முகப்பு வாயில்

 

நாரதர், பர்வதன், வசு ஆகிய மூவரும் ஒரே ஆசிரியா˘டத்தில் கல்வி பயின்றவர்கள். இவர்களில் நாரதரே கல்வி கேள்விகளிற் சிறந்து விளங்கினார். மக்களிடையே நாரதருக்குப் பேரும் புகழும் வளர்ந்து வந்தது. இதனால் பொறாமை கொண்டு பர்வதனும், வசுவும், மற்றொரு மாயாவித்தைக்காரனும் சேர்ந்து, நாரதருக்கு விரோதமாகக் கிளர்ச்சி செய்ய ஆரம்பித்தார்கள். நாரதர் கூறும் ஒவ்வொன்றையும் எதிர்த்து வந்தார்கள். வேள்வியிலும் எதிர்ப்பைப் புகுத்தினார்கள். வேள்வியில் நெல் பொரியை உபயோகிப்பது அறியாமையென்றும் ஆட்டின் வபையை உபயோகித்தலே முறையானதும் சாத்திர சம்மதமுமானதென்றும் வைதிக வேத வேள்வியை ஆதா˘த்து, பிரசாரம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அஜம் என்றால் ஆட்டிற்கும், மூன்று ஆண்டுகள் கடந்த நெல்லுக்கும் பெயரென்றும், வேள்வியில் செய்ய வேண்டியது ஆட்டின் வபையே என்றும் பொருள் கூற ஆரம்பித்தார்கள். நாரதர் மூன்று ஆண்டுகள் நிறையப் பெற்ற நெற்பொரியைத்தான் வேள்வியில் ஆன்றோர் செய்யுமாறு கூறியுள்ளனரென்று வாதித்தார். இவ்விரு கொள்கைகளிலும் மக்கள் சேர்ந்தார்கள். நாரதரை ஆதா˘த்து கொலையிலா நல்வேள்வி புரிபவர்களும், பர்வதன், வசு என்ற இருவரையும் பின்பற்றி ஆடுகளைக் கொன்று கொலை வேள்வி புரிபவர்களுமாகப் பிரிந்தார்கள். இவ்விரு பிரிவுகளையே இலக்கியங்களில் காண்கின்றோம். இவ் வரலாற்றை விளக்கும் 'நாரத சா˘தம்' எனுந் தமிழ் நூலும் இருந்திருக்கிறது. இந்நாரதர் வைதிக புராணங்களில் வரும் கலகப்பிரியரல்லர். இப்பொ˘யோர் ஜைன அறவோர்; சிறந்த அறிஞர்; உண்மையை உரைக்கும் உத்தமர். இப்பொ˘யோரின் பெயராலேயே 'நாரத சா˘தம்' என்னும் காவியம் பிறந்தது. இந்நூல் முழு உருவத்துடன் கிடைக்கவில்லையாயினும், தமிழ் அறிஞர் உயர்திரு எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள் சென்னைப் பல்கலைக் கழகத்தினின்றும் வெளியிட்டுள்ள 'புறத்திரட்டு' என்னும் நூலின்கண் சா˘தத்தின் பல செய்யுள்கள் காணப்படுகின்றன. இவ்வரலாற்று நூல் கிடைப்பதா˘தாயினும் இந்நூலில் வரும் சா˘தம் மகாபுராணத்தில் காணப்படுகின்றது.

