முகப்பு வாயில்

 

இவ்வாறே, மேல்நாட்டுப் பேராசிரியர் கால்டுவெல்துரை மகனார் தம் நூலில் "ஜைன சமயம் தமிழகத்தில் சிறப்புற்று விளங்கியது அரசியலில் அன்று; கல்வித்துறையிலும் அறிவுத்துறையிலுமேயாம். உண்மையில் அவர்கள் காலமே தமிழ் நாகாகத்தின் பொற்காலம் எனலாம்!" என எழுதியுள்ளார்.

ஆகவே சிலப்பதிகாரத்தினை ஒவ்வொரு எழுத்தாக ஆராயின் இளங்கோவடிகள் சமயம் ஜைனம் என்பது வெள்ளிடைமலை போல் விளங்கும். சிலப்பதிகாரத்தினைச் சமய நூலாகக் கொள்ளாது சாத்திர நூலாகக் கருதவேண்டும். அடிகள் அந்நூலினை அவ்வாறு காவியமுறையில் அமைத்திருக்கின்றார். அக்காலப் பழக்க வழக்கங்களுடன் தமது சமய கருத்துக்களை ஆங்காங்கு புகுத்தி, மக்களுக்கு நல்வழி காட்டியுள்ளார். ஆகவே பண்டைய நூல்களைப் பதிப்பிக்க விரும்பும் ஆராய்ச்சியாளர்கள் அந்நூல்கள் ஏற்பட்ட காலத்துச் சமயங்களையும், அவைகளின் கோட்பாடுகளையும் கசடற கற்கவேண்டும். இல்லையேல், அவர்கள் ஆராய்ச்சி பயனற்றதாகும். நச்சினார்க்கினியர் என்னும் உச்சிமேற் புலவரே இதற்குச் சான்றாக விளங்குகின்றார். சமய உணர்ச்சிகொண்ட உள்ளத்தவரால் வெளியிடப்படும் ஆராய்ச்சி நூல்கள் நாட்டுக்கும் சிறப்பாகத் தமிழ்மொழி வளர்ச்சிக்கும் தீங்கையே விளைவிக்கும். எனவே, நடு நின்றாராயின் நாம் இதுவரையில் கூறிவந்தவாறு இளங்கோவடிகள் உலகுக்கென அறம் வகுத்தருளியதால் அவர்கள் சமயச் சார்பற்றவர்கள் என்பது வெளிப்படுகின்றது. இத்தகைய சமயச் சார்பற்ற பொது நெறியொன்றே தொன்மைவாய்ந்த தமிழர் நெறி யென்பதையும் அறிந்து இளங்கேவடிகளைப் போற்றுவோம். இளங்கோவடிகள் போற்றிய அறநெறிகளைக் குறித்து இருபெரும் அறிஞர்கள் போற்றும் புகழுரையை வாசகர்கள் படித்தறிந்து உண்மை காண வேண்டுகிறேன்.

பூதான இயக்கத்தைத் தோற்றுவித்து நடைமுறையில் செயலாற்றிவரும் ஆச்சர்ய வினோபாஜி ஜைன சமயத்தைக் குறித்துப் பேசுகையில், (ஆதிபகவனும் ஆச்சார்ய வினோபாஜியும் என்னும் நூலில் பார்க்க.) "இந்தியாவின் இடைக்கால வரலாற்றைக் காணும் போது ஆசிரியர்கள் ஜைனராகவும் மாணவர்கள் இந்துக்களாகவும் இருந்தனர் என்று தொகின்றது. மராட்டிய தேசத்தில் முதன் முதல் குழந்தைகளுக்குப் பாடங் கற்பிக்கும்போது கணேசருக்கும், சித்தருக்கும் முதலில் வழிபாடு செய்யச் சொல்லிப் பிறகுதான் மற்றைய பாடல்களைத் தொடங்குவார்கள். இந்துக்கள் எல்லோரும் கொண்டாடும் தெய்வமாக இருப்பதால், கணேசருக்கு முதலில் வழிபாடு செய்யும்படி ஜைன ஆசிரியர்கள் கற்பித்தனர். பகவான் விருடப தேவருக்கு மறுபெயர் சித்தன் என்பது. எனவே சித்தனை வணங்கும்படி அடுத்தபடியாக கற்பித்தனர். சமுதாயத்தில் ஜைனர்கள் எவ்விதமான செல்வாக்குப் பெற்றிருந்தனர் என்பதை இந்த உண்மைகள் நன்கு எடுத்துக்காட்டும். ஜைனர்கள் தங்களுக்கென்று சில தனி உரிமைகளை எப்பொழுதும் வேண்டுவதில்லை. அவர்கள் தங்களைச் சீர்திருத்தக்காரர்களாகவே கருதினார்கள். அவர்கள் செய்த பணியும் அதுவேதான். அவர்கள் மக்களை அறிவுடையவர்களாகவும் சீர்திருத்தக்காரர்களாகச் செய்யவுமே விரும்பினர்" எனப் புகழ்ந்துள்ளார். இவ்வளவு சிறப்புற்றோங்கிய அறிவியக்கக் கொள்கையையுடைய ஜைன சமயத்தைக் குறித்து உலகமெங்கும் புகழ்பெற்றவரும், மத்திய சர்க்காரில் நிதியமைச்சராகப் பணியாற்றிய அறிஞருமான உயர்திரு. ஆர்.கே. சண்முகம் செட்டியார் அவர்கள் 1943ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி சென்னையில் நடந்த மகாவீர ஜெயந்தி விழாவில் தலைமைதாங்கி பேசிய அறிவுரையின் சுருக்கத்தையும் காண்போம் :

