முகப்பு வாயில்

 


"பொய்யில் காட்சியோர், பொருளுரை யாதலின்"
எனக் கூறி முடிக்கின்றான். தமிழ்க் காவியங்களுள் தலை சிறந்து விளங்கும் சீவக சிந்தாமணியின் ஆசிரியர் அதன் உரைச் சிறப்புப் பாயிரத்தில்.

"பொய்யா மொழிபுகழ் மையறு காட்சித்
திருத்தகு முனிவன்"
எனப் புகழப் பட்டுள்ளார்

யாப்பருங்கல விருத்தி ஆசிரியர் அதன் பாயிரத்தில்

"துளக்கறு கேள்வித் துகடீர் காட்சி
யளப்பருங் கடற்பெய ரருந்தவத் தோனே"
என அழைக்கப்பட்டுள்ளார்.

பெருங் கதையில் நற்காட்சியைப் பற்றிய ஒரு நிகழ்ச்சி நம்மை மகிழ்ச்சியிலாழ்த்துகின்றது. அறுவகைச் சமயப் புலவர்களும் தம்முள் எதிர்த்து வாதம் செய்தலைக் காணப் பிரச்சோதன மன்னன் விரும்புகின்றான். அவ்வாறே அரசர் அவையில் அறுசமயத் தறிஞர்களும் கூடி வாதிக்கின்றனர். அவர்களில் சமண முனிவர் நற்காட்சியை முன்னிருத்தி வாதிடுகின்றார். வெற்றியடைகின்றார். இதனைக் கொங்குவேளிர்,

"கற்றோர் மொய்த்த முற்றவை நடுவண்
தாழாப் பெரும்புகழ்க் காளக் கடவுண்முன்
பாலக னென்னும் பண்ணவர் படிவத்துக்
காள சமணன் காட்சி நிறுப்ப
ஐம்பெருஞ் சமயமும் அறந்தோற்றன..."
என விளக்குகின்றார்

தெய்வந்தொழாள் கொழுநற் றொழுதெழுவாளைத் திருக்குறளிலே காண்கின்றோம். ஓமகுண்டம், சோமகுண்டம் மூழ்கிக் காமன் கோட்டத்துக் கடவுளை வழிபட மறுத்துக் கொழுநனையே தெய்வமாகக் கொண்டாடும் கற்புக் கடம் பூண்ட கண்ணகியின் மாண்பினை, இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் பல பகுதிகளில் வியந்து புகழ்கின்றார். இங்கேயும் நமது கொங்குவேளிர் பெண்ணின் பெருமையைப் பேசும்போது பெண்களுக்கு அறிவு-அதிலும் பகுத்தறிவு எவ்வளவு இன்றியமையாத் துணையாக விளங்குகின்றது என்பதை,

"எழுந்த ... ... ... ...
கையறு வீழினுங் கணவ னல்லது
தெய்வ மறியாத் தேர்ந்துணர் காட்சிப்
படிவக் கற்பிற் பலகோ மகளிருட்..."
எனப் பாராட்டுகின்றார். வளையாபதியில்,

"துக்கந் துடைக்கும் துகளறு காட்சிய
நிக்கந்த வேடத் திருவடி கணங்களை"
என நற்காட்சியையுடைய துறவியர் புகழப் பட்டுள்ளனர்.

"கள்ளார் கள்ளுண்ணார் கடிய கடிதொĄŁயி
எள்ளிப் பிறரை இகழ்ந்துரையார் -தள்ளியும்
வாயின் பொய்கூறார் வடுவறு காட்சியார்
சாயின் பா˘வ திலர்."
என நாலடியாரிலும்

"உயிரும் உயிரல்லதும் புண்ணியம் பாவம் ஊற்றுஞ்
செயிர்தீர் செறிப்பும் உதிர்ப்புங் கட்டும்வீடும் உற்ற
துயர் நீக்கும் தூயநெறியுஞ் சுருக்கா யுரைப்பன்
மயல் தீர்ந்த காட்சி யுடையோயிது கேண்மதித்த"

என, மேருமந்தர புராணத்திலும் காண்கின்றோம்.

