முகப்பு வாயில்

 


இவ்வரலாற்று உண்மைகளைப் புதிதாக யான் இணைத்துக்கொண்டதாக யாரும் நினைக்க வேண்டாம். என் உள்ளத்தில் என்றும் கோயில் கொண்டுள்ள என் அன்புக்கும், மதிப்புக்கும் பெருமைக்கும் உரிய தமிழ்ப் பொயார் காலம் சென்ற திரு.வி.க. அவர்கள் உள்ளத்தில் என்றோ உருவாகிய உண்மைகள். அப் பொயார் இயற்றிய பொருளும் அருளும் என்ற அறிவியல் நூலில் பின்வருமாறு எழுதி நம்மை மகிழ்ச்சியிலாழ்த்திய சில வாகளைக் காண்போம்.

"மார்க்கிஸ் முனிவன் மார்க்கம் கண்டனன்
அந்தமார்க்கம் யாக்கை போன்றது;
மார்க்கிஸ் காந்தி மார்க்க மூலம்
யாதென்றுலகம் ஓதுகின்றது?
ஆதிஅருகன் ஓதினன்மூலம்
அஹிம்சை மேலாம் அறமென முதன் முதல்
ருளிய பெருமை அருகனுக்கு குண்டே
அஹிம்ஸை உயிப்ப்பை அளித்த ஐயன்
சீலப் போர்வையும் சால அமைத்தனன்
சீலம் வளர்வழி கோலினன்! அதுவே
மிகுபொருள் விரும்பாத்தகுதி யிடத்தில்
அகிம்ஸா தருமம் ஆடல் புரியும்
மிகுபொருள் விரும்பும் விலங்குள இடத்தில்
அகிம்ஸை அகலும்; புகுங் கொலைகளவு
மிகுபொருள் விரும்பாத்தகுதி அகிம்ஸை
உண்மை, சீலம், ஒழுக்கம் காக்கும்
பொருளின் நிலைக்கும், அருளின் நிலைக்கும்
உற்றுள் தொடர்பை உற்று நோக்குக"

என அழகாகப் பாடி பொருளாதாரப் பொதுவுடைமைக் கொள்கையே உலகை உய்விக்கும் என்பதை வலியுறுத்தியுள்ளார். இதனால் கார்ல் மார்க்ஸ் கொள்கையை செயல்படுத்திய பெருமை உலகம் போற்றும் மகான் லெனினுக்கே உரியது. பாரத நாட்டு வரலாற்றோடு ஒப்பிட்டு நோக்கின் பகவான் விருஷப தேவர் அருளிய பொருளை வரையறுத்தல் என்ற அறநெறிக் கொள்கையை மாமேரு லெனின் உலகறியச் செய்தார் எனப் பெருமையோடும் உரிமையோடும் போற்றுகின்றோம்.

நம் மதிப்புக்குரிய தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்களைப் போன்று நடு நிலைமையோடு ஜைன இலக்கியங்களைப் பயில்வோருக்குத்தான் ஜைன அறவோர்களின் ஆன்மீக வளர்ச்சியின் விளக்கமும், உலகியல் வாழ்க்கைக்குரிய அரசியல் பொருளாதாரக் கொள்கையும் நன்கு விளங்கும். அவ்வாறின்றி பிறந்துவிட்டோம் என்பதற்காகச் சமயக் காழ்ப்புடன் அவ்விலக்கியங்களைக் காண்போருக்கு உண்மை புலப்படாது. புரிந்தாலும் மறைக்கவே எண்ணந்தோன்றும். இதனால் மக்கள் நிலை மேன்மையுறாது. அறியாமையில் மூழ்குவர்; ஆண்டவன் போல் பாரத்தைப் போட்டுத் துன்பங்களை அனுபவிப்பார்கள். இவ் விபாத நிலைமை உண்டாக்கக் கூடாதென்று உயர்ந்த எண்ணத்தால் திருக்கலம்பக ஆசிரியர் உதீசிதேவர்,

"சமயவாதிகள் செவியினில் அறம்புகச்
சாற்றுவன் காணீரே"

என எச்சாக்கின்றார்.

இனி இங்கே தாம் ஓர் உண்மையை அறிதல் வேண்டும். அவ்வுண்மை நம் அறிவுக்கு விருந்தாகும். ஏன் தெளிவை உண்டாக்கி விழப்படையச் செய்யும்.

