முகப்பு வாயில்

 


மதவாதிகள் பலரும் மக்களின் வாழ்வும் வறுமையும் இன்பமும் துன்பமும், கடவுளின் செயல்" அல்லது ஆண்டவன் படைப்பு என்னும் பொய்நெறியை மக்களிடையே பரப்பிவிட்டனர். இவ்வாறு பேசித்திரியும் மதவாதிகளையும் இதனைப் பயன்படுத்தி மக்கள் வாழ்க்கை வளர்ச்சியில் அக்கறைக்கொள்ளாத அரசர்களையும் அமைச்சர்களையும் நோக்கியே திருக்குறளாசிரியர்,

"இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்"


எனக் கடிந்துள்ளார். அர்னால்டு என்ற மேல்நாட்டுப் பேராசிரியர்.

"மக்களைப் படைத்த பிரமன், அவர்களை துன்பச் சுழலிலே சிக்கவிட்டு மகிழ்வானோ? அவ்வாறு அவர்கள் சிக்கிச் சிதைவதைக் கண்டு வாளாயிருப்பானாயின், அவன் நற்கடவுளாவது எங்ஙனம்? சிக்கலைப் பார்த்து மகிழாமலிக்கலாம்! ஆனால் அச்சிக்கலை அவனால் நீக்க இயலவில்லை யென்றால், அவன் திறமையற்றவன் என்றன்றோ கருதவேண்டும்"* என்றார். இத்தகு சிறந்த அறிவியக்கக் குறள் கொள்கையை மதவாதிகள் தீவிரமாக எதிர்த்துப் பாழாக்கினர். அன்றே அறநெறிகள் வீழ்ச்சியுற்றன. அறம் மட்டுமல்ல! பெரும்பாலான மக்களிடமிருந்து அறிவும் விடைபெற்றுக்கொண்டது. எல்லாம் அவன் செயல் என்னும் அறியாமையும் மூட நம்பிக்கைகளும் மக்களை விழுங்கி விட்டன. உழைப்பும் சுயமுயற்சியும் ஓடி ஒளிந்தன. சோம்பலும் சுயநலமும் தாண்டவம் புரிந்தன. தொழில்வளம் குன்றிற்று. மக்கள் வறுமைப் படுகுழியில் வீழ்ந்தனர். எனவே ஜினதேவா¢ன் திருஅறம் நிலவிவந்த காலமே நில உடைமை உச்சவரம்புக் கொள்கை அல்லது பொருளாதார வரம்புத் திட்டம் நாடெங்கும் நடனம் புரிந்து மக்கள் வாழ்வை மலரச் செய்த பொற்காலமாகும். இவ்வுண்மையை நன்கு உணர்ந்த அறிஞர் சர்.ஆர்.கே. சண்முகம் செட்டியார் அவர்கள் 1943-ஆம் ஆண்டில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியபோது * "ஜைன சமயம் மட்டும் இந்தியாவில் வலிவுற்று நிலைத்து இருந்தால், இன்று கிடைத்திருப்பதைவிடச் சிறந்த ஒற்றுமையும் பெருமையும் வாய்ந்த இந்தியாவை நாம் பெற்றிருக்கஇயலும்" என அறிவுறுத்தியுள்ளார்.
* Li¦areter - 19-4-43

மகாத்மா காந்தியடிகள் திரு. ராய்ச்சந்த் ஜெயின் என்ற அறிஞா¢டம் பல சமய நூல்களைப் பயின்றதன் காரணமாகவே அரசியலில் அஹிம்சையைப் புகுத்தினார். அஹிம்ஸையே எனது சமயம் என்றும் அறிவுறுத்தி வந்தார். அஹிம்ஸையின் அடிப்படையிலேயே போராடி வெற்றிகண்டார். அன்றே அஹிம்ஸையின் ஆற்றலை உலகம் அறிந்தது. அதுமட்டுமா தாம் எழுதிய இந்திய சுயராஜ்யம் என்ற நூலில் மனிதன் தனக்குத் தேவைக்கு வேண்டிய பொருளைத்தேடிக்கொண்டு தனது ஆசைக்கு அணைக்கட்டிவிடவேண்டும் என எழுதியுள்ளார். இவைகளை நோக்கின் மகாத்மா காந்தியடிகளின் கொள்கை அஹிம்சையும் மிகுபொருள் விரும்பாமையுமே என்பது தெளிவாகிறது.