பகவான் மகாவீர வர்த்தமான சுவாமிகள், விருஷப தேவரால் அருளப்பட்ட நற்காட்சி, நல்ஞானம், நல்லொழுக்கம் ஆகிய அறிவியக்கக் கொள்கைகளை மக்களிடம் உபதேசித்து வருகையில், ஒரு சமயம் இராஜகிருக நகரம் விஜயம் செய்தார். சுவாமிகளின் வரவினை அறிந்த அந்நாட்டு மன்னன் சிரேணிக மகாராஜன் பெருமகிழ்ச்சி கொண்டு அச்செய்தியை நகரத்தார். அறியும் வண்ணம் ஆனந்த போ˘கை மூலம் அறிவித்தான். இச்செய்தியைக் கேட்டு அறிவியக்கக் கொள்கையுடையாரெல்லாரும் அத்தூயோனின் அறவுரை கேட்க விரைந்து வந்தனர். இவ்வரலாற்றுச் செய்தியை ஜீவ சம்போதனை ஆசிரியர்,

"ஆனந்த மெய்தி யரசன் அணிநகரத்
தானந்த போ˘ யறைவித்தான்-ஆனந்த
சொல்லாரக் கேட்டுத் துகள்தீர்ந்த காட்சியார்
எல்லாரும் வந்தடைந்தா ĄŁண்டு"
எனக் கூறி நம்மை மகிழ்ச்சியி வாழ்த்துகின்றார்.

இவ்வாறே பகுத்தறிவியக்கத்தாரின் தமிழ் நூல்கள் பலவற்றுள்ளும் நற்காட்சியும், நற்காட்சியுடையாரும் நன்கு பாராட்டப்பட்டுள்ளனர். அதுமட்டுமன்று அதற்கு முரணான கொள்கைகள் பல நமது தமிழகத்தில் வந்து புகுந்தன. அவைகளை நமது பகுத்தறிவுக் கலைகள் ஏற்க மறுத்தும், கண்டித்தும் இருப்பதைப் புலவர் பெருமக்கள் காணலாம்.

கடவுளும் உலகமும்

இவ்வளவு சிறப்புற்ற பகுத்தறிவை அடிப்படையாக வைத்து அறம் வகுத்த விருஷபதேவர், ஆக்கல், காத்தல் அழித்தல் ஆகிய முத்தொழில்களில் ஈடுபடுவதும், அவதாரங்கள் பல எடுப்பதும், அடியார்களுக்குப் பா˘ந்து வருவதும், சோதிக்க வருவதுமாகிய திருவிளையாடல்களைப் புரியும் கடவுளைப்பற்றி யாண்டும் பேசவில்லை. அறிவுக்குப் பொருத்தமில்லாத எந்தக் கொள்கைகளையும் அவர் எங்கும் உபதேசிக்கவில்லை. ஏனெனில், உலகம் கடவுளால் படைக்கப்பட்டதாயின், அது இன்பமயமா யிருக்கவேண்டும். ஆனால் உலகம் துன்பமயமாய் இருக்கக் காண்கிறோம்! மேலும் கடவுளுடைய அவதாரங்களாகவும், தூதர்களாகவும், அடியார்களாகவும் வந்தவர்களெனக் கூறும் பொ˘யோர்களும் இந்த உலகத் துன்பத்தினின்றும் தப்பி வாழ முடியவில்லை எனவே, இந்த உலகம் என்றும் இயற்கையாயுளதென்பதும் மக்களின் இன்ப துன்பங்களுக்குக் காரணம் கடவுளே அல்ல என்பதும், இத்தகைய உலகைச் செம்மைப் படுத்தும் ஆற்றல், நாட்டில் தோன்றும் அறிஞர்களுக்கே உரியது என்பதும், அவருடைய பூரண நம்பிக்கை. இவ்வுண்மையைத் தற்கால விஞ்ஞானிகளும் ஒப்புக் கொள்ளுகின்றனர்.

"இந்த உலகம் என்றும் படைக்கப்பட்டதன்று அது முடிவுறுவதும் இல்லை. ஆனால் நிரந்தர வளர்ச்சி நிலையில் உள்ளது" என ப்ரெட் ஹாயில் (The universe was never created and will never end but in permanent state of creation) (Fred Hoyle) என்ற விஞ்ஞான நிபுணரும்,

"உலகை ஆள்வது எது? யார்? அதை நாம் உற்று நோக்கும் அளவில், உலகம் தன்னைத்தானே ஆளுகிறது. அவ்வாட்சியுடன் ஒரு நாடு அல்லது ஆட்சிமுறையை ஒப்பனை செய்வது பொய்ம்மையுடையது" என மற்றொரு தலைசிறந்த விஞ்ஞான நிபுணரான ஜுலியன் ஹக்ஸ்ஸி (Julian Huxley) என்பவரும் கூறியுள்ளார்கள். (Who and What rules the universe? so for as we can see it, it values itself and indeed the whole analogy with a country and its rule is false)

ஆகவே, விருஷபதேவர் மக்கள் பண்பிற்கும், வாழ்விற்கும், உயர்விற்கும் வேண்டிய அறங்களையும் சமுதாய அமைப்புக்குரிய வழிகளையுமே வற்புறுத்திச் சென்றார். நிறைந்த அறிவு நிலைபெற்று இருவினைகளினின்றும் நீங்கிய உயிரே கடவுள் என நவின்றார்.