"இன்றைய விழாவில் கலந்துகொள்ளவும், குருதேவர் மீதுள்ள எனது பக்தியையும் அன்பையும் காட்டவும் சந்தர்ப்பம் கிடைத்ததற்கு மகிழ்கின்றேன்.

சமண சமயப் பெருமை பற்றியோ அல்லது அதன் ஸ்தாபகான் உயர்வைக் குறித்தோ பேசுவதற்கு நான் சிறிதும் ஆற்றலற்றவன் என்றே கருதுகிறேன். ஆனால், இந்தியக் கலை வளர்ச்சியில் சமணர் எடுத்துக்கொண்ட பங்கு ஒப்பற்றது என்று கூறக்கூடிய அளவு நான் படித்திருக்கிறேன் என்று சொல்லமுடியும். தமிழ்இலக்கிய வளர்ச்சிக்காகச் சமணர்கள் மேற்கொண்ட அரும்பணி வெறும் வார்த்தைகளால் அளவிடக்கூடியதல்ல என்பதை ஒரு தமிழன் என்ற முறையில் என்னால் மறக்க முடியவில்லை. தமிழ் மொழியிலுள்ள உயாய நூல்களில் சில சமணர்களால் எழுதப்பெற்றவை என்பதைத் தமிழ் மொழியைக் கற்ற நீங்கள் யாவரும் அறிவீர்கள். குறள், சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், நாலடியார் ஆகியவை தமிழ் நாகாகத்திற்காகவும், தமிழ்க் கலைக்காகவும் சமணர்கள் புரிந்த அருந்தொண்டின் ஞாபகச் சின்னங்களில் சில. தென்னாட்டுச் சமணர்கள் தமிழ் இலக்கியத்திற்காக உழைத்திராவிடின் அரிய பொக்கிஷங்கள் பலவற்றை இழந்திருப்போம்.

வாழ்க்கையின் அடிப்படையான உண்மைகளில் எல்லா உலக மதங்களும் பொதுவாக உள்ளன என்பதில் ஐயமில்லை. ஆனால், அகிம்சைக் கொள்கையினைச் சிறிதும் விட்டுக்கொடுக்காது வற்புறுத்தி வருவதில் சமண சமயம் உலகில் ஒப்பற்றுப் பிரகாசித்து வருகிறது. இந்த அஹிம்சாக் கொள்கை இன்றைய ஆங்கில மொழியில் 'Non-Violence'-பலாத்கார மின்மை- என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இம்மொழிபெயர்ப்பு வலுவற்றது. ஏன்? தப்பானது என்றே கூறலாம். நமது நாட்டில் இதற்கு விசித்திர வியாக்கியானங்களும், வாதங்களும் ஏற்பட அது ஏதுவாக இருந்தது. அகிம்சை என்னவென்று நாம் உணர்ந்துள்ளபடி அதனைப் பயன்படுத்தின், சமயக் கொள்கைகளாயினும் சா, ஆன்மிகத் துறையிலாயினும் சா அல்லது தினசா வாழ்க்கையிலாயினும் சா - இவ்வளவு பொய விவாதங்களுக்கு வழியே யிராது. மனித வாழ்க்கையில் அதனை மேற்கொள்ள வேண்டுவதைச் சிறிதும் விட்டுக்கொடுக்காமல் பிடிவாதமாக மேற்கொண்டிருப்பதால்தான் இந்தியாவிலுள்ள மதங்களில் அது ஒப்பற்றது என்று கூறத்துணிகிறேன். சமண சமயக் கொள்கைகள், அதன் வரலாறு, ஆற்றிய அரும்பணிகள், ஆகியவை பற்றிய எனது அபிப்பிராயங்கள் மேலே நான் குறிப்பிட்ட தமிழ் நூல்களை ஆதாரமாகக் கொண்டவையேயாகும்.