1934-ஆம் ஆண்டில் பலிவிலக்குப் பிரசாரத்திற்காகக் கலியுகப் பிரகலாதன் என்ற பெயரால் நாடகம் ஒன்று எழுதினேன். இந்நாடகமும் எனது 'பாலசுந்தரம் அல்லது பலியின் கொடுமை' என்ற நாடகத்தைப் போன்றே தமிழ்நாடெங்கும் நடிக்கப்பெற்றது. இந்நாடகத்தில் கதாநாயகனாக வரும் சிவநேசனை ஒரு ஜமீன்தாரர் ஸ்வீகார புத்திரனாக ஏற்றுக்கொள்ள விழைகின்றார். அவர் எண்ணத்தை அச்சிறுவனிடம் கூறுகின்றார். அதனைச் செவிமடுத்த சிவநேசன் ஜமீந்தாரின் எண்ணத்திற்கு நன்றிகூறி, தாங்கள் தங்கள் ஜமீன் நிலங்களை எனக்கு ஒருவனுக்கே உரிமையாக்குவதைவிடத் தங்கள் ஜமீனைச் சார்ந்த மக்களில் நிலம் அற்ற ஏழைகள் பலருக்கும் உரிமையாக்கி அவர்கள் வாழ்வுக்கு வழி செய்தால் தங்களுக்குப் புண்ணியமும் புகழும் உண்டாகும் என வேண்டிக்கொண்டதாகவும், அச்சிறுவனின் வேண்டுகோளை ஏற்றுத் தனது ஜமீன் நிலங்களை இச்சிறுவனுக்கும் நலமற்றோர்களுக்கும் தானமாக வழங்கிவிட்டான் எனவும் முடித்துள்ளேன். இந்நாடகத்துக்குத் தலைமை வகித்தவரும் முன்னுரை எழுதியவருமாகிய நாடகத் திலகம் உயர்திரு. ப.சம்பந்தமுதலியார் அவர்களும், திருமதி. இராஜேஸ்வா¢ அம்மையார், M.A.L.T., அவர்களுக்கும், தமிழ்ப் பொ¢யார் திரு.வி.க. போன்ற பல பொ¢யோர்களும், சிவநேசன் வாயிலாக ஜமீன்தாரா¢ன் நிலங்களைப் பலருக்கும் பயன்படுமாறு பங்கீடு செய்துள்ள எனது கற்பனையைப் பொ¢தும் பாராட்டினார்கள். இது போன்ற பரந்த மனப்பான்மை செல்வர்களுக்கும் நிலச்சுவான்தாரர்களுக்கும் உண்டாகுமாயின் நாட்டில் வறுமையே தலைகாட்டாது என்றும் புகழ்ந்தார்கள். 1934-ஆம் ஆண்டில் யான் 'மிகுபொருள் விரும்பாமை' என்ற கொள்கையைப் பின்பற்றியும் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்ற திருக்குறள் அறத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதிய எனது கனவு, நாடு சுதந்திரம் பெற்றவுடன் ஜமீன்தாரர் நிலங்கள் பங்கிடப் பெற்றதும், ஆச்சார்ய வினோபாஜீ நிலதான இயக்கம் தொடங்கியதும் எனது உள்ளம் வியப்புற்று மகிழ்ச்சிக் கடலில் மிதந்தது. மனிதனுக்கு மனிதன் இழைத்துவந்த அநீதிக்கு ஆயுள் தண்டனைக் கிடைத்ததெனக்களித்தேன். நமது பண்டைய இலக்கியக்கொள்கைகள் ஏட்டளவில் நில்லாமல் நடைமுறையிலும் செயல்பட ஆரம்பமாகிவிட்டதே என்றும் அகம்குளிர்ந்தேன். இன்றோ நமது காங்கிரஸ் ஆட்சியிலும் சோஷலிசம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இனி பகவான் விருஷபதேவர் அருளிய அஹிம்ஸா தருமத்தின் மேன்மையை அறிந்து மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் இடையேயுள்ள பிணைப்பை மீண்டும் ஏற்படுத்த மக்கள் முனைதல் வேண்டும். அன்றே சாதி சமயவெறி ஒழியும்.

என் உள்ளத்தில் என்றும் நின்று நிலவும் காலஞ்சென்ற தமிழ்ப்பொ¢யார் திரு.வி.க. அவர்கள் காரல்மார்க்ஸ், லெனின் போன்றவர்களின் பொதுவுடைமைக் கொள்கைகளையும் ஜைன சமயத்தின் பஞ்சசீலக்கொள்கைகளையும் ஆழ்ந்து படித்தும் ஆராய்ந்தும் வந்தார். அவர் தம் பரந்த உள்ளம் மக்கள் வாழ்க்கை நலத்தில் பற்றுக்கொண்டது. காரல்மார்க்ஸின் கொள்கையை வரவேற்றார்! லெனின் ஆட்சியை வாழ்த்தினார். இவ்விரண்டிற்கும் மூல காரணமாய் முதன்மையாய் அஹிம்ஸையின்பாற்பட்டதாய் விளங்கும் பகவான் விருஷபதேவா¢ன் திருவறத்தை மேற்கொண்டார். அருகன் அருகே என்னும் அறிவு சான்ற நூலையும், பொருளும் அருளும் என்னும் அரிய வரலாற்றுச் செய்திகள் நிறைந்த இலக்கியத்தையும் இயற்றி உலகுக்கு அளித்தார். அவ்விரு நூல்களில் அவர் அடைந்த இன்பத்தையும் உண்மையையும் காண்போம்.