இவ்வரலாற்றினின்றும், வேள்விகளில் கொலையிலா நல்வேள்வி, கொலை வேள்வி என இருவகைகள் இருந்தன வென்பதும் இவைகளைப் பின்பற்றும் இரு பிரிவினர் இருந்தனர் என்பதும் தெளிவாகின்றன. எனவே, வைதிக சமயத்தினர், பர்வதன், வசு ஆகிய இருவர்களின் வழியை மேற்கொண்டு அஜம் எனில் ஆட்டிற்கும் பொருளாகையால் வேள்வியில் ஆடுகளைக் கொல்லும் சடங்கை மேற்கொண்டார்கள். கொலையை அறமெனக் கூறும் மறக்கள வேள்வியை நாரதர் வழி வந்த ஜைன அறவோர்கள் எதிர்த்து வந்தனர். இவ் எதிர்ப்பு இயக்கம் பெரும் போராக மூண்டது. இவ் வுண்மையை இரு சமயங்களின் இலக்கியங்களிலும் காணலாம். தமிழகத்திலும் இவ்வேள்விப் போர் பரவியது. 'வேத வேள்வியை நிந்தனை செய்தவர்' எனவரும் திருஞானசம்பந்தர் தேவாரப்பாக்களாலும், அதனைத் தொடர்ந்துவரும் பிற பாக்களாலும் இதனை அறியலாம். ஜைன அறவோர்கள் ஒரு பக்கத்தில் கொல்லாமை முதலிய உயா˘ய அறங்களையும், ஒழுக்கங்களையும் மக்களிடையே பிரசாரம் செய்து வளர்த்து வருகையில், காபாலிக, வாம, வைதிக சமயத்தினர் தெய்வ பக்தியையே தலைமையாகக் கொண்டு, பக்தியின் காரணமாகச் செய்யும் கொலை, பொய், களவு, கள், காமம், உயிர்ப்பலி முதலிய யாவும் பாவ மல்லவெனும் கோட்பாடுகளைப் பரப்ப ஆரம்பித்தனர். இதனால் மக்களிடையே குழப்பமும், அரசர்களிடையே கலக்கமும் விளைந்தன. இந்துக்கள் பலாத்காரத்தைக் கையாள ஆரம்பித்தார்கள். அதன் விளைவாக ஆயிரக்கணக்கான ஜைன அறவோர்கள் கொலைக்கு ஆளானார்கள். அந்தோ! அகிம்சையை அடிப்படையாகக்கொண்ட அறவோர், மனித உலகுக்கே அரிய கருத்துரைகளை வழங்கிய சிந்தனைச் சிற்பிகள், தமிழ் நாவலர்கள், காலைப் பொழுதும் மாலைப் பொழுதும் கல்விப் பொருளே செல்வப் பொருளாகக் கொண்டு மக்களுக்கு அறிவை ஊட்டிய உத்தமர்கள், நல்லறம் புரிவோர், பொய்தீர் அறநூல் தீட்டிய கலைஞர்கள், மாய்ந்தனர். இல்லை! இல்லை! கழுவிலேற்றப்பட்டனர். இக் கொடுஞ்செயலைக் கண்ட ஒரு புலவர் பெருமகனார்,

"கொல்லா விரதம் பூண்ட நலத்தோர்
அறிவால் நிறைந்த அறமாண் புடையோர்
தமிழின தருமை தனியா யுணர்ந்தோர்
கருவினூற் காவியம் கழறும் பொ˘யோர்
கால கதியால் கடைநிலைப் பட்டோர்"

என வருந்திப் பாடியுள்ளார். இவை வரலாற்று உண்மை. இக் கொடும் நிகழ்ச்சிகள்தாம் சம்பந்தர் தேவாரத்தில் பொதிந்து கிடக்கின்ற மறைக்க முடியாத அகச்சான்றுகள்.