சமணர் இயற்றிய இந்நூல்களின் ஆசிரியர் யார் என்பது குறித்துச் சில தமிழ் அறிஞர்களிடையே அபிப்பிராய பேதங்கள் சமீபத்தில் ஏற்பட்டிருக்கின்றன. இளங்கோவடிகளும், திருவள்ளுவரும் சமணர்களல்ல சைவ சித்தாந்திகள் தாம் என்பதை நிலைநாட்ட ஆராய்ச்சி கட்டுரைகளும், விரிவான நூலாராய்ச்சிகளும் எழுதப்பட்டிருக்கின்றன. இத்தகைய பேரறிஞர்களைத் தங்கள் சமயத்தைச் சார்ந்தவர்கள் என்று மக்கள் கூறுவதில் ஆச்சாயப்படுவதற்கெதுவுமில்லை. சாத்திர ஞானமுள்ளவர்களும், ஆராய்ச்சியாளர்களும் இத்தகைய உணர்ச்சி கொண்டிருந்தால் தவறு என நான் கருதுகிறேன்.

திருவள்ளுவர் ஒரு சமணராக விருந்த காரணத்தால் சைவசித்தாந்தமோ அல்லது ஹிந்து மதமோ தனது ஒப்புயர்வற்ற பெருமைகளில் எதையும் இழந்துவிடும் என்று நான் நினைக்கவில்லை. இப்பேராசிரியர்கள் எழுதிய நூல்கள், இவர்கள் தம் மதத்தில் சேர்ந்தவர்கள் என்று கூறக் கூடிய தன்மையதாக இருப்பதொன்றே அவர்களில் சமரச மனப்பான்மையையும், பரந்த நோக்கத்தையும் தெளிவுறுத்துகின்றன. எந்தச் சமயங்களும் திருவள்ளுவர் தம் மதத்தினர் என்று கொள்வதில் பெருமையடைவது சகஜமே.

இந்தியாவின் இவ்வுயர் சமயத்தின் உண்மையான பெருமையின் அடிப்படையான காரணம் எதுவாயிருக்கும் என்று அறிந்து கொள்வது ஒரு ருசிகரமான சாத்திர ஆராய்ச்சியாகும் எனத் தோன்றுகிறது. மிகத் தெளிவான - மறுக்க முடியாத - உண்மையான சாத்திர ஆதாரங்கள் எதுவுமில்லாத நிலையில் ஏதேனும் ஒன்றை ஊகித்துக்கொள்வதற்கு இடமுண்டு. எனவே, எனது ஊகமும், அவ்வித உணர்ச்சியின் பாற்பட்டதேயாகும். அத்தகைய அபிப்பிராயத்தோடு இப்பெருஞ் சமயத்தை நோக்கின், இதுவே இந்தியாவின் மிகத்தொன்மையான சமயம்; ஆரியர்கள் இந்தியாவில் குடியேறியபோது, பாஞ்சாலத்தில் வேதங்கள் தொகுக்கப் பெற்றபோது, மிக உன்னத நிலையில் பரவியிருந்ததென்று எண்ணத் தூண்டுகிறது.

மகாவீரப் பெருமானின் ஆன்மிக சக்தியே புத்த பிரானைத் தோற்றுவித்தது எனலாம். மகாவீரப் பெருமானும் புத்தபிரானும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. மகாவீரர் தோற்றுவித்த தவப் புரட்சிக் கொள்கையையே புத்தர் பின்னர் எங்கும் பரவச் செய்தார். சாத்திர உண்மைகள் எவ்வாறாயினும், நாம் எச்சமயத்தைச் சார்ந்தவர்களாயினும், சமணம் போன்ற ஒப்புயர்வற்ற சமயத்தை உலகிற்களித்த பொயோர்களுக்குத் தலைவணங்குதல் நம் கடனாகும்.

