முகப்பு வாயில்

 


ஜைன சமயம் மனித சகோதரத்வத்தையும் சமத்துவத்தையும் முக்கிய அடிப்படையாகக் கொண்டது. "ஜைன சமயத்தின் புனித நூல்கள்" என்ற மகத்தான வா¢சை நூல்களின் பதிப்பாசிரியரான திரு. சரத்சந்திர கோஷால் கூறுகிறபடி "ஜைன மதமானது இந்தியாவின் மிகத் தொன்மைவாய்ந்த மதம். பழங்காலத்திலே வேந்தர் முதல் விவசாயி வரையில் ஜைன சமயக்கொள்கையைப் போற்றிப் பின்பற்றி வந்தனர். சமாதானம், எவா¢டத்தும் சகோதரத்வம் என்ற குறிக்கோள் குடையின்கீழ் அனைவரும் கூடி வாழ்ந்தனர். அம்மதம் எல்லா உயிர்களுக்கும் தெய்வீக நிலையை வழங்கி, ஒரு மேலான செல்வாக்கோடு விளங்கிற்று. ஜைனர் காலத்தில் நிலவிய பஞ்சாயத்தின் அடிப்படைத் தத்துவம் எல்லாரும் சமம் என்பதாகுமென்று "ஜைனர் காலத்திலே பஞ்சாயத்துக்கள்" என்ற கட்டுரையில் ரன்ஜன்சுரிதேவா என்பவர் குறிப்பிடுகிறார்.

மகாவீர தீர்த்தங்கரர் புரிந்த போதனைகளின் ஜனநாயகப் பண்பினை அவரது பல்வேறு சொற்பொழிவுகளிலும் காணலாம். "விவகார ரெட்டேஷக் என்தில் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு ஒருவா¢ன்பின் ஒருவராக வரவேண்டியவர்களைத் தேர்தல் மூலம் தேர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் ஆணையிட்டுள்ளார். அவர் போதனையின் ஜனநாயகப் பண்புக்கு அவரது "ஸ்ரமண சங்கம்" ஒரு எடுத்துக்காட்டாகும். அக்கால மக்களைப் பற்றியும் அவர்கள் புரிந்துவந்த பெருவாணிபத்தைப் பற்றியும் ஜைன சமய நூல்கள் குறிப்பிடுகின்றன. டாக்டர் மோதிசந்திரர் என்பவர் புதிதாகச் செய்த தன் அறிவுமிக்க ஆராய்ச்சியிலேயே இவற்றையெல்லாம் நன்றாக விளக்கம் செய்து இருக்கிறார். அந்த ஆராய்ச்சியிலே பல்வேறு யாத்திரை முறைகள¨யும், வாணிப முறைகளையும், பழங்காலத்துப் போக்குவரத்துப் பாதைகளையும் அவர் விளக்கமாகக் கூறியுள்ளார்" என எழுதியுள்ளார்.

இவ்வரலாற்று நிகழ்ச்சியை மகாவீரா¢ன் அறவுரைகளில் ஆழ்ந்த பற்றும் பாசமும்கொண்ட ஜைனப் பேரரசன் சிரேணிக மகாராஜன் வாழ்க்கையிலும் ஆட்சியிலும் விளங்கிய காட்சியைக் காண்போம்.

*"சிரேணிகப் பேரரசன் மக்களுக்குள் உயர்வு தாழ்வுகள், ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசங்களில் நம்பிக்கையில்லாதவர். எவரேனும் தங்கள் குலத்தைப் பற்றியோ, குடும்பத்தைப் பற்றியோ பெருமையாகப் பேசினால் அவர்களைக் கடுமையாகத் தண்டித்து வந்தார். அதுபோன்றே சாதி சமயவெறிகளை வன்மையாகக் கண்டித்துவந்தார். இவ்வேறுபாடுகளை சமுதாயத்திலிருந்து அறவே அகற்ற வேண்டித் தானே தாழ்ந்த குடும்பத்துப் பெண்களையும் ஏழைக் குடும்பத்துப் பெண்களையும் திருமணம் செய்துகொண்டார். தன்னுடைய பெண்களையும் ஏழைக் குடும்பங்களில் மணம் செய்வித்தார். உயர்வு தாழ்வு சாதி சமயவெறிகளைக் கொண்ட மன்னர்கள் போ¢ல் பலமுறைப் படைபெயடுத்து அவர்களின் அகங்காரங்களையும் அடக்கினார் என்றும் கூறப்பட்டுள்ளது.
* Extract from Anciant India Thiru¦uvandas Shaah, Chapter - 12.