'தன்னுயிர் தான் அறப் பெற்றானை ஏனைய
மன்னுயிர் எல்லாம் தொழும்'

இரு வினைகளின் நீக்கத்திற்கும் மேலே கூறிய நற்காட்சி நன்ஞானம், நல்லொழுக்கம் ஆகிய மூன்றுமே துணையாகும் என மொழித்தார். இதனை

"மெய்வகை தொ˘தவ் ஞானம்
விளங்கிய பொருள்கள் தம்மைப்
பொய்வகை யின்றித் தேறல்
காட்சியைம் பொறியும் வாட்டி
உய்வகை உயிரைத் தேயா
தொழுகுத லொழுக்க மூன்றும்
இவ்வகை நிறைந்த போழ்தே
இருவினை கழியு மென்றான்"

என, சீவகசிந்தாமணி ஆசிரியர் திருத்தக்க தேவரும்,

"பேர்தற்கு அரும்பிணி தாம் இவை அப்பிணி
தீர்தற்கு உரிய திரியோக மருந்து இவை
இவை உண்டார்
பேர்த்து அப்பிணியுள் பிறவார் பொ˘து இன்பமுற்றே"
என, நீலகேசி ஆசிரியரும் பகர்கின்றனர்.

"தன்னிற் பிறிதில்லை தெய்வம் நெறிநிற்பில்
ஒன்றானுந் தானெறி நில்லானேல்-தன்னை
இறைவனாச் செய்வானுந் தானே தான் தன்னைச்
சிறுவனாச் செய்வானுந் தான்"

என அறநெறிச்சார ஆசிரியர் முனைப்பாடியாரும் நன்கு விளக்கியுள்ளார்.

எனவே, நமது வாழ்வின் முன்னேற்றத்திற்கும் வீடு பேற்றிற்கும் எவரும் காரணமல்ல.
"யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;"
எனும் புறநானூற்றுப் பாடலிலும் இக்கருத்து விளங்குவதைக் காணலாம்.

அவரவர்களின் அறிவு, திறமை, ஊக்கம், விடாமுயற்சி, சூழ்நிலை ஓழுக்கம், தவம் முதலியவைகளைப் பொறுத்தே பலாபலன்களை அடைகிறோம்.

இளங்கோவடிகள் தமது சிலப்பதிகார காவியத்தில் பல சமயங்களின் கடவுள்களைப் பற்றியும், அவர்கள் செயல்குணம் முதலியவைகளைப் பற்றியும் அந்தந்தச் சமயங் கொள்கைப்படி கூறிவிட்டுக் கடைசியாகத் தமது அறவுரையில் 'தெய்வந்தெளிமின்' என்று கூறியுள்ளார். தெய்வம் தொழுமின் எனாது தெய்வந்தெளிமின் என்பதன் கருத்தை ஆய்வது போன்று அக்பர்ஷாவின் கொலு மண்டபத்தில் கடவுளைப்பற்றி ஒரு ருசிகரமான விவாதம் நடைபெற்றது. அவ்வரலாற்றுச் செய்தியை நாமும் படித்துத் தெய்வந் தெளிவோம்.

அக்பர் சாம்ராஜ்யத்தில் அக்பருடைய பக்திக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமானவர் ஸ்ரீ ஹிர்விஜய சூரி என்ற ஜைன முனிவர். அவர் பல்கலைப் புலவர். அவரும், அவருடைய சீடர்களான பானுசந்தத்ஜீ முனிவரும், விஜயசேனசூரிஜீ முனிவரும் அக்பா˘ன் அரசாட்சியை அறவழியில் செலுத்தி அலங்கா˘த்து வந்தனர். அதனாற்றான் மோகலாய மன்னர்களில் அக்பருடைய ஆட்சியே சிறப்புற்று அழியாப் புகழுடன் இந்திய வரலாற்றில் விளங்குகிறது. அத்தகு புகழும் புலமையும் வாய்ந்த ஜைன முனிவர்கள் அங்குச் செல்வாக்குப் பெற்றிருந்ததைப் பொறாத சிலர், அக்பா˘டம் சென்று ஜைனர்கள் கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் என்று புகார் செய்தனர். அதன் பின்னர் அக்பர் ஸ்ரீ விஜயசேனாசூரி சுவாமியை அழைத்து, கடவுள் உண்டா இல்லையா? என்பதைப்பற்றி மற்றவர்களோடு விவாதிக்குமாறு வேண்டிக்கொண்டார். முனிவர் சம்மதிக்கவே, விவாதத்திற்கும் ஏற்படாயிற்று. அக்பர்ஷா கொலுமண்டபத்தில் விஜயசேனாசூரி முனிவருக்கும் வைதிக சமய அறிஞர்களான பிராமணர்கட்கும் விவாதம் நடந்தது.