இக் கட்டுரையின் ஆரம்பத்தில் பகவான் விருஷப தேவர் வரலாற்றையும், அவர் மக்கள் சமுதாய நல்வாழ்வுக்கு வகுத்தருளிய அறநெறிகளையும், பொருளாதார சமத்துவத்தையும் விளக்கிக் கூறினோம். அத்தகைய அறவோர் மனிதர்குல மாமேதையே.

அப் பெருமக னருளிய வழி நின்று உலக மக்கள் வாழ்க்கையை நடத்திச் சென்ற சான்றோர்களும், அதற்குரிய இலக்கியங்களைப் படைத்தருளிய அறவோர்களும் மானிடர்களே.

பிற்காலத்தில் இக்கொள்கைகளுக்கு மாறாகப் பல்வேறு நெறிகளையும், சாதி சமயம் என்ற பெயரால் வெவ்வேறு சமுதாயங்களையும் உண்டாக்கி மக்களை, சாதியின் பெயரால், ஆண்டவன் பெயரால் பிரித்துப் பெருபாலான மக்களின் வாழ்வை வீழ்ச்சியுறச் செய்தவர்களும் மனிதர்களே! இச்சுயநலக் கொள்கைக்கேற்ப பல நூல்களை இயற்றி, மக்களை மயங்கவைத்த பிற்போக்குப் புலவர்களும் மனிதர்களே!

இன்று இந்த இருபதாம் நூற்றாண்டில் ரஷ்யாவிலே நம் கண் முன்னே தோன்றி இடைக் காலத்தில் ஏற்பட்டப் பிற்போக்குக் கொள்கைகளை வேரறுத்துப் பொதுவுடைமைப் புதுஉலகைப் படைத்து, மக்கள் வாழ்க்கைக் கலைக்குப் புத்தம் புதியதோர் வழி வகுத்தளித்த புது உலகச் சிற்பி லெனினும் மானிடப் பெருந்தகையே. இப் புரட்சித் தலைவரோடு பல இன்னல்களை ஏற்று அப் புதிய பொதுவுடைமைச் சமுதாயத்தை நிலைநாட்டிய வீரர்களும் மானிடர்களே. இப் புரட்சிகரமான இயக்கத்தின் அரசியல் தத்துவங்களை விளக்கிப் பல நூல்களை இயற்றியவர்களும், இயற்றிக்கொண்டு வருபவர்களும் மானிடர்களே!

இவ்வுலகம் எவராலும் படைக்கப்பட்டதல்ல, அணுத்திரன்களாலானது எனக் கூறும் ஜைனம் தவிர ஏனைய சமயங்க ளெல்லாம் தலைகுனியும் வண்ணம் இவ்வுலகம் அணுத்திரளே என்பதை மெய்ப்பித்து, அணுசக்தி பரமாணுக்களின் விவரம், மின்சாரம், வானொலி, டெலிவிஷன், கம்பியில்லாத் தந்தி, செயற்கைக் கோள்கள், சந்திர மண்டல சுற்றுலா போன்ற பல அற்புதச் சாதனைகளை நாளுக்கு நாள் புதிது புதிதாகக் கண்டுவரும் விஞ்ஞானிகளும் மானிடர்களே!

இப் பேருண்மையால் மக்கள் வாழ்க்கை மேம்பாட்டிற்கும், நாகாகத்திற்கும் காரண புருடர்களும், மக்களின் அறியாமைக்கும் வீழ்ச்சிக்கும் காரணமானவர்களும் மனிதர்களாகப் பிறந்து வாழந்தவர்களே யன்றி ஆண்டவன் என்ற காணாப்பொருள் அல்ல என்பதைக் கலங்கரை விளக்கம் போல் கண்டு தெளிந்தோம்.

மறுக்கவியலாத இவ்வுண்மைகளை விளக்கு முகத்தாள் கீழ்வரும் பாடலால் மனிதகுல மாமேரு லெனினைப் போற்றுவோம்.

ஆண்டவன் துணையென நம்பி வாழ்ந்தனம்
ஆண்டவன் செயலென அஞ்சி வீழ்ந்தனம்
ஈண்டிவன் லெனினினும் ஆற்றல் மிக்கவர்
காண்டிலம் உலகிலென்றுவந்து போற்றுவோம்.

வாழ்க நூற்றாண்டு விழா
வளர்க சோஷலிசம்.
 

1  2  3  4  5


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com