சமுதாய ஒற்றுமையை வளர்த்ததுபோலவே பொருளாதார சமத்துவத்தையும் ஜைன சமயம் வற்புறுத்திவந்த தென்பதை "ஆதிகால இந்தியாவில் பொதுவுடைமை" என்ற ஆங்கிலக் கட்டுரையை மொழிபெயர்த்து 9-6-1947 பாரததேவியில் திரு.எஸ்.என்.என்பவர் பின்வருமாறு வெளியிட்டுள்ளார்.

"கிறிஸ்து பிறப்பதற்கு முன் 5 அல்லது 6 ஆம் நூற்றாண்டில், அ·தாவது ஜைன சமயம் தலையெடுத்திருந்த காலத்தில், நம் நாட்டில் பொதுவுடைமை அமுலில் இருந்திருக்கிறது. எல்லா நிலங்களும் பொதுவாக உழப்படும். பலன் எல்லாருக்கும் பங்கிடப்படும், பொது நிலங்களைத் தனிப்பட்டவர்கள் சொந்தமாகக் கொள்ளக் கூடாது. கிராமங்களில் செல்வம் சா¢யாகப் பங்கிடப்பட்டிருந்தது. அப்பொழுது பிச்சைக்காரர்கள் கிடையாது. நிலச் சுவான்தாரும் கிடையாது."


இவ் வரலாற்றுச் சமுதாயத்தைப் பற்றி கம்யூனிஸ்ட் அறிக்கையின் 1888 ஆம் ஆண்டின் ஆங்கிலப் பதிப்பில் எம்.ஏங்கல்ஸ் (F. Engls) எழுதியுள்ள குறிப்பில், "இந்தியாவிலிருந்து அயர்லாந்துவரை எல்லா இடங்களிலும் கிராம சமுதாயங்களே (பஞ்சாயத்து) சமூகத்தின் பூர்வீக வடிவமாக இருந்தனவென்றும், இருந்திருக்கவேண்டுமென்றும், நாளாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தக் கண்டுபிடிப்புக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் பூர்வீக குடிகளின் உறவைக் கண்டுபிடித்து, இந்தப் புராண பொதுவுடைமைச் சமூகத்தின் தன்மையையும் வெளியிட்டார்" என எழுதியுள்ளார். மேல்நாட்டறிஞர் எம்.ஏங்கல்ஸ் எழுதிய வரலாற்றிலும் பண்டைய இந்தியாவின் சமூக அமைப்பின் உண்மையை அறிகின்றோம்.

சீவக மன்னா¢ன் குடியாட்சி :