இந்து சமயாசாரிகள் தங்கள் சமயத்தைத் தென்நாட்டில் புனருத்தாரணம் செய்வதற்காகவும், சமண சமயத்தை ஒழிப்பதற்காகவும் மிகக் கொடுமையான முறைகளைக்கூடக் கையாள வேண்டியிருந்தது என்ற விஷயம் ஒன்றே சமண சமயம் தென்நாட்டு மக்களின் உள்ளத்தில் வேரூன்றியிருந்ததென்பதை நிரூபிக்கப் போதியது. சமீபத்திலுள்ள சாத்திர சிலாசாசன ஆராய்ச்சிகள் ஆரியர் இந் நாட்டுக்கு வரு முன்னர் இந்தியாவில் மிகவும் பொய நாகாகம் இருந்து வந்ததென்று அறிஞர்களை எண்ணச் செய்துள்ளன. இதனை, வசதியை முன்னிட்டு, நான் திராவிட நாகாகம் என்று அழைக்க விரும்புகின்றேன். ஏனெனில், இந்நாளில் திராவிட நாகாகம் என்ற வார்த்தைகள் வீண்விதண்டா வாதங்களைக் கிளப்பியுள்ளனவாயினும், ஆரியர் வருமுன்னர் இங்கு வதிந்து வந்த திராவிட மக்களின் சமயம் சமணமாக இருந்ததால், திராவிட நாகாகம் என்று கூறுவதே சா என்று நான் கருதுகிறேன். ஆரியர் தங்களது தனிக்கொள்கையின்படி சடங்குகளும் உயிர்ப்பலிகளும் செய்பவர்களாக இருந்து வந்தனர். இப் புதுக்கொள்கை சமண சமயத்தின் அடிப்படைக்கொள்கைக்கே முற்றும் முரணாக இருந்ததால் மக்களிடையே பெரும்புரட்சி மனப்பான்மையை உண்டு பண்ணிற்று. எனவே, மகாவீரப் பெருமானின் காலத்தில் அஹிம்சாக் கொள்கையை மீண்டும் வற்புறுத்தி அதற்கு முதல் இடம்கொடுக்க வேண்டியதாயிற்று.

சமண சமயம் மட்டும் இந்தியாவில் வலிவுற்று நிலைத்து இருந்திருந்தால், இன்று கிடைத்திருப்பதை விடச் சிறந்த ஒற்றுமையும் பெருமையும் வாய்ந்த இந்தியாவை நாம் ஒரு வேளை பெற்றிருக்க இயலும் என நான் நம்புகிறேன்.'1

இவ்வாறு பேரறிஞர்கள் பலர் கூறும் வரலாற்றுச் செய்திகளை மெய்ப்பிக்கும் வகையில் யஜுர் வேதம் 19-ஆம் அத்தியாயம் 44-ஆம் சூத்திரத்தில்,

"ஓ அருகனே! நீ வஸ்துஸ்வரூபமாகிய அம்பை
யும், உபதேசமாகிய வில்லையும், நன்கு கடை
யிலாஆத்ம குணங்களை ஆபரணங்களாகவும்
கொண்டுள்ளாய்; ஓ அருகனே! நீ விஸ்வ ரூப
பிரகாசமாகிய கேவல ஞானத்தை அடைந்
துள்ளாய். நீ இந்தச் சம்சாரத்திலுள்ள
எல்லா ஜீவன்களையும் ரக்ஷக்கின்றாய். காமாதி
களை வென்றவனே! உனக்கு நிகரான எந்தப்
பலவானும் இல்லை"

எனப் பகவான் விருடபதேவரை (ஆதிபகவனை)ப் போற்றியிருக்கிறது. இதனால் வேத காலத்திற்கு முன்னரே சமயசார்பற்ற அறநெறிகள் கொண்ட ஒரு போயக்கம் (ஜைன சமயம்) திறவறம் அல்லது நல்லறம் என்னும் பெயரால் மக்களின் அறிவையும் ஒழுக்கத்தையும் வளர்த்து வந்திருக்கின்றது. இவ்வருள் இயக்கத்தின் வழிநின்று பல அறவோர்கள் பாரத நாட்டிலும் உலகத்தின் பல பாகங்களிலும் பகவான் விருஷபதேவர் அற நெறியைப் பரப்ப பல கலைக்கோயில்களையும் இயற்றி மக்கள் பண்பை வளர்த்துள்ளார்கள். இவ் அறவோர்கள் வழித் தோன்றலே நமது இளங்கோவடிகளாரும் என்பதைப் பல வகையாலும் ஆராய்ந்தறிந்தோம். இனி அப்பெருமகன் அருளிய அறவுரைகளாம் திறவற அமிர்தை1 உண்டு உண்மை காண்போம்! உயர்வடைவோம்!

