முகப்பு வாயில்

 


பல்லாயிரவாண்டாகப் பகுத்த பண்பாடும் அறிவும் முதிர்ந்து நின்ற தமிழகம் எத்தகைய புத்தம் புதுக்கருத்துக்கும் நித்தம் வழிகாட்டும் திறனுடைமையைச் செந்தமிழ் இலக்கிய வழிச்சான்று காட்டியுள்ள நம் மஹாவீர நெறியினர் உண்மையில் மாவீரரே.

தாம் கண்ட உண்மைக்கு அரண்செய்யும் வகையில் திருவாளர்கள் H.D. மாளவியா, டாக்டர். மோதி சந்திரர், சர்.ஆர்.கே. சண்முகம் செட்டியார், திரு.வி.க. ஆகியோரின் கருத்துரைகளை எடுத்துக் காட்டியிருத்தல் இன்பூட்டுகிறது.

இச்சிறு நூல் அளவிற் பருத்து வளருதல் வேண்டும். 'Risha¦adeva or Karl Marx' என்னும் தலைப்புடன் ஆங்கில மொழி பெயர்ப்பாகி உலகெங்கும் உலவுதல் வேண்டும். இதுவே என் விருப்பம். தெளிந்த அறிவினர் இங்ஙனமே விரும்புவர் என்பது ஒரு தலை.

சோவியத் ஒன்றியம், சீனா முதலிய நாடுகளில் மக்களிடைக் கலந்து பழகிக் கருத்துப் பா˘மாற்றங்கொள்ளும் வாய்ப்புக்கிட்டிய வேளைகளில் சங்க இலக்கியம் விளங்கும் சோஷலிஸக் கருத்துக்களைப் பல்லிடங்களிலும் எடுத்து மொழிந்தேன். அந்த முயற்சியை இத்தகைய நூல் எளிதில் நிறைவேற்றித் தமிழர் தம் ஏற்றத்தைப் பன்னாடுகளிலும் பறைசாற்றிடும். ஐயமின்று.

திருவாளர் ஸ்ரீபாலின் விளக்கம் தமிழ் நூல்களைப் பயிலும் நன்மாந்தருக்குச் சிறந்த வழிகாட்டியாகும் என்று நம்புகிறேன்.

பிழையற்ற இனிய தமிழிலே உயர்ந்த உண்மைகளை உரைத்து உதவும் நண்பர் ஸ்ரீபால் மாட்டுப் பொ˘தும் நன்றி பாராட்டும் கடப்பாடுடையது நந்தமிழகம்.

ஏனெனில், இந்நூல் சமயப் பரப்புரையன்று. காய்தல் உவத்தல் இன்றிக் காலத்திற்கேற்றவாறு ஆய்ந்து தமிழ்நெறித் தகுதியுயர்வு தோற்றி வீறுகொளச் செய்யும் பெற்றியது இந்நூல்.

வையத்துள் வாழ்வாங்குப் பகுத்துண்டு நன்பொருள் வெ·காப் பொன் மனத்தொடு பல்லுயிரோம்பி வாழ்ந்து இறை நெறி நிற்கும் இயல்பினைச் சுட்டியுரைக்கும் இந்நூல் வழி! நீடுவாழிய ஸ்ரீபால்.

இராம மீனாட்சிசுந்தரம் பிள்ளை

சென்னை
13-1-1961.