உலக மூடம், பாசண்டி மூடம், தேவ மூடம் என்ற மும் மூடங்களையும் ஒழித்து, நல்லொழுக்கங்களை வளர்த்து, மனித நாகா˘கத்தை உயர்த்தி, அறிவு விருந்தளித்த ஜைன சமயத்தை ஓங்கவொட்டாது இந்து மதத்தினர் தங்கள் பக்தி மார்க்கக் கொள்கையைப் பரவச் செய்ததனாலன்றோ இன்றும் தெய்வங்களின் பெயரால் உயிர்ப்பலியிடும் கொடிய வழக்கமும், பல மூட நம்பிக்கைகளும் இந்நாட்டை விட்டு அகலாமல் நிலைத்துள்ளன. மேல் நாடுகளில்-ஈஜிப்பது, இத்தாலி, கிĄŁஸ், பாலஸ்தீன் முதலிய இடங்களில்-தெய்வத்தின் பெயரால் உயிர்ப்பலி செய்து வந்த கொடுமைகளுக்கு அளவே யில்லை. இன்றோ அந் நாட்டுக்கோயில்களில் ஒரு துளி இரத்தமும் சிந்தவில்லை! ஏன்? அந்நாட்டில் தோன்றிய பிற்காலப் பொ˘யோர்கள் உயிர்ப் பலியிடுவது அநாகா˘கமெனக் கண்டு, சட்ட மூலமாக அதை ஒழித்தார்கள். அகிம்சா தர்மம் பிறந்த புண்ணிய பூமியிலே ஒவ்வொரு கிராமங்களிலும் ஆயிரக்கணக்கான உயிர்கள், தெய்வங்களின் பெயரால், வேதவேள்வியின் பெயரால், இன்றும் பலியிடப்படுகின்றன வென்பது வருந்தத்தக்கது அல்லவா? இக்கொடிய உயிர்ப் பலியை ஒழிக்கப்பாடுபடும் ஜீவகாருணிய சங்கங்களுக்கு இந்நாட்டில் எதிர்ப்பு எவ்வளவு? அப்பப்பா! என்னுடைய முப்பது வருட அனுபவத்தில் கண்ட உண்மைகளை ஒரு புத்தகமாக வெளியிடலாம்! பாமரர் மாத்திரமின்றி, படித்த அறிஞர்களும் எதிர்க்கின்றார்கள். அது அவர்களுடைய குற்றமல்ல! மதக்கோட்பாடுகள் அவ்வாறு எதிர்க்க தூண்டுகின்றன.

ஸ்ரீ காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சாரிய சுவாமிகள் 1933-ஆம் ஆண்டு, சனவா˘த் திங்கள், 3-ஆம் தேதி சென்னைப் புரசைவாக்கத்தில், ஜீவகாருணிய சங்கங்களைக் கண்டித்துப் பேசிய சொற்பொழிவினால் இவ்வுண்மை விளங்கும். அதன் சுருக்கம் பின்வருவது:

"பிராமணன் குடிக்கக்கூடாது. வேறு சிலர் குடிப்பது அவ்வளவு நிந்திதமல்ல. மாமிசம் சாப்பிடுகிறவர்கள் கூட, சில மாமிசத்தை உண்ணக் கூடாது. மாமிசம் சாப்பிடுகிறவர்கள் பகவானுக்கு அர்ப்பணம் செய்துவிட்டுச் சாப்பிடும்படி வாம மார்க்க ஆசாரம் ஏற்பட்டது. வாம மார்க்கத்தை அனுசா˘த்துப் பிராணிகளைக் காவு கொடுப்பதை ஜீவகாருணிய சங்கங்கள் ஆ§க்ஷபிக்கின்றன. வேதம் சொல்லியிருப்பதைச் செய்வதில் பக்தியிருந்தால் தோஷம் ஒட்டாது. திருக்கண்ணப்பர் பகவானுக்கு மாமிசத்தைக் கொடுத்தார். அதைச் சுவாமி ஏற்றுக்கொண்டார். ஏனெனில், கண்ணப்பர் மனத்தில் பக்திதான் இருந்தது. ஆகவே, பக்தி பூர்வமாகப் பாவமான ஒரு காரியத்தைச் செய்தாலும் தோஷமில்லை, யாகங்களைச் செய்வதிலும், கிராம தேவதை கோயிலில் பிரார்த்தனையை நிறைவேற்றுவதிலும் மனத்தில் கெட்ட எண்ணமில்லை ஆகையால் பாபமுண்டாகாது" சுவாமிகள் சென்னையில் செய்த பிரசங்கங்கள் பூராவும், மதராஸ்லா ஜர்னல் அச்சுக் கூடத்தில், புத்தக ரூபமாக அச்சிடப்பட்டிருக்கின்றன. அப் புத்தகத்திலிருந்து இˇது எடுக்கப்பட்டது.

