முகப்பு வாயில்

 


வரலாற்றுண்மை:

இப்பெற்றிய சிறப்புகள் அமைந்த சமூகப் பொருளாதாரத் திட்டங்களைக் கொண்ட அப்புணித சமதர்ம சமுதாயம் பல்லாயிரம் ஆண்டுகள்வரை நம் பாரத நாட்டில் ஒளிவிட்டு வீசிற்று. தற்கால அரசியல் வார்த்தைகளில் கூறிடின் பாரத நாடெங்கும் ஐனநாயகம், சமூக முன்னேற்றம், சமாதானம் ஆகிய அடிப்படையில் விரிவடைந்திருந்த தெனக் கூற வேண்டும்.

இவ்வுயர் நிலையின் வரலாற்றை 'ஆதிகால இந்தியாவில் பொதுவுடமை' என்ற ஆங்கிலக் கட்டுரையைத் தமிழாக்கம் செய்து திரு. எஸ். என். என்ற அறிஞர் 9-6-1947 ஆம் தேதி பாரத தேவியில் பின் வருமாறு வெளியிட்டுளார்.

"கிருஸ்து பிறப்பதற்கு முன் 5 அல்லது 7ம் நூற்றாண்டில் - அதாவது ஜைன சமயம் தலையெடுத்திருந்த காலத்தில் - நம் நாட்டில் பொதுவுடைமை அமுலில் இருந்திருக்கிறது. எல்லா நிலங்களும் பொதுவாக உழப்படும். பலன் எல்லோர்க்கும் பங்கிடப்படும். செல்வமும் சாயாக பங்கிடப்பட்டிருந்தது. அக் காலத்தில் பிச்சைக்காரர்கள் கிடையாது. நிலச்சுவாந்தாரும் கிடையாது."

இவ்வரலாற்றால் அக்காலத்தில் மிகுபொருள் விரும்பாக் கொள்கையும் பகுத்துண்டு வாழ்தலுமாகிய அஹிம்ஸா சமுதாயம் அமைந்திருந்ததை அறிகின்றோம்.

இவ்வாறு வளர்ந்தோங்கிய சமதர்ம சமுதாயம் எவ்வாறோ மிக மிகப் பிற்காலத்தில் பிளவுண்டது. பல்வேறு சமுதாயங்கள் புகுந்தன. வெவ்வேறு கொள்கைகளைக் கொண்ட பல்வேறு குழுக்கள் உருவாகின. தன்னலமும் தயவின்மையும் தலைவிரித்தாடின. பிற்போக்குவாதிகள் மலிந்துவிட்டனர். ஏகாதிபத்திய இருள் மூடிக்கொண்டது. எங்கும் பிளவு! எங்கும் வேற்றுமை! எங்கும் பகைமை! எங்கும் கலகம்! எங்கும் சுரண்டல்! எங்கும் ஆண்டாள் அடிமை ஆகியவற்றால் நாடெங்கும் அமைதி குலைந்தது. பண்டைய கால சமதர்ம சமுதாயத்தைப் பிற்போக்கு சக்திகள் எதிர்க்கலாயின. அஹிம்சா சமுதாயம், பலாத்காரங் கொண்ட பிற்போக்குக் கூட்டத்தாரால் நசுக்கப்பட்டது. இந்நிலை பாரத நாடெங்கும் ஏற்பட்டது. பெரும்பாலான மன்னர்களும் பிற்போக்குச் சமுதாயங்களை ஆதாக்க முற்பட்டனர். முற்போக்குச் சமுதாயக்களில் பொருளை வரையறுத்தல் போன்றவகைகளால் மன்னர்கள் தங்கள் நாட்டைப் பெருக்கவும், பிற நாட்டு மன்னர்களை அடிமைப்படுத்திப் பொருள் குவிக்கவும் தடைவாயிருப்பதால் வழிவழி வந்த முற்போக்கு சமுதாயத்தைக் கைவிட்டனர். அம் மன்னர்கள் மக்கள் நலத்தைவிடத் தங்கள் ஆடம்பர வாழ்க்கையையே பொதெனக் கொண்டு, அண்டை நாடுகளைக் கைப்பற்றி வாழ நினைத்தனர். பாரத மன்னர்களில் தலைசிறந்த ஜைன மன்னரான அசோக சக்கரவர்த்தியே நாடு பிடிக்கும் ஆசையால் ஜைன தர்மத்தைக் கைவிட்டு, புத்த சமயத்தைத் தழுவிய பின்னரே போரில் ஈடுபட்டார். இவ்வாறே பல மன்னர்களில் பிற்போக்குச் சமுதாயங்களோடு சேர்ந்து முற்போக்குக்கொள்கைகளையும், ஆலயங்கள் போன்ற பல நிலையங்களையும் அழிந்தும், மாற்றியும் தீங்கிழைத்தனர். முற்போக்குச் சமுதாயம் தலையெடுத்திருந்த காலத்தில் நாட்டில் ஒருமைப்பாட்டுணர்ச்சி மேலோங்கி யிருந்ததால் அக்காலங்களில் அந்நிய நாட்டார் எவரும் நம் பாரத நாட்டின் போல் படையெடுக்க வியலாம லிருந்தது என்பது இங்கு நினைவு கூரற்குரியது.