சென்னை, பச்சையப்பன் கல்லூரி தலைமைத் தமிழ்ப்பேராசிரியர்,

புலவர் உயர்திரு. அ.மு. பரமசிவானந்தம், M.A., M.Lit., அவர்கள் வழங்கிய

அணிந்துரை

எல்லாரும் எல்லாச் செல்வமும் எய்தலே நாகா˘கம். மக்கள் பண்பாடும் அதுவாகும். உலகில் பிறந்த மக்கள் அனைவரும் ஏன்? - உயிர்கள் அனைத்துமே சமம் என்ற கொள்கை உடையவர் தமிழ்மக்கள். 'எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறென் றறியா' அறவாழ்வே மக்கள் மேற்கொள்ள வேண்டிய வாழ்வாகும். இவ்வுண்மையை மறந்த சிலர் தமக்கென வாழக் கற்றுக்கொண்டார்கள். அதனாலேயே நாட்டிலும் உலகிலும் பல்வேறு வாழ்வுச் சிக்கல்கள் தோன்றலாயின. அவற்றை அறிந்த அறவோரும் நல்லரசியராளரு அவ்வப்போது அறங்கூறியும் ஆணைவழி அமைதி காட்டியும் வந்துள்ளதை வரலாறு காட்டுகின்றது. இந்நிலையில் தமிழ்நாட்டு அரசாங்கம் அண்மையில் 'நில உச்சவரம்புச் சட்டம்' இயற்றியுள்ளனர். அது தனியார் உரிமை பறிக்கப்படும் சட்டம் என்பர் சிலர். ஆனால் நின்று நினைத்துப் பார்ப்பின் அது தனியார் உரிமையைப் பாதுகாப்பதோடு அவர்களுக்கு அறவாழ்வையும் அமைதியையும் அளிக்கிறது என்பதை உணர்வார்கள்.

இக்கொள்கை தமிழர் பழம்பெருங்கொள்கையேதான். மிகுபொருள் விரும்பா அறமே வாழ்வின் அடிப்படையாக அமைய, அறவாழ்வு வாழ்ந்தவர்கள் தமிழர். அவர்தம் வாழ்க்கைநெறி அவ்வக்காலத்து எழுந்த இலக்கியங்களில் விளக்கப்பெறுவதைக் காண்கின்றோம். இந்த மிகுபொருள் விரும்பாநிலையை அறங்கூறும் புலவரும் வாழ்க்கை வரலாறு கூறும் புலவரும் பிறரும் அவ்வப்போது காட்டியுள்ளார்கள். அவற்றையெல்லாம் தொகுத்து, அறிஞர் ஜீவபந்து T.S.ஸ்ரீபால் அவர்கள் இந்த 'நில உச்சவரம்புக் கொள்கை நமது பண்டைய நாகா˘கம்' என்ற சிறு நூலாக வெளியிடுகிறார்கள்.

'ஜீவபந்து' அவர்கள் உண்மையிலே உயிர்களின் நண்பராய் உணர்வுவழித் தொண்டாற்றும் நல்லவர். அவர் வழியாகத் தமிழ்நாட்டில் பல நல்லசெயல்கள் நடைபெற்றுள்ளன. 'பலிநிறுத்தச் சட்டம்' அவரது முயற்சி. அவர்கள் இன்று அரசாங்க நில உச்சவரம்புச் சட்டத்தின் தேவையை கற்றாரும் கல்லாரும் உணர்ந்துகொள்ளும்படி எளிய தமிழில் இனியமுறையில் நல்லமேற்கோள் பலகாட்டி இந்நூலை ஆக்கியுள்ளார். இந்நூல் நாட்டுமக்களுக்கு நன்கு பயன்படும் எனும் துணிபுடையேன். தமிழ்நாட்டு நூல்நிலையங்களுக்கு இந்நூல் அணியாகவும் இன்றியமையாததாகவும் விளங்கும் என நம்புகிறேன். ஆசிரியர் தொண்டும் வாழ்வும் சிறப்பனவாக.

அன்பன்,
அ.மு. பரமசிவானந்தம்

தமிழ்க்கலை இல்லம்
சென்னை - 30
12-11-62

தமிழகம் போற்றும் பேரறிஞரும், பன்னூல் ஆசிரியருமாகிய
உயர்திரு. பி.ஸ்ரீ. ஆச்சாரியார் அவர்கள் அருளிய

ஆய்வுரை

நமது ஜனநாயகக் குடியரசு இந்த நாட்டின் பண்பாட்டுக்கும் நாகா˘கப் போக்கிற்கும் காந்தியடிகளின் கொள்கைகளுக்கும் இசைந்த ஒரு சமதர்ம சமுதாயத்தை வளர்க்கும் வாய்ப்பாக்குவதற்குச் சிறந்த தேசபக்தர்கள் முயன்று வருகிறார்கள். இந்த முயற்சிகளில் ஒன்று நமது காங்கிரஸ் சர்க்காரின் நில உச்சவரம்புக் கொள்கை. இக்கொள்கைக்கும் நமது பண்டை நாகா˘கத்தில் தக்க இடம் உண்டு என்பதை வற்புறுத்துகிறது இச்சிறுநூல்.

