முகப்பு வாயில்

 

இச்சாரண முனிவர்கள் யாவரும் வானில் உலவும் சக்தி வாய்ந்தவர்கள். இவர்கள் ஆகாயத்தினின்றும் இறங்கி, உலக நோன்பிகளுக்கு அறம் உரைப்பார்கள்.

"பொலம்பூம் பிண்டி நலங்கிளர் கொழுநிழல்
நீரணி விழவினும் நெடுந்தேர் விழவினும்
சாரணர் வரூஉந் தகுதியுண் டாமென
உலக நோன்பிக ளொருங்குட னிட்ட
இலகொளிச் சிலாதலம்" (சிலப்பதிகாரம், 1:10:21-25)

என்பதாலும்,

"நீரினில் பூவில் வானில் நினைத்துழி யொதுங்கு கின்ற
சாரண ரெண்ம ராவார் சமணா லிருந்தி பெற்றோர்"
(சூடாமணி நிகண்டு, மக்கள் பெயர்த் தொகுதி, 4)

என்னும் சூடாமணி நிகண்டாலும், சாரணர் சமணர் என்பது புலப்படுகிறது.

இவ்வாகாயசாரிகள் நமது செங்குட்டுவனுக்கும் காட்சியளிக்கின்றார்கள். கால்கோட் காதையில்,

"விசும்பியங்கு முனிவர் வியனில மாளும்
இந்திர திருவனைக் காண்குது மென்றே
அந்தரத் திழிந்தாங் கரசுவிளங் கவையத்து
மின்னொளி மயக்கு மேனியொடு தோன்ற
மன்னவ னெழுந்து வணங்கிநின் றேனைச்
செஞ்சடை வானவன் அருளினில் விளங்க
வஞ்சித் தோன்றிய வானவ கேளாய்
மலயத் தேகுதும் வான்பே ரிமய
நிலயத் தேகுதல நின்கருத் தாதலின்
அருமறை அந்தணர் ஆங்குளர் வாழ்வோர்
பெருநில மன்ன காத்தனின் கடனென்
றாங்கவர் வாழ்த்திப் பெயர்ந்ததற் பின்னர்" (சிலப்பதிகாரம் 3:26:93-104)

என வருகின்றது. இவ்வாய காட்சியை, சிலப்பதிகாரத்தை ஆராய்ந் தெழுதிய புலவர்கள் யாவரும் விளக்காது விட்டுவிட்டனர்.

"செஞ்சடை வானவன் அருளினில் விளங்க" என்னும் வாயை மட்டும் ஆண்டு, செங்குட்டுவன் சிவபெருமான் அருளால் வந்தவனெனப் பெரும்பாலோர் எழுதியுள்ளார்கள். இக்காதைக்கு அடியார்க்கு நல்லார் உரையோ மறைந்து போயிற்று. அரும் பதவுரை யாசிரியன் உரையோ இவ்வாகளுக்கு மட்டும் காணோம். எழுதினாரோ அல்லது மறைந்ததோ நாம் அறியோம். இவ்வாகளில் தான் செங்குட்டுவன் சமயம் நன்கு காட்டப்படுகிறது. சாரணர்கள் வருகின்றார்கள். அவர்களைக் கண்டதும் செங்குட்டுவன் இடம் விட்டெழுந்து வணங்கி நிற்கின்றான். இக் காட்சியிலேயே செங்குட்டுவன் சமயம் ஜைனம் என்பது தெளிவாகிறது. மேலும் அச்சாரணர்கள் மன்னனை நோக்கி,

செஞ்சடை :

"செஞ்சடை வானவன் அருளினில் விளங்க
வஞ்சித் தோன்றிய வானவ கேளாய்"

என விளிக்கின்றார்கள். இவ்வாகளில் வரும் செஞ்சடையைச் சிவபெருமானுக்குரியதாகப் பெரும்பாலோர் எண்ணிவிட்டார்கள். இங்கே காணும் "செஞ்சடை வானவன்" என்பது பகவான் விருஷபதேவரைக் குறிக்கும். இவரே ஜைன சமயத்தைத் தோற்றுவித்தவரும், உலக முதல் பேராசிரியரும், உலக முதல் தலைவரும், உலக முதல் முனிவரும், உலக முதல் இறைவனும் ஆவார். இவருக்கும் சில காலம் சடை இருந்தது. இவர் தவமியற்றிய காலையில் தொடர்ச்சியாக ஒரு வருடம் தவ நிலையில் நிற்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. வெய்யிலிலும் மழையிலும், பனியிலும் அசையாது நின்று தவமியற்றினார். சடை வளர்ந்து காட்சியளித்தது. தவத்தால் வளர்ந்த சடையாகையால் அதனை செஞ்சடை என வருணித்துள்ளார். இவ் வுண்மையை மகாபுராணம் என்னும் ஜைன நூலில் விரிவாகக் காணலாம். புற நானூற்றிலும் பின் வருமாறு வருணிக்கப் பெற்றுள்ளது.