புகழ்பெற்ற ஆங்கிலப் பேச்சானரென மேல் நாட்டாரால் பாராட்டப் பெற்றவரும், பாரத சர்க்காரின் பொருளாதார அமைச்சராக விளங்கியவருமாகிய சர்.ஆர்.கே. சண்முகம் செட்டியார் அவர்கள் 1943ம் ஆண்டில் சென்னையில் நடந்த மகாவீரர் ஜெயந்தி விழாவன்று தலைமை வகித்துப் பேசிய சொற்பொழிவின் இறுதியில்.

"ஜைன சமயக் கொள்கைகள் மட்டும் இந்தியாவில் வலிவுற்று நிலைத்திருந்தால், இன்றைய நிலையில் சிறந்த ஒற்றுமையும், பெருமையும், அமைதியும் வாய்ந்த இந்தியாவை நாம் பெற்றிருக்க முடியும் என நம்புகிறேன்"

என்ற வரலாற்றுச் சிறப்பமைந்த அறிவுரை நம் கொள்கைக்கு அரணாக விளங்குவதைக் காண்கிறோம். அறம் அல்லது ஜைனம் என்ற அந்த ஆதி சமதர்ம சமுதாயம் ஏன் வீழ்ச்சியடைந்தது என ஐயுறும் அறிஞர்களுக்கு இவ்விளக்கம் சாலும் என நினைக்கின்றேன்.

பிற்போக்கு வாதிகள்:

இவ் வரலாற்றுண்மையை மறைக்கப் பிற்போக்கு சக்திகள் ஒன்றுகூடி, பண்டைய சமதர்மக் கொள்கையை அடியோடு அழிக்கப் பலாத்காரத்தைப் பயன்படுத்தியது போன்றே எஞ்சியிருந்த முற்போக்குவாதிகளை அழிக்கத் தெய்வத்தின் பெயராலும் மதத்தின் பெயராலும் புராணங்களையும், கதைகளையும், பாடல்களையும் புனைந்து ஆங்காங்கு படித்தும் பாடியும் அச்சுறுத்தி வரலாயினர். சமதர்ம சமுதாயம் தோன்றிய காலத்திலிருந்து அதன் அடிப்படையில் இந்திய மொழிகளில் இயற்றப்பெற்ற இலக்கியங்களும், திருக்குறள் போன்ற நீதி நூல்களும் எங்கும் பரவி இருந்தமையால் அவ்வழியல் வந்த மக்கள் பலர் இப்புராண அச்சுறுத்தலைப் பொருட்படுத்தாது பாரத நாடெங்கும் பரவியிருக்கின்றனர். பெரும்பாலானவர்களாக இல்லாவிடினும் எல்லாப் பகுதிகளிலும் இன்றும் சிலர் வாழ்த்து வருகின்றனர். பிற்போக்குவாதிகள் தங்கள் புராணக் கதைகளையும் பாடல்களையும் படித்தும் வருவதை இன்றும் காணலாம்.