நினைப்பிற்கும் எட்டாத காலந்தொட்டு வளர்ந்து வந்திருக்கும் நமது நாகா˘க வரலாற்றிலே முதன்முதல் தயாமூலதர்மத்தை அதாவது அருளை வேராகவுடைய அறநெறியை வற்புறுத்தியவர்கள் ஜைனப் பொ˘யோர்களே. ஜைன சமயத்திலிருந்தே இக்கொள்கையைப் பெளத்தர்களும் பெற்றிருக்கலாம்; சைவ வைணவர்கள் பெற்றுக்கொண்டார்கள் என்பது வரலாறும் இலக்கியமும் ஐயம் திரிபறத் தொ˘விக்கும் செய்தியாகும்.

மிகுபொருள் வெ·காமை, தயாமூல தர்மத்தின் இன்றியமையாத ஒரு பகுதியான கொள்கை. ஜைனப் பொ˘யோர்களைப் பின்பற்றியே திருவள்ளுவர் இக்கொள்கையையும், வற்புறுத்துகிறார் என்ற கருத்து எனக்கும் உடன்பாடுதான். காலஞ்சென்ற எனது பேரன்பர் திரு. வையாபுரிப் பிள்ளை திருவள்ளுவர் ஜைன சமயத்தினரே எனத்துணிந்தார். சமரசப் பெருநோக்குடைய வள்ளுவரை ஜைனராகக் கருதுவதில் தவறு இல்லையென்றே நினைக்கிறேன். திருவள்ளுவா˘ன் பெருங்கொள்கையுடன் வேறு சமண ஆசிரியர்களின் கருத்துக்களையும் இசைத்துத் தமது சமதர்மக் கொள்கையை அரண் செய்துள்ளார் இவ் ஆசிரியர்.

ஜைனக்கொள்கையைப் பின்பற்றியே 'வாமனன் மண் இது - அதாவது நிலம் ஒரு சக்ரவர்த்திக்கோ, முதலாளிக்கோ உரியதன்று; இறைவனுக்கே உரியது - என்ற வைணவக் கொள்கையும் தோன்றியிருக்கக்கூடும். கம்பனது சமதர்மப் பெருங் கொள்கைக்கும் 'மிகுபொருள் வெ·காமை' என்ற ஜைன சமதர்மக் கருத்து வித்தாக அமைந்திருக்கவேண்டும். சுருங்கச் சொன்னால், தமிழ் இலக்கியத்தின் சிறந்த கருத்துக்களுக்கும் சைவ, வைணவ சமயங்களின் அருள்நெறிக் கொள்கைகளுக்கும் மூலமாக உள்ளது தயாமூல தர்மம்தான். இத்தகைய சிந்தனைகளை இன்றைய தமிழ் வாசகர்களுக்கெல்லாம் பயன்தரும் முறையில் இச்சிறு நூல் வாயிலாக வாரி வழங்கியுள்ளார் அன்பர் ஜீவபந்து ஸ்ரீபால். இவரது நன்முயற்சி வாழ்க! வாழ்க நல்லறம்.

பி.ஸ்ரீ.