விஜயசேனசூரிஜி சாஸ்திர ஆதாரங்களுடன் தர்க்க ĄŁதிக்கும், அறிவுக்கும் பொருத்தமான முறையில் கடவுளைப்பற்றி ஜைனர்கள் கொண்ட கருத்தைத் தெளிவாக எடுத்து விளக்கினார். இதனால் சக்கரவர்த்தியும் திருப்திஅடைந்தார். பிராமணர்களும் அக்கொள்கையை ஏற்றுக் கொண்டதுடன், மேற்கொண்டுபேசவும் வழியின்றி மெளனமாக நின்று விட்டனர். இவ்வரலாற்றுச் செய்தியை மோஹன்லால் தாலிசந்த் தேசாய் B.A.,LL.B. அவர்கள் தாம் எழுதியுள்ள 'பானுசந்த் சா˘த்திரம்' என்ற ஆங்கில நூலில் பின்வருமாறு குறித்துள்ளார்.

"Some Non-Jains told Akbar that the Jains did not believe in God. Upon this, the Emperor requested Vijay- Senasuri to hold a debate at his Court with the learned brahmins, on the subject of the existence or otherwise of God. The debate was duly conducted, and Vijayasena, quoting chapter and verse from the scriptures, marshalling facts and arguments based upon sound logic, gave a lucid exposition of the Jaina view of God, and convinced and silenced the Brahmins once and for all."

எனவே, ஆதிபகவானின் அறவுரைகள் பக்தி மார்க்கம் எனும் படுகுழியில் தள்ளாமல் பகுத்தறிவுப் பாதையிலே செலுத்தி மக்கள் பண்பை வளர்த்தன. அதுமட்டுல்ல! மக்கள் வாழ்க்கையிலே நின்று உலகை மாண்புடன் வளம் பெறச் செய்தன. எனவே, மக்கள் அவர்தம் அறிவியக்கத்தை ஆர்வத்தோடு ஏற்றனர். அறிவியக்கம் இன்றுவரை உலகிடை நன்கு வளர்ந்து வருகிறது.

இத்தகைய பகுத்தறிவுக் கொள்கையைத் திராவிடர் பண்பு எனக் கூறுதல் மிகையாகாது. வரலாற்றுப் பேராசிரியர்களின் ஆராய்ச்சிப்படி திராவிட நாகா˘கம் இந்தியா முழுவதும் ஒரு காலத்தில் பரவியிருந்த தென்பதை அறிகின்றோம். மொஹஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய விடங்களில் அகழ்ந்தெடுக்கப் பெற்ற புதை பொருள்களில் நிர்வாணமாக ஒரு யோகி நிற்கும் நிலையாகப் பல உருவங்கள் காணப்படுகின்றன.

அவை விருஷபதேவருடைய சிலையாகவோ, வேறு ஜைன தீர்த்தங்கரருடைய சிலையாகவோ இருக்க வேண்டுமெனப் பல அறிஞர்கள் முடிவு செய்திருக்கின்றனர். மேலும் அங்குக் கிடைத்துள்ள முத்திரைகளில் 'ஜிநேஸ்வரா' அல்லது 'ஜிநேசா' என்ற பதங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. (The scripts on the Indus valley seals by Dr. PranNath D.Sc., (Lond) Ph.D. (Vienna) in the India Historical Quarterly Vol. VIII) அத்துடன் ஸ்வஸ்திக் குறிகளும் ஜைன மந்திரங்களும் பொறிக்கப்பட்ட பல முத்திரைகள் காணப்படுகின்றன.

எனவே, இவை நமது ஆராய்ச்சிக்குப் பெருந்துணை செய்கின்றன. மேலும், இதனை உறுதிப்படுத்த பகவத்கீதை சான்று பகிர்கின்றது. அர்ச்சுனன் அஹிம்சா தருமத்தில் முழு நம்பிக்கை கொண்டவனாகிப் போர் தொடுக்க மறுக்கிறான். உறவினர்களின் மீதும் குருமார்கள் மீதும் அம்பைத் தொடுக்க மனம் எழவில்லை. இதனைக் கண்ட கிருஷ்ணன், அர்சுனா அச்சத்தோடு கூடிய இந்த இழிநிலையில் உன்னை மயக்குவது அஹிம்சா தருமமேயாகும். அது நமது கொள்கையன்று அநாரியர் கொள்கை எனக் கூறுகின்றார். (பகவத்கீதை 2ம் அத்தியாயம் 2ம் ஸ்லோகம்) இக்கூற்றுப்படி அஹிம்சா தருமமும் அதன் கர்த்தாவாகிய விருஷபதேவரும்(அநாரியர்) ஆரியரல்லாதவர் எனப் பெறப்படுகின்றது. அநாரியர் என்றபோதே, திராவிடர் என்பது சொல்லாமல் விளங்கும்.

1   2   3   4


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com