தினமணியின் போக்கு:

குறிப்பாக, தினமணி பத்திரிகை ஆண்டுதோறும் தமிழ்ப் புத்தாண்டில் மலர் என வெளியிடுட்டு அதில் ஞானசம்பந்தர் கதையைப் புகுத்தி, சமதர்ம சமுதாயத்தைப் படைத்த ஜைன சமயத்தைப் படைத்த ஜைன சமயத்தைப் பழித்துவரும் பிற்போக்கு நிலையை நாம் கண்கூடாகக் காண்கிறோம். இத் திணமணி அடிக்கடி லெனினியக் கொள்கையைக் கண்டித்து எழுதிவரும் போக்கைக் காணும் போது, பண்டைய சமதர்ம சமுதாயத்தைப் பழிக்காமல் இருக்க இயலுமா? ஆகவே, விதையையும் அழிக்கவேண்டும். மரத்தையும் வெட்ட வேண்டும் என்ற குறிக்கோளைக் கொண்ட அப்பிற்போக்குத் தினமணி நள்ளிரவில் காணும் கனவை, உலகெங்கும் வளர்ந்துவரும் சமதர்மக் கொள்கை, பகற்களவாக்கும் என்பதில் ஐயமில்லை.

14-4-70 தினமணியில் வேதம் ஒதுவித்த நாயகன் என்ற தலைப்பில் ஒரு பத்தாம்பசலிக் கட்டுரையாளர் எழுதிய பிற்போக்குக் கதையைக் சிறிது ஆராய்வோம்.

பொய புராணம், திருவிளையாடற் புராணங்களில் வரும் ஞானசம்பந்தர் கதையைக் கொண்டு மதுரையில் ஞான சம்பந்தர் ஜைனர்களோடு வாதம் புரிந்து வெற்றிகண்டதாகவும், ஜைன முனிவர்களில் எண்ணாயிரம் முனிவர்களைக் கழுவேற்றிக் கொன்றதாகவும் பெருமையடித்துக்கொண்டு சைவ சமயத்தவர்களில் சிலர் அப்புராணங்களைப் படித்தும் ஆங்காங்கு பேசியும் வருகின்றனர். இப் பத்தாம்பசலி எழுத்தாளர் செய்யாற்றில் வாதப் போர் நடந்ததாகக் கட்டுரை எழுதியுள்ளார். இது எந்தப் புராணமோ நாம் அறியோம், எவ்வாறாயினும் இப்புராணங்களில் கூறப்படும் வாதப் போர் சொற்போர் அல்ல. வாதம் என்றால் சொற்போர். தர்க்கம் என்றும் பெயர், ஒரு பொருளை அல்லது ஒரு கருத்தை முன் வைத்து ஆதாத்தும் மறுத்தும் பேசுவதற்கே வாதம் என்று பெயர். இதனை முற்போக்குத் தமிழ் இலக்கியமாகிய சூளாமணி காவியத்தில்,

"ஒன்று நன்றென உணர்ந்து ஒருவன் கொள்ளுமேல்
அன்றென ஒருவனுக்கு அறிவு தோன்றுமே"

என அறிவின் ஆற்றலை விளக்கி வாதப் போரின் இலக்கணத்தைப் படம்பிடித்துக் காட்டியுள்ளார். இவ் அறிவியல் தத்துவத்தைச் சிறிதும் அறியாத பிற்போக்கும் புராணங்கள் அனல் வாதம், புனல் வாதம் எனப் பெயாட்டு நீரில், நெருப்பில் ஏடுகளை விட்டுப் பாக்ஷ பார்ப்பதை வாதம் என எழுதப்பட்டுள்ளன. இதற்குக் காரணம் அப் புராணங்களின் காலத்தில் சைவ சமயத்திற்குத் தத்துவங்களையோ, தர்க்க நூல்களோ கிடையா. அதனால் ஜாலவித்தையைப் போன்ற காட்சியைப் புகுத்திப் புராணங்கள் பாடப்பெற்றன.

இக் கற்பனைக் கதையை இக் காலத்தில் தினமணியும் அதன் கட்டுரையாளரும் தங்கள் பிற்போக்குக் கொள்கைக்கு அரணாக அமைத்துக்கொண்டு, முற்போக்கு சமுதாயத்தின் முன்னேற்றத்தைத் தடை செய்ய முயலுகின்றனர்.

அப்புராணங்கள் வாதக்கலையை எவ்வாறு திரித்துக் கூறி ஏய்க்கின்றனவோ அவ்வாறே இயற்கையையும் திரித்துக் கூறும் போலிக் கதையை அலசிப் பார்ப்போம்.