சென்னை
28-3-61

முக்கிய அறிவிப்பு

இந்நூலில் ஆங்காங்கு ஜைன சமயம் என அழைக்கப்பட்டுள்ளன. அவைகளை சமயம் எனக் கொள்ளாமல் அறம் என்றே கருத வேண்டுகிறேன். ஏன்எனில் இந்நூலில் காணும் இலக்கியங்கள் யாவும் சமயம், மதம் என்ற சொற்களையே கூறாமல் அறம், திருவறம், நல்லறம், பேரறம் என்றே பேசப்பட்டுள்ளன. தற்கால வழக்காற்றைக்கொண்டு ஜைன சமயம் எனக் குறிப்பிட்டுள்ளனவேயன்றி அவைகள் யாவும் அற நெறிகளேயாகும்.

-ஆசிரியர்.

சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் திங்கள் இதழ் 'பாரதி' யின் புகழுரைகள்

வளரும் தமிழில் மலரும் நூல்கள்

1. நில உடைமை உச்சவரம்புக் கொள்கை நமது பண்டைய நாகா˘கமே.

கருத்த உடலும் வெள்ளை உள்ளமும் புன்முறுவல் பூத்த முகமும் எந்நாளும் இன்மொழியே பேசும் இயல்பும் படைத்த ஜீவபந்து ஸ்ரீபால் அவர்களைத் தமிழுலகம் நன்கறியும். சென்ற நாற்பது ஆண்டுகளாகச் சமுதாய சீர்த்திருத்தத் தொண்டு புரிந்து, தொண்டே வடிவமாக அமைந்திருப்பவர் திருவாளர் ஸ்ரீபால். தமிழ் நாட்டுக் கோயில்கள் பலவற்றில் பன்னெடுங்காலமாக நடைபெற்று வந்த உயிர்ப்பலியைத் தடுப்பதற்காகச் சிங்க ஏறுபோல் அவர் தமிழகமெங்கும் சுழன்று ஆற்றியுள்ள அரும்பணிகள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க பெற்றிமை படைத்ததாகும். தலைசிறந்த சீர்திருத்த தொண்டராகிய திருவாளர் ஸ்ரீபால் உயர்ந்த ஆற்றல் படைத்த ஒரு விழுமிய எழுத்தாளரும் ஆவார் என்பதை இந்தப் புத்தகம் எழில்பட எடுத்துக்காட்டுகிறது. நில உச்சவரம்புக் கொள்கை தமிழ் நாட்டுக்குப் புதியது அன்று என்றும், அது நம் பழம்பெரும் நாகா˘கத்தின் பல்வேறு கூறுகளில் ஒன்றே என்றும், தாம் ஈட்டும் பொருள்களில் மிகுதியாய் உள்ளவற்றைப் பதுக்கி வையாமல் பலருக்கும் பயன்படுமாறு உதவவேண்டும் என்பதே பண்டைத் தமிழ்நெறி என்றும், அதுவே சமண சமயத்தின் ஐம்பெருங்கொள்கைகளில் ஒன்று என்றும் இந்நூலில் தக்க சான்றுகளுடன் விளக்கிக் கூறப்பட்டுள்ளன. எங்ஙனம் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலும் மிகுபொருள் விரும்பாமையும் நம் நாட்டில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னிருந்த தலைசிறந்த அறங்களாகப் போற்றப்பட்டு வந்துள்ளன என்பதை விளக்க இந்நூலாசிரியர், திருக்குறள், திருக்கலம்பகம, நீலகேசி, யசோதர காவியம், சீவகசிந்தாமணி, அருங்கலச்செப்பு முதலிய பல இலக்கியங்களிலிருந்தும் பொருத்தமான மேற்கோள்களை எடுத்துக்காட்டியிருக்கும் பெற்றிமை, சுவை மிகுந்ததாக இருக்கிறது. சிந்தனையைக் கிளர்ந்தெழச் செய்யும் சிறப்பு வாய்ந்த நூல் இது. விழுமிய கருத்துக்களை இனிய நடையில் அருமையாக எடுத்து இயம்பி நம் உள்ளத்தில் ஆழமாகப் பதியவைக்கும் ஆசிரியா˘ன் முறை பொ˘தும் பாராட்டுவதற்குரியது.