"நன்றாய்ந்த நீணிமிர்சடை
முதுமுதல்வன் வாய்போகா
தொன்று புரிந்த வீரிரண்டின்
ஆறுணர்ந்த வொருமுதுநூல்
இகல்கண்டோர் மிகல்சாய்மார்
மெய்யன்ன பொய்யுணர்ந்து
பொய்யோராது மெய்கொளீஇ" (புறநானூறு 166)

என்னும் வாகளில் பகவான் விருஷபதேவான் சடையைக் காண்கிறோம். திருக்கலம்பகம் என்னும் நூல் செஞ்சடையை,

"யான்றமெய் யறம்வளர்க்கும்
மூன்றுகண் முனித்தலைவன்
யாலநெடு நிழலமர்ந்தனை
தாழ்சடை முடிச்சென்னிக்
காசறுபொன் னெயிற்கடவுளை
மன்னிய பேருலகனைத்தும்
நின்னுள்ளே நீயொடுக்கினை
நின்னின்று நீயொடுக்கினை
நின்னின்று நீவிரித்தனை
நின்னருளி நீகாத்தனை
என வாங்கு
ஆதி பகவனை யருகனை
மாதுயர் நீங்க வழுத்துவம் பலவே" (திருக்கலம்பகம் 109)

என விளக்குகிறது. இவை மட்டுமன்று. இந்தியாவின் பல பாகங்களிலும் சடையுடன் கூடிய பகவான் விருஷப தேவர் சிலைகளும் காணப்படுகின்றன. இக் காரணங்களால் சாரணர் கூறிய செஞ்சடைவானவன் என்பது பகவான் விருஷபதேவரே யாகும்.

'அருளினில் விளங்க' என்பதை அருளினால் விளங்கியவன் எனப் பொருள் கோடல் பொருந்தாது. பகவான் விருஷபதேவர் அருளிய அருளறத்தின் வழியில் நன்கு விளங்க வஞ்சியில் தோன்றியவன் என்பதே பொருத்தமாகும். ஏனெனில் மன்னனை, வாழ்த்துகின்றவர்கள் ஜைன முனிவர்கள். அவர்கள் போற்றும் முதற் கடவுள் கைலாசத்திலுள்ள விருஷபதேவர். எனவே அப் பகவான் அருளறத்தின் வழியில் விளங்கும் மன்னனுக்கு வாழ்த்துக் கூறி, அங்குள்ள அருமறை அந்தணர்களைக் காக்குமாறும் கூறுகிறார்கள். இவ் வந்தணர்கள் எவ் வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகும் தவ முனிவர்கள். எனவே, சாரண பரமேட்டிகள் இமயத்திலுள்ள அருளறத்தின் வழி நின்று தவமியற்றும் முனிவர்களை மன்னனுக்கு நினைவுறுத்தி வாழ்த்துகிறார்கள் என்பதுதான் உண்மை நிகழ்ச்சி. இவைகளால் செங்குட்டுவன் சமயமும் சேரநாட்டு மன்னர் பரம்பரையும் ஜைன சமயமே என்பது கலங்கரை விளக்கம் போல் விளங்குகிறது.