அறிஞர் எப்.ஏங்கில்ஸ் அறிக்கையை ஆழ்ந்து ஆராயின் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் வாழ்ந்த நமது பாரதநாட்டு மன்னர்கள் முடியாட்சியின் பெயரால் குடியாட்சியே செலுத்திவந்தார்கள் என்பது புலனாகிறது. இவ்வரலாற்றை உறுதிப்படுத்தும் வகையில் சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகட்கு முன்னர் தமிழகத்தில் * இராசமாபுரம் என்னும் நகரைத் தலைநகராகக் கொண்ட ஏமாங்கத நாட்டை அரசோச்சிய தமிழ் மன்னராகிய சீவக மன்னா¢ன் ஆட்சி அமைந்திருந்தது. சீவக மன்னன் வரலாற்றுச் சிறப்பமைந்த மன்னர் பெருந்தகை. அம்மன்னர் பெருமான் மகாவீர வர்த்தமானர் சமவ சரணத்தில் (அறங்கூறும் மண்டபம்) அறங்கேட்டு மகாவீரா¢ன் வாழ்த்துப் பெற்ற வரலாற்றுப் பேரரசன். இம்மன்னர் வரலாற்றைச் சோழர்குல மன்னர்கள் வழித்தோன்றலாகிய தவப்பெருஞ் செல்வர் திருத்தக்கதேவர் சீவக மன்னா¢ன் பெயரையே முன்வைத்து சீவக சிந்தாமணி என்ற பெயரால் இணையற்றக் காவியமியற்றிச் சிறப்பித்துள்ளார் கவிச்சக்கரவர்த்தி. இத் தேவர் பெருமான் அரசர்வழி தோன்றலாகையால் நமது பரத கண்டத்தின் பண்டைய வரலாறுகளை நன்கு பயின்றிருப்பார். எனவே கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் விளங்கிய திருத்தக்கதேவர், தமக்கு ஆயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட சீவக மன்னா¢ன் ஆட்சி முறையை உலகறிய அமைத்துக் காப்பியம் இயற்றி வழங்கியுள்ளார். இவ் ஆட்சி முறை அறிஞர்களுக்கும், ஆராய்ச்சித் துறைப் பேராசிரியர்களுக்கும், புலவர் பெருமக்களுக்கும் அரசியல் நல்விருந்தாகும். அப்பெருவிருந்தை சீவசிந்தாமணி என்னம் பெருங்காப்பியச் சோலையில் நுழைந்து காண்போம்.
* தற்போது ஆந்திராவிலுள்ள இராசமகேந்திரம

சீவகநம்பி, தனது பகைவனாகியக் கட்டியங்காரனைப் போரில் வென்று தமது ஏமாங்கத நாட்டைக் கைப்பற்றிக் கொள்குகின்றார். அந்நாட்டின் தலைநகராகிய இராசமாபுரத்தில் சங்காதனம் ஏறிய சீவக மன்னர், கட்டியங்காரனின் கொடுங்கோல் ஆட்சியால் துன்புற்ற மக்கள் பலரும் தமது ஆட்சியில் இன்புற்று வாழ, வழிகாணச் சிந்திக்கின்றார். அப்பேரரசன் சிந்தனையில் பலதறப்பட்ட திட்டங்கள் உருவாகின்றன. அவ்வாட்சி முறையை நாடெங்கும் பரப்புமாறு முரசறைவோனுக்குக் கட்டளைப் பிறப்பிக்கின்றார். அரசர்பெருமானின் ஆணையை ஏற்ற முரசறைவோன், யானை மீதமர்ந்து சீவக மன்னா¢ன் செங்கோலாட்சியின் சீரிய கொள்கைகளை முரசுகொட்டி முழங்குகின்றான். அம்முழக்கத்தை நாமும் கேட்போம்!

முரசறைவோன் காட்சி


"என்றலுந் தொழுது சென்னி நிலனுறீஇ எழுந்து போகி
வென்றதிர் முரசம்யானை வீங்கெருத்தேற்றிப் பைம்பொற்
குன்றுகண்டனைய கோலக்கொடி நெடுமாட மூதூர்ச்
சென்றிசை முழங்கச் செல்வன் திருமுரசறை விக்கின்றான்
- 2383

மன்னர் ஆணை

"ஒன்றுடைப் பதினையாண்டைக் குறுகடன் இறைவன் விட்டான்
இன்றுளீர் உலகத்தென்றும் உடனுளீராகி வாழ்மின்
பொன்றுக பசியும்நோயும் பொருந்தலில் பகையும்என்ன
மன்றல மருகுதோறும் மணிமுரசார்த்த தன்றே"
- 2384

"நோக்கொழிந் தொடுங்கினீர்க்கும் நோய்கொளச் சாம்பினீர்க்கும்
பூக்குழல் மகளிர்க் கொண்டான் புறக்கணித்திடப் பட்டீர்க்குங்
கோத்தரு நிதியம்வாழக் கொற்றவன் நகரோடென்ன
வீக்குவார் முரசங்கொட்டி விழுநகர் அறைவித்தானே"
- 2385

ஆட்சி இன்பம்

"திருமகள் அருளப்பெற்றுத் திருநிலத்துறையும் மாந்தர்
ஒருவனுக் கொருத்திபோல உளமகிழ்ந் தொளியின் வைகிப்
பருவருபகையும் நோயும் பசியுங் கெட்டொழிய இப்பால்
பெருவிறல் வேந்தர் வேந்தர்க் குற்றது பேசலுற்றேன்"
- 2386

இந்நான்கு பாடல்களிலும் காணப்படும் அரசியல் ஆட்சிமுறை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். இன்றைய உலகமும் - குறிப்பாகப் பாரத சர்க்காரும் விரும்புகின்ற சோஷலிச சமுதாயத்தை இந்நான்கு பாடல்களிலே காண்கின்றோம்.