மதுரையைச் சுற்றிப் பல லட்சக்கணக்கான ஆண்டுகளாகப் பல மலைகள் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றன. அக்காலத்திலிருந்தே அம்மலைகளின் உருவ அமைப்புகளைக் கொண்டு ஆனைமலை, பசுமலை, நாகமலை, விருஷபமலை, ஆந்தைமலை எனப் பெயாட்டு அழைத்து வந்துள்ளனர். அவ்வியற்கைத் தோற்றங்களுக்கு அப் புராணங்காரர்கள் கதை கட்டியுள்ள ஏமாற்றலை அம்பலப்படுத்துவோம்.

ஜைன முனிவர்கள் ஞானசம்பந்தர் போல் யானையை, நாகத்தை, பசுவை, விருஷபத்தை ஏவினார்களாம். ஞான சம்பந்தச் சிவபெருமானை வேண்ட அக்கடவுள் அவைகளைக் கற்களாகச் சபித்துவிட்டாராம். அன்ற முதலே யானையும், நாகமும், விருஷபரும் அந்தந்த உருவங்களாகவே கற்களாகிவிட்டனவாம். அவைகள் தாம் ஆனைமலை முதலானவைகளாம். என்னே! இப்புராணங்களின் கற்பனைக் கூற்று; இவ்வாறு சிவபெருமானாகிய கடவுள் தங்கள் பக்கம் நின்று பாதுகாப்பதாகப் பாமர மக்களை மயக்கி, முற்போக்குக் கொள்கைகளை எதிர்க்க ஆள்சேர்க்கும் சூழ்ச்சியே யாகும்.

இங்கே எவராலும் பதில் கூறவியலாத உண்மை ஒன்று உண்டு. மேலே கண்ட ஆனைமலை, நாகமலை, விருஷபமலைகளில் ஜைன முனிவர்கள் தவம் புரிந்த சின்னங்களும், படுக்கைகளும் கி.மு. நூற்றாண்டைச் சார்ந்த பிராமி கல்வெட்டுச் செய்திகளும் இன்றும் காட்சி அளிக்கின்றன. கி.மு. நூற்றாண்டுகளிலேயே ஜினர் பள்ளிகளாக விளங்கி வரும் வரலாற்றை அறியாத அப் புராணங்காரர்கள் கி.பி. வரும் வரலாற்றை அறியாத அப்புராணக்காரர்கள் கி.பி. வரும் வரலாற்றை அறியாத அப் புராணக்காரர்கள் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கூறும் ஞானசம்பந்தர் காலத்தில் யானையும் நாகமும் கற்களாகக் சபிக்கப்பட்டவையெனக் கூசாமல் புராணம் பாடியிருப்பதை நோக்கும்போது அப்புராண ஆசிரியர்களின் அறிவில் ஐயம் ஏற்படுகிற தல்லவா? ஐயம் மட்டு மல்ல கீழ்வரும் கேள்விகளுக்கும் இடம் அளிக்கிறது. "ஐயா, புராணக்காரர்களே!
அப்புராணங்களைப் படித்துப் பிரசங்கம் செய்வோர்களே! உங்கள் கூற்றுப்படி சிவபெருமான் சாபத்தால் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் யானையும் நாகமும் கற்களாக மாறினவென்றால் அதற்கு முன்னரே அம்மலைக் குகைகளில் ஜைன முனிவர்கள் தவம் செய்துவந்துள்ள ஆதாரங்கள் காணப்படுகின்றனவே அதற்கென்ன விடை பகருவீர்கள்" எனக் கேட்பின், விழிப்பார்கள். மேலும் அவர்கள் கூற்றுப்படி கி.பி. ஏழாம் நூற்றாண்டில் நிகழ்ந்ததாக வைத்துக்கொள்வோம். யானையும் நாகமும் மலைகளாய் மாறிய பின்னர், அம்மலைக் குகைகளை ஜைன முனிவர்கள் தவப்பள்ளிகளாக அமைத்துக் கொண்டபோது சிவபெருமான் ஏன் வாளாயிருந்தார்? அம்மலைகளைத் திரும்பவும் உயிர்பெறச் செய்து யானையாகவும், நாகமாகவும் எழுப்பி அம் முனிவர்களை ஏன் விழுங்கச் செய்யவில்லை? அகற்றியும் இருக்கலாமே! இரண்டுமின்றி இன்றளவும் அம் முனிவர்களின் தவப்பள்ளிகள் என்பதைக் காட்டும் சின்னங்களையாவது சிவபெருமான் மறைந்திருக்காலமே! ஏன் அவ்வாறெல்லாம் திருவிளையாடல் புரியவில்லை? எனப் பகுத்தறிவு படைத்த ஒரு சிறு பையன் கேட்டுவிட்டாலும் பதில் கூற இயலாது மெளனம் சாதிப்பார்கள் என்பது நிச்சயம்.