செங்குட்டுவன் சிவபெருமானையும் திருமாலையும் வணங்குதல்

செங்குட்டுவன் ஜைனப் பேரரசன். அவன் வாழ்க்கையின் பெரும் பாகத்தைப் போரில் கழித்துள்ளான். அவன் மக்கள் சார்பில் அரசாள வேண்டியவன். எல்லா மதங்களிடத்தும் சமத்துவமாக நடக்க வேண்டியவன். எனவே, அம் மன்னன் திருமாலையும், சிவபெருமானையும் போருக்கெழும் போது வணங்கிச் சென்றான். சமயக் கண்கொண்டு பார்த்தாலும் செங்குட்டுவன் திருமாலையும் சிவபெருமானையும் வணங்கியதில் தவறில்லை. ஜைன சமய தீர்த்தங்கரர்களாகிய பகவான் விருஷப தேவர் முதல் மகாவீரர் ஈறாக ஒவ்வொரு தீர்த்தங்கரர்களுக்கும் யக்ஷன் யக்ஷ எனப் பாவார தேவதைகள் உண்டு. அவர்களிலே சிரேயாம்ச தீர்த்தங்கரருக்கு ஈஸ்வரன், கெளா ஆகிய இருவரும் யக்ஷன் யக்ஷகள். ஜினாலயங்களில் இவைகளின் சிலைகளையும் காணலாம். ஆத்மார்த்திக எண்ணத்துடன் தங்கள் ஆன்மா சாந்தியடைய அருகப் பெருமானையும், லெளகிக பலனை விரும்பும் மக்கள், இத்தகைய யக்ஷன் யக்ஷகளையும் வழிபாடியற்றுவது வழக்கம். தொல்காப்பியத்தில் கொற்றவை, திருமால், முருகன், இந்திரன் முதலிய தெய்வங்களைக் கூறினாலும், கந்தழி, வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன், ஆகிய பற்றற்ற தெய்வங்களையும் காண்கிறோம். வழக்காற்றிலும் இன்று தமிழகத்தில் வாழும் ஜைனப் பெருமக்கள் திருவண்ணாமலை, வேதாரணியம், விரிஞ்சிபுரம், திருப்பதி முதலிய கோயில்களுக்குச் சென்று தங்கள் வழிபாட்டைச் செலுத்துகின்றார்கள். சில ஆண்டுகளுக்கு முன்வரை இக்கோயில்களில் ஜைனர்களுக்கு முன் மாயாதை போன்ற பல சிறப்புக்கள் நடந்து வந்தன. தென் கன்னடத்தில் தர்மஸ்தலம் சூரால்படுபத்தி, குத்தியார், காந்தாவார் முதலிய இடங்களிலுள்ள சிவாலயங்கள் இன்றும் ஜைனர்களின் ஆதிக்கத்தில் இருப்பதோடு, அவர்களுக்கு அங்கு மாயாதை முதலிய சகல உரிமைகளும் இருந்து வருகின்றன. ஜைன பெருமக்களும் அத்தெய்வங்களைத் தங்கள் குல தெய்வங்களாகப் போற்றி வருகின்றார்கள். இதனாலேயே அவர்களைச் சைவ சமயத்தினர் என்று கூறிவிடுவதா? கலிங்கத்துப்பரணி ஆசிரியர் ஜெயங்கொண்டார் தமது பரணி நூலுக்குப் போருக்குரிய தெய்வங்களையே வழிபட்டிருக்கின்றார். இவ் வுண்மையை அறியாமல் அவர் முதலில் ஜைனராயிருந்தாரென்றும், பிற்காலத்தில் சைவராகி விட்டாரென்றும் எழுதி வெளியிடுகின்றார்கள். இவர்கள் கூற்று வரலாற்றைக் கொலை செய்வதாகும். ஆகவே, நமது சேரமன்னன் போரில் ஈடுபட்டிருப்பதாலும், தங்கள் யக்ஷ தேவதைகளில் ஒன்றாகிய சிவபெருமானைப் பக்தியுடன் வழிபட்டிருப்பதாலும், அம்மன்னனை,

"ஆனேறு ஊர்ந்தோன் அருளினில் தோன்றி"


எனக் கூறியிருக்கின்றார். கோவலன் கண்ணகிக்கு அடைக்கலம் தந்த மாதாயார் திருமாலை வழிபாடியற்றினாலும், அவள் ஜைன சமயத்தைச் சார்ந்தவள். 'நமது உரைவழி நிற்பவள்' எனக் கவுந்தியடிகள் மாதாயைக் குறிப்பிட்டுள்ளதை முன்னரே கண்டோம். செங்குட்டுவன் ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகள் சமயக் கொள்கைகளை மறந்து, போரில் ஈடுபட்டிருப்பதால் அவனுக்கு மாடலமறையோன் பல அறநெறிகளைப் போதித்து, இவை பொய்யில் காட்சியோர் பொருளுரை யாதலின் எனச் செங்குட்டுவன் சமயத்தை நினைவுறுத்துகின்றான். இவ்வாறு தனது தமையனின் சமய நெறியை மாடலன் வாயிலாகவும். ஆகாய சாரிகளாகிய சாரண பரமேட்டிகள் வாயிலாகவும், நன்கு விளக்கியுள்ளார். இவ்வாய உண்மைகளால் செங்குட்டுவன் சமயம் ஜைனமே என்பதும், இளங்கோவடிகள் அவர் தம்பியாகையால் அவரும் ஜைன சமயத் துறவியே என்பதும் மறுக்க வியலாத உண்மைகளாகும்.
 

1   2   3   4   5   6   7   8   9   10  11   12   13   14  15   16  17  18  19


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com