"மார்க்கிஸ் முனிவன் மார்க்கம் கண்டனன்
அந்த மார்க்கம் யாக்கை போன்றது;
ஆவி நல்க மேவினன் காந்தி;
மார்க்கிஸ் காந்தி மார்க்கமூலம்
யாதென் றுலகம் ஓது கின்றது?
ஆதி அருகன் ஓதினன் மூலம்
அஹிம்ஸை மேலாம் அறமென முதன்முதல்
அருளிய பெருமை அருகனுக்குண்டே
அகிம்ஸை உயிர்ப்பை அளித்த ஐயன்
சீலப் போர்வையும் சால அமைத்தனன்
சீலம் வளர்வுழி கோலினன்! அதுவே
மிகுபொருள் விரும்பும் விலங்குள இடத்தில்
அகிம்ஸை அகலும்; புகுங்கொலை களவு
மிகுபொருள் விரும்பாத் தகுதி அகிம்ஸை
உண்மை, சீலம், ஒழுக்கம், காக்கும்
பொருளின் நிலைக்கும், அருளின் நிலைக்கும்
உற்றுள தொடர்பை உற்று நோக்குக"

இப்பொ¢யாரைப் போன்று அறிஞர் பெருமக்கள் பலரும் மக்கள் வாழ்க்கை நலம் ஒன்றையே மனதில் கொண்டு ஜைன அறவோர்களின் அறிவுரைகளை நன்கு ஆய்ந்து அவற்றை உலகுக்கு அளிப்பின் உலகம் சமாதானமாகவும் அமைதியாகவும் விளங்கும். எங்கும் அறிவொளி வீசி அன்பும் பண்பும் வளரும். பாசமும் பா¢வும் ஏற்படும். நிலஉடைமை உச்ச வரம்புக் கொள்கை நாடெலாம் நிலவி இன்ப புரியாக காட்சியளிக்கும் என்பது திண்ணம்! திண்ணம்!! திண்ணம்!!!

நமது எண்ணம் தமிழகத்தில் 1967ம் ஆண்டில் உதயமாகிய தி.மு.க. அரசின் முதல் அமைச்சர் அறிஞர் அண்ணா அவர்களின் ஆட்சியில் மலரும் என மகிழ்வோம்.

இறுதியாக நமது பாரதநாடு சுதந்தரமடைந்து 1950ஆம் ஆண்டின் குடியரசாக மாறி விளங்கியபோது யான் "குடியரசு முரசொலி" என இயற்றி வெளியிட்ட முரசொலிப் பாக்களை வழங்கி இந்நூலை மக்கள் முன்வைத்து வணங்குகிறேன்.

குடியரசு முரசொலி!

பல்லவி

கொட்டடா கொட்டடா முரசு - நாடு
குடியரசானதன் கொண்டாட்டமென்றே (கொட்)

சரணம்

(1) பட்டினி என்ற சொல் மாயும் - உயிரைப்
பறித்திடும் பிணியெல்லாம் பறந்திந்த நாட்டில்
உட்பகை ஒழிந்திடு மென்றே - எங்கும்
ஒடி முரசினைக் கொட்டடா தம்பி (கொட்)

(2) சாதி மதபேத பூதம் - இனி
சற்றேனுந் தங்கா தென் றறையடா முரசு
நீதி யெனுங்கதிர் தோன்றி - மக்கள்
நிலையிலே பொதுமையாம் ஒளிவீசும் என்றே (கொட்)

(3) தேவைக்கு மேலான பொருளை - வீணே
தேக்கியே நாட்டினில் வறுமை வளர்க்கும்
பாவச் செயலாள ரெல்லாம் - இனிப்
பகுத்துண்டு வாழ்வரென் றறையடா முரசு (கொட்)

(4) காந்தியின் நல்லறப் பாதை - ஒன்றே
காக்கும் உலகினை யென்பதைக் காட்ட
ஏந்திக் குடியரசாட்சி - உயிர்

1   2   3   4   5   6


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com