Dr. NARENDRA KUMAR SETHI, Ph.D.,
Professor : College of ¦usiness Administration
LONG ISLAND UNIVERSITY,
NEW YORK, U.S.A.,

August, 1962

I was very pleased ¦y the dedicated efforts of Mr. Jeeva¦andu Sripal and his associates in developing a ¦etter jain humanitarian atmosphere in the entire region of South India. During my visit Mr. Sripal was very Kind and considerate to me and took lot of pains in my programe arrangements. He is a scholor of great renown and has pu¦lished many good treatises. I wish to God Almighty to ¦e pleased with ever increasing glory and service to mankind.

With regards,
Yours faithfully,
(Sd.) NARENDRA KUMAR SETHI,
NEW YORK, U.S.A.

மொழி பெயர்ப்பு

ஜீவபந்து ஸ்ரீபால் அவர்களின் தொண்டுகளைக் காணும் பேறு எனக்கு அண்மையில் வாய்த்தது. அவரும் அவருடைய நண்பர்களும் தென்னிந்தியா முழுவதும் ஜைன அறநெறியாகிய அஹிம்ஸா தருமத்தைப் பரப்பத் தன்னலமற்ற அரிய பணிபுரிந்து வருகின்றனர். என்னுடைய சென்னை விஜயத்தின்போது எனக்கு மிகுந்த அன்பும் பா˘வும் செலுத்தி என்னுடைய நிகழ்ச்சி முறைகளை மிகுந்த சிரமத்தை ஏற்று அமைத்துக்கொடுத்தார். அவர் ஓர் சிறந்த அறிஞர். ஆராய்ச்சித் துறையில் அவருக்கு ஒரு சீரிய இடம் உண்டு. பல அரிய ஜைனத் தமிழ் ஆராய்ச்சி நூல்களை இயற்றி அவர் வெளியிட்டுள்ளார். அவர் நீண்ட காலம் புகழுடன் விளங்கி மேலும் பல நலன்களைப் புரியவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.

(ஒப்பம்) நரேந்திரகுமார்
அமொ˘க்கா.


நில உடைமை உச்சவரம்புக் கொள்கை நமது பண்டைய நாகா˘கமே

நம் காங்கிரஸ் சர்க்கார் நம் நாட்டு மக்களின் வறுமை வாழ்வையும், பட்டினிப் பேயையும் ஒழித்துக் கட்டக் கங்கணம் கட்டிக்கொண்டுள்ளனர். அதற்காக 'கூட்டுறவுப் பண்ணை முறை', 'நில உச்சவரம்புச் சட்டம்' ஆகியவற்றைக் கொண்டுவர முடிவு செய்து அவைகளுக்குரிய எல்லா ஏற்பாடுகளும் தீவிரமாக நிறைவேற்றி வருகின்றனர். இவ்வா˘ய பொதுநல சமுதாயத்தைப் படைக்கும் நமது காங்கிரஸ் கொள்கையை எதிர்க்கின்றவர்களையும் நாம் காண்கிறோம். இவர்கள் நம் நாட்டின் வரலாற்றையும், பண்டைய இலக்கியங்களையும் நன்கு பயிலாதவர்களாகவோ அன்றிச் சுயநலவாதிகளாகவோ இருக்கவேண்டும். அதுமட்டுமன்று. இவர்கள் மக்கள் நலத்தில் அக்கறை கொண்டவர்கள் அல்லர் என்பதும், கடந்தகாலம் போலவே சாதி, சமயத்தின் பெயரால் உயர்வு தாழ்வு, ஆண்டாள் அடிமை கொண்டதொரு துருப்பிடித்த சமுதாயத்தைத் தொடர்ந்து காணக் கனவு காண்பவர்கள் என்பதும் தெளிவாகிறது.

