர்களும் மக்கள் சமுதாயத்தில் வாழ்பவர்கள்தாம். இவர்களை எவ்வாறு திருத்துவது?

பொதுவுடைமைக்கு வித்து எது?

இத்தகைய மனப்பான்மையுடைய மக்களின் மனத்தை மாற்றவே நிலையாமைத் தத்துவம் துணைபுரிகின்றது. செல்வமும் இளமையும் யாக்கையும் என்றும் நிலையா வென்ற எண்ணம் உள்ளத்தில் உதித்தவுடன் ஆசை வயபட்டு அநீதியில் செல்பவர்கள் அதிர்ச்சியுறுவார்கள். தங்கள் இழிசெயலை எண்ணி வெட்கமுறுவர். இரக்கம் இடம்பெறும். இந்த வாழ்வு சதமா! எத்தனை நாளைக்கு நிலைக்கும்; இறக்கும் போது இவைகளில் ஒன்றும் தொடர்ந்து வரப்போவதில்லையே! இதற்காகவா பிறரை வஞ்சிப்பது! நம்மால் பாதிக்கப் பட்டவர்களின் மனம் என்ன பாடுபடும். இவ்வளவு மக்களையும் ஏமாற்றி நாம் அடையப் போகும் பயன்தான் என்ன? பாவம் அவர்களும் நம்மைப் போன்று வாழ வேண்டாமா! சீச்சீ! என்னே அறியாமை! பாழான பேராசை யன்றோ பிறர் துன்பங்களை மறைத்து விட்டது! உலகிற்கு ஒரு நன்மையும் செய்ய வொட்டாமல் தடுத்து விட்டது என்றெல்லாம் எண்ணிப் புழுங்குவர். அறிவின் வழிநிற்பர். அறநெறி புகுவர்! சுயநலப் பேயை விரட்டுவர்! நடுநிலைமையை நாடுவார்! பொதுநல சேவைகளில் ஈடுபடுவர். அவைகட்குப் பொருளுதவியும் தாராளமாகச் செய்வர்.

இத்தகைய காட்சிகளை மனித வாழ்க்கையில் ஆண்டி முதல் அரசன்வரை காணலாம். எனவே விருஷபதேவர் அஹிம்ஸை வழியில் சமதர்மத்தை நிலைநாட்டவே இந்நிலையாமைத் தத்துவத்தை வித்தாக அமைத்தார். இந்நிலையாமைத் தத்துவத்தைத் தமது வாழ்க்கையில் நடத்திக் காண்பித்தார். ஆசைக்கோர் அளவுவைத்து வாழ்க்கையை நடத்தினார். மன்னுயிர்களின் நலனே தம்முடைய நலனெக் கொண்டு அரசுரிமையைக் கடமையாக ஏற்றுக் காவல் புரிந்தார். மண்ணினுக் கிருளைப் போக்கும் கண்ணென விளங்கினார். பின்னர் ஆத்மீகத் துறையில் இறங்க எல்லாவற்றையும் துறந்து தவமியற்றி வீடுபேறு பெற்றார்.

1   2   3   4


 

 

Ӹ š¢        www.jainworld.com