"இன்றுளீர் உலகத்தென்றும் உடனுளீராகி வாழ் மின்"

என்னும் வா¢யில் இன்று பேசப்படுகின்ற "சகோதர உணர்ச்சி" "தேசிய ஒருமைப்பாடு" "சாதி சமய பேதங்களற்ற சமுதாயம்" என்ற அறிவுரைகளையெல்லாம் திரட்டி ஒருங்கே அமைத்துக் காட்டியுள்ளார் தேவர் பெருந்தகை! அதுமட்டுமா! பசியும், பிணியும், பகையுமின்றி ஆட்சி செலுத்தப்படும் என உறுதிமொழியும் அளிக்கப்படுகிறது! மக்களிடையே பொருளாதாரநிலை வளர்ச்சியுறப் பதினைந்து ஆண்டுகளுக்கு வா¢வஜா செய்துவிடப்பட்ட தெனில் அந்நாட்டு மக்களின் உள்ளங்களின் இன்ப நிலையை உரைகளால் கூறவியலுமோ! அமரருலக வாழ்வை அடைந்து விட்டோம் எனப் பொங்கி பூரிப்படைவார்களன்றோ! இவைகளுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போன்று, கண்ணற்ற மக்களுக்கும், கணவனால் கைவிடப்பட்ட திக்கற்ற மக்களுக்கும், கணவனால் கைவிடப்பட்ட திக்கற்ற மகளிர்களுக்கும் தனிநகர் அமைத்து (காலனி) மன்னர் நிதியில் வாழவழி வகுத்துள்ள மாண்புமிக்கக் கடமைகளையும் தனிநகர் அமைத்து (காலனி) மன்னர் நிதியில் வாழவழி வகுத்துள்ள மாண்புமிக்கக் கடமைகளையும் காண்கின்றோம். இத்தகுதலை சிறந்த ஜனநாயக சோஷலிச சமுதாயத்தில் மக்கள் பலரும் ஒருவனுக்கு ஒருத்தி போல உள மகிழ்ந்து ஒளியில் வாழ்ந்தனர் என்பதையும் அறிவிக்கின்றார்.