தினமணியும் அதன் கட்டுரையாளரும் மற்றொரு இயற்கைக்கு மாறான, பொய் மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளார்கள். செய்யாற்றில் ஞானசம்பந்தர் ஆண்பனையைப் பெண்பனையாக மாற்றி அற்புதம் புரிந்து, ஜைனர்களை அனல்வாதம், புணல்வாதங்களில் தோற்கடித்ததாகவும் ஆதாரமற்ற செய்திகளோடு ஜைனர்களின் மனம் புண்ணாகிப் பதைக்கும் பல வசைமொழிகளால் ஞானசம்பந்தரைத் தோற்கடிக்கும் வகையில் பழிதூற்றி வெளியிட்டுள்ளார்கள்.

முற்போக்குத்தன்மை வாய்ந்த சமுதாயத்தை அழிக்கப் பிற்போக்கு வாதிகள் மேலே கண்ட கதைகள் போன்று பொய்கள் மலிந்த, வஞ்சனைகள் சூழ்ந்த, வசை மொழிகள் நிறைந்த, பகுத்தறிவுக் கொவ்வாதப் பல புராணங்களை எழுதி மக்களைத் திசை மாற்றித் திரும்பிவிட்டார்கள். இவ்வாறு மூட நம்பிக்கையில் மக்கள் மூழ்குவதைக் கண்டு தான் திருக்குறளாசிரியர் தேவர்,

"எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்ப தறிவு"

என அறிவின் இயல்பை விளக்கி அறிவுக்குச் சுதந்தரமனித்துள்ளார். இவ்வாறு ஆராய்ந்து அறியாத அறிவு அறிவாகாது என்பது தெளிவு.

சமயவெறி கொண்ட பிற்போக்கவாதிகளின் கொள்கைகளைக் காலஞ்சென்ற பாரதப் பிரதமர் ஜவாஹர்லால் நேருஜீ தம் சுய சாதை நூலின் 375ம் பக்கத்தில்,

"மதத்தின் பெயரால் இந்தியாவில் காணக்கூடியவை எனக்கு அருவருப்பை உண்டாக்குகின்றன. மதம் குருட்டுத்தனமான நம்பிக்கைக்காகவும், பிற்போக்குக்காகவும், மூடத்தனமான வெறி, மூடநம்பிக்கை சுரண்டல் ஆகியவற்றுக்காகவும், பொருள் குவிக்கும் வர்க்கங்களை நிலைநிறுத்துவதற்காகவுமே நிற்பதாகத் தோன்றுகிறது. மதக் கண்ணோட்டம் மக்களின் அறநெறி வாழ்க்கைக்கும் ஆன்மீக முன்னேற்றத்திற்கும் உதவுவதில்லை. முட்டுக்கட்டையாகவே செயல்படுகிறது" எனவும், மற்றோரிடத்தில் "மதம் முன்கூட்டியே உருவாக்கப்பட்ட வடிவங்கள், வரட்டுக் கோட்பாடுகள் பொருளற்றுக் கற்பனைகள் ஆகியவற்றில் உண்மையை சிறைப்படுத்த முயற்சிக்கிறது" எனவும் வன்மையாகச் கண்டித்துள்ள அறிவுரைகளே மேலே கண்ட சமயவாதிகளுக்கு அர்ப்பணித்துவிட்டு மேலே செல்வோம்.

விஞ்ஞான அறிவும் பகுத்தறிவும் வளர்ந்து வரும் இக்காலத்தில் மேலே கண்ட பிற்போக்குப் புராணக் கதைகளை யாரும் ஏற்க மாட்டார்களாயினும், சமயக் காழ்ப்புடையோரால் சமய சார்பான இதழ்களில் வெளியீட வேண்டிய இவ்வகுப்புவாதக் கதைகளை அரசியல் வேடத்தில் வெளிவரும் தினமணியில் வகுப்புவாதத் தீயை மூட்டும் போலிக்கதைகளை அவ்வப்போது வெளியிட்டு வரும் தினமணியின் பிற்போக்குத் தன்மையையும் வகுப்புவாத வெறியையும் வண்மையாகக் கண்டித்து எச்சாக்கின்றோம்.
 

1  2  3  4  5


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com