"தொவுறக் கேட்ட திருத்தகு நல்லீர்!
பாவும் இடுக்கணும், பாங்குற நீங்குமின்;
தெய்வம் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்;
பொய்யுரை அஞ்சுமின்; புறஞ்சொல் போற்றுமின்;
ஊன் ஊண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்;
தானம் செய்மின்; தவம்பல தாங்குமின்;
செய்ந்நன்றி கொல்லன்மின்; தீநட்பு இகழ்மின்;
அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்:
பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்;
பிறர்மனை அஞ்சுமின்; பிழைஉயிர் ஓம்புமின்;
அறமனை காமின்; அல்லவை கடிமின்;
கள்ளும், களவும், காமமும், பொய்யும்.
வெள்ளைக் கோட்டியும், விரகினில், ஒழிமின்;
இளமையும், செல்வமும், யாக்கையும், நிலையா;
உளநாள் வரையாது; ஒல்லுவது ஒழியாது;
செல்லும் தேஎத்துக்கு உறுதுணை தேடுமின்;
மல்லல்மா ஞாலத்து வாழ்வீர் ஈங்குஎன்."

திரு அறம் வளர்க!


குறிப்பு நூல்கள் பட்டியல்

அருங்கலச்செப்பு - க.ப. அறவாணன், ஜைன இளைஞர் மன்றம், சென்னை-17.
1977
அறநெறிச்சாரம் - எஸ். ராஜம் பதிப்பு, சென்னை-1.
1959
கொங்கு மண்டல சதகம் - தி.அ. முத்துசாமிக் கோனார் பதிப்பு,
1923
சிலப்பதிகார மூலமும் - உ.வே. சாமிநாதையர் பதிப்பு
அடியார்க்கு நல்லாருரையும் 1892
சீவகசிந்தாமணி மூலமும் - டாக்டர். உ.வே. சாமிநாதையர் பதிப்பு
நச்சினார்க் கினியருரையும் 1969
சூளாமணி - டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலைய வெளியீடு-10.
1962
சூடாமணி நிகண்டு - சென்னை அ. இரங்கசாமி

மூலமும் உரையும் - முதலியார் சன்சு பதிப்பு 1939

சேந்தன் திவாகரம் - சை.சி.நூ.கழகம் பதிப்பு 1958

திருக்கலம்பகம் - மு. இராகவையங்கார் பதிப்பு, திண்டிவனம், 1935

திருக்குறள் - ஆறுமுக நாவலர் பதிப்பு, வித்தியா நுபாலனயந்திர சாலை,
சென்ன பட்டணம், பிரமோதூத ஆண்டு

திருத்தொண்டர் மாக்காதை - சை.சி.நூ. கழகம் பதிப்பு, 1970

திருப்பாமாலை - மேல் மின்னல் சக்கரவர்த்தி நைனார் பதிப்பு, 1944

தொல்காப்பியம் - எழுத்ததிகாரம், இளம்பூரணம், தூத்துக்குடி வ.உ.சிதம்பரம், பதிப்பு 1941
தொல்காப்பியம் - எழுத்ததிகாரம், நச்சினார்க்கினியர், சி.வை. தாமோதரம்பிள்ளை பதிப்பு,
கரவருடம்
தொல்காப்பியம் - பொருளதிகாரம், இளம்பூரணம், சை.சி.நூ. கழகம் பதிப்பு,
சென்னை-1. 1969
நாலடியார் - வீ. ஆறுமுகஞ் சேர்வை, ஆனந்தபோதினி, சென்னை, 1932
நீலகேசி - பேராசிரியர் ஆ. சக்கரவர்த்தி நைனார் பதிப்பு, சென்னை, 1936
பழமொழி நானூறு - சை.சி.நூ. கழகம் பதிப்பு, 1967
புறநானூறு மூலமும் - சா. கலியான சுந்தரையர் பதிப்பு, சென்னை, 1950
உரையும்
மேருமந்தர புராணம் - பேராசிரியர் ஆ.சக்கரவர்த்தி நைனார் பதிப்பு, சென்னை 1923
வளையாபதி - சை.சி.நூ. கழகம் பதிப்பு, சென்னை.

 

1   2   3   4   5   6   7   8   9   10  11   12   13   14  15   16  17  18  19


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com