இன்றைய பொதுவுடைமை நாட்டைப் பார்த்து எங்கள் நாட்டின் பண்டைய பொதுவுடைமை ஆட்சியைப் பார் என இறுமாப்போடு பேசவும் உள்ளம் எழுகிறது. இப் பொதுவுடைமைப் பொற்காலத்தை மீண்டும் என்று காண்போமோ அறியோம். நமது பாரத நாட்டின் இலக்கியங்களில் ஜைன சமயம் அருளிய அறநெறிகளை மேல் நாடுகளில் பரவச் செய்திருப்பின் இப்புது சகாப்தத்தில் பொதுவுடைமைத் தத்துவத்தை முதன் முதல் உலகுக்கு உரைசெய்த காரல்மார்க்ஸ் அந்நூல்களைப் பொன்னேபோல் போற்றியிருப்பார். தாம் கொண்ட பொருளாதார சமத்துவத்தின் தத்துவம் பாரத நாட்டின் பழம்பெரும் கொள்கையே எனத் தமது நூலில் புகழ்ந்து எழுதியிருப்பார். காரல்மார்க்ஸ் போன்ற ரஷ்ய நாட்டின் மாபெருந் தலைவர் லெனின் ஜைன நூல்களைப் படித்துப் பாராட்டியிருப்பார். ரஷ்ய நாட்டு பொதுவுடைமை நூல்களின் பகவான் விருஷபதேவர் இடம் பெற்றிருப்பார். பாரத நாட்டின் துரதிஷ்டம் முதலாளித்துவ மனப்பான்மையும் சமயக்காழ்ப்பும் அம் மாபெரும் பொதுவுடைமைத் தலைவரையும், அப்பெருமகன் வழிவந்த வர்த்தமான மகாவீரரையும் அவர் தம் அறநெறிகளையும் இருட்டடிப்புச் செய்துவிட்டன. அது மட்டுமின்றி! மகாவீரருக்குப் பின்னர் சமயம், மதம் என்ற பெயரால் பல்வேறு கொள்கைகள் ஆங்காங்கு தோன்றலாயின. அந்தந்த சமயத்தலைவர்கள் தங்கள் தங்கள் கொள்கைகளைப் பரப்பவும் தீவிரமாக ஈடுபட்டனர். மதமாற்றம் செய்யப் பலாத்காரமும் கையாளப்பட்டது. இக்கொடுமையால் மனித சமுதாயம் பிளவுபட்டு வெவ்வேறு குழுவுகளாகப் பிரிந்தன. சகோதர உணர்ச்சி பகைமை உணர்ச்சியாகப் பா¢ணமித்தது. மனிதனுக்கு மனிதன் மதம் என்னும் அரணை அமைத்துக்கொண்டு வாழலாயினர். மதங்களால் நேரும் இவ்விபா£தங்களை அறிந்தே ரஷ்ய நாட்டின் மாபெருந்தந்தை லெனின் "இவ்வுலகில் வெறுத்து ஒதுக்கத்தக்கன மதங்களே" எனக் கடிந்துள்ளார். மதம் மக்களுக்கு அபினி என்றார் மாமேதை காரல்மார்க்ஸ். மதம் அறிவின் எதிரி, அறியாமையின் நண்பன் என்று அழகாக வருணித்துள்ளார் இங்கர்சால். ஆச்சார்ய வினோபாஜீ சமயங்களைப்பற்றிக் கூறுகையில் "உலகில்" எத்தனையோ சமயங்கள் உள்ளன. அவைகள் மக்களை ஒன்றுபடுத்துவதற்கு பதிலாக சிதற அடிக்கின்றன. ஆகவே மதங்களில் எனக்கு அக்கறை கிடையாது" எனக் கூறியுள்ளார் இவ்வுண்மையைத் திருக்கலம்பக ஆசிரியர்,

"சமயவாதிகள் செவிதமில் அறம்புகச் சாற்றுவன்"

எனச் சமயங்களை வெறுத்துப் பண்டைய பொதுநெறியாம் அறநெறியை வற்புறுத்தியுள்ளார். இன்னோரன்ன உண்மைகளை மறந்து, மதநெறியை நோக்கி மக்கள் சமுதாயம் சென்றது. எனவே சமய நெறிகளை வளர்ப்போர் "எவ்வுயிரிடத்தும் அன்பாயிருங்கள்" என்னும் பண்டைய அறநெறிக்கு மாறாகக் கடவுளிடத்தில் அன்பாயிருங்கள் எனத் திசைமாற்றித் திருப்பிவிட்டார்கள். இதனைப் பக்திமார்க்கம் என்றும் கடவுள் நெறி என்றும் கூறி மக்களை மயக்கிவிட்டனர். இக்கொள்கை வளர வளர மகாவீரரும் திருக்குறள் ஆசிரியர் தேவரும் அருளிய அறநெறியாம் அன்பும் அருளும் மக்களிடையே அருகிவரலாயின. இன்று திருக்குறளாசிரியர் உயிரோடிருப்பின் தமிழகத்தின் நிலையைக் கண்டு தலைகுனிவார்! அந்தோ! தமிழ் மக்களே! யான் தொகுத்தருளிய அறத்துப்பாலை மறந்தீரோ! எவ்வுயிரிடத்தும் அன்பாயிரு என்னும் பேரறம் எங்கே? பகுத்தறிவு எங்கே! மெய்ப்பொருள் தெளிந்தீரோ! எவ்வுயிரிடத்தும் அன்பாயிரு என்னும் பேரறம் எங்கே? பகுத்தறிவு எங்கே? மெய்ப்பொருள் தெளிந்தீரா? மாசறு காட்சி மறைந்ததா? பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பிவாழ் என்னும் எனது சமதர்மநெறி எங்கே! எங்கே!! எங்கே என ஏங்கியிருப்பார். 

1   2   3   4   5   6


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com