மிகுபொருள் வெ·காமை


நமது தமிழ் மறையாகிய திருக்குறளில் வெ·காமை என்னும் அதிகாரத்தை ஆராயின், ஒவ்வொருவரும் தங்கள் நிலங்கள் அல்லது பொருள் வருவாய்களுக்கு வரம்பு கோலவேண்டும் என்னும் அறநெறியைக் காணலாம். வெ·காமை என்னும் அதிகாரம் "மிகுபொருள் வெ·காமை" என்ற தலைப்பில் தான் இருக்க வேண்டும். ஆனால் முதலாளித்துவ மனப்பான்மைப் படைத்தவர்கள் அக்கொள்கையை உலகம் அறியாவண்ணம் செய்ய வேண்டி வெ·காமை என்று மாற்றியதோடு அதனடியாக விளங்கும் குறள்களுக்கும் போலி உரை கூறி மறைத்து வைத்துள்ளார்கள்.

"நடுவின்றி நன்பொருள் வெ·கின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்"

என்னும் குறளில், நன்பொருள் என்பதற்குப் பா˘மேலழகர் போன்றவர்கள் பிறருடைய நல்ல பொருள் என உரை கூறியுள்ளார்கள். இவ்வுரைப்படி நோக்கின் திருக்குறளாசிரியா˘ன் பொருளாதாரக் கொள்கையும், அக்காலத்தில் நிலவியிருந்த மிகுபொருள் விரும்பாத மேலான அறநெறியும் மாய்ந்து, மக்களிடையே சுயநலக் கொள்கைகள் வளர்ந்து விடுகின்றன. எனவே, குறளாசிரியர் கொள்கை எதுவென ஆராய்வோம்.

நன்பொருள் என்பதற்கு நல்லபொருள் அல்லது மிகுபொருள் என்பது பொருள். நல்ல என்பதற்கு மிகுதி என்னும் பொருள் உண்டென்பதை "நல்ல மழை பெய்தது", "நன்றாக அடித்துவிட்டான்", என்ற உலகியல் வழக்கிலே காணலாம். தொல்காப்பியத்திலும், "நன்று பொ˘தாகும்," என்பது சூத்திரம். எனவே நடுவின்றி நன்பொருள் என்பதனால் இங்கே நடுநிலைமையின்றி தேவைக்கு மேலானப் பொருளைப் பதுக்கிவைத்தல் என்பது கருத்தாகும். பா˘மேலழகர் கூற்றுப்படி பிறர் பொருள் எனக்கொண்டால், பிறருடைய நன்பொருளை வெ·காமல் தீய பொருள்களை விரும்பலாம் என்றாகிறது. ஆகவே தேவைக்கு மேலான பொருள்களை மேலும் மேலும் சேர்த்துப் பதுக்கிவைத்தல் நேர்மையன்று என்பதுதான் குறளாசிரியர் கொள்கை.

பொருளீட்டுவோர் பேராசையால் பொருளை வரம்பின்றிக் குவிக்கின்றனர். இச்செல்வர்களில் பெரும்பாலோர் தங்கள் கெளரவத்திற்கும் ஆடம்பர வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டுத் தங்கள் வியாபாரம் முதலிய பொருள் சேர்க்கும் துறைகளில் கொள்கைலாபம் அடித்து, பொருளைக் குவிக்கின்றனர். நிலம் பெற்றவர்களும் பொருளாசையால் விளைபொருள்களைப் பதுக்கிவைக்கும் இரக்கமற்ற முறையைக் கையாளுகின்றனர். இவை யாவும் பொருளாதார உரிமையின் பெயரால் நடைபெறுகின்றன. உரிமை பெற்றிருந்தாலும் அம்மிகுதிப்பொருள் பிறருடையதே என்பது தேவர் கருத்து. மக்கள் நலமேம்பாட்டிற்குரிய ஐம்பெரும் அறங்களில் மிகுபொருள் வெ·காமை ஒன்று என்பதையும், அவ்வறத்தை மேற்கொண்டு வாழ்வோரே அறிவுடையார் என்பதையும் விளக்கவே திருக்குறளாசிரியர் தேவர், "அறனறிந்து வெ·கா அறிவுடையார்ச் சேரும்" எனப் பாராட்டியுள்ளார்.

1   2   3   4   5   6


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com