இவ்வாறு கூறும் வேதங்களையும், புராணங்களையும் அடிப்படையாகக்கொண்டே திருவிளையாடல் புராணமும், பொ˘ய புராணமும் ஏற்பட்டன. மாபாவந்தீர்த்த படலமும், கோட்புலி நாயனார், சண்டேசுர நாயனார், இயற்பகை நாயனார், சிறுத்தொண்ட நாயனார் முதலியோர் கதைகளும் இதற்குப் போதிய சான்றாகும். எனவே, இளங்கோவடிகள் வைதிக சமயச் சார்பான எச்சமயத்தையும் சார்ந்தவரல்லர் என்பதற்குச் சிலப்பதிகாரத்தின் முடிவுரையாகக் கூறும் இளங்கோவடிகளின் அறவுரைகளாலேயே அறியலாம்.

மேலே கூறிய மாடலமறையோன் செங்குட்டுவனுக்கு 'ஜைனமத' அறநெறிகளை உபதேசித்து பின்னர், செங்குட்டுவனும் மனமாற்ற மடைந்து கண்ணகி கோயிலை அழகுற அமைத்து, எவ்வித உயிர்ப்பலியுமின்றி விழா முதலியவைகள் நடத்த ஏற்பாடு செய்கின்றான். இதனை,

"பூப்பலி செய்து காப்புக்கடை நிறுத்தி
வேள்வியும் விழாவும் நாடொறும் வகுத்துக்
கடவுள் மங்கலஞ் செய்கென வேவினன்
வடதிசை வணக்கிய மன்னவ ரேறென" (சிலப்பதிகாரம், 3:28:231-234)

என்று அடிகள் குறிப்பிடுகின்றார். பிறகு வேள்வியை ஆரம்பிக்கின்றார்கள். வேள்விச் சாலையில் மன்னன் செங்குட்டுவனும், வேறு பல அரசர்களும், அந்தணர் கூட்டங்களும், மற்றும் பல பொதுமக்களும் நிறைந்திருக்கின்றார்கள். செங்குட்டுவன் வைதிக மதத்தினா˘ன் கொலை வேள்வியை வெறுத்து, கொலையிலா நல்வேள்வி புரிய இசைந்ததை அறிந்த இளங்கோவடிகளும் வேள்வியிற் கலந்துகொண்டார். அந்தக் காட்சியை,

"வேள்விச் சாலையில் வேந்தன் பெயர்ந்தபின்
யானும் சென்றேன்" (சிலப்பதிகாரம், 3:30:170-171)

என்று பெருமிதமாகவும், கம்பீரமாகவும் இளங்கோவடிகள் கூறுகின்றார். இங்கே இளங்கோவடிகள் தமது தமையனாரையும் ஜைனராகவே எழுதிக் காண்பிக்கின்றனர். இப்பெரும் சமணத் துறவியைச் சைவ சமயத்தவர் என்று கூறுவது நூலின் பாலுள்ள காதலால் மயங்கிக் கூறுவதாகும்.

இவ்வாறு தமது சமயக் கொள்கைகளையும் அறங்கூறும் பொ˘யோர்களையும், அவர்கள் போதனைகளையும், இளங்கோவடிகள் விளக்கியுள்ள பகுதிகளை எல்லாம் இங்கே விரித்துக் காட்ட வியலா. ஏனெனில், சிலப்பதிகாரத்தின் பெரும்பாகம் ஜைன சமயக்கொள்கைகளே நிறைந்திருப்பதனால், அவற்றை விரிவஞ்சி விடுத்தனம். எனினும், இரண்டோரிடத்தைக் குறிக்காமலிருக்க வியலாமையால், அவ்விடங்களை மட்டும் விளக்கிவிட்டு, மேலே செல்வோம்.


கோவலன் கண்ணகி வழிபாடு

கோவலனும், கண்ணகியும் தங்கள் மாளிகையை விட்டு வெளியே வருகின்றார்கள். வீதிகளில் பல கோயில்கள் இருக்கின்றன. அவர்கள் இருவரும் அவைகளைக் கடந்து சென்ற காட்சியை இளங்கோவடிகள் நமக்கு அறிவிக்கும் வாயிலாகத் தமது உள்ளக்கிடக்கையை எவ்வாறு புலப்படுத்துகின்றார் பாருங்கள்:

"நீணெடு வாயில் நெடுங்கடை கழிந்தாங்
கணிகிள ராவி னறிதுயி லமர்ந்த
மணிவண்ணன் கோட்டம் வலம்செயாக் கழிந்து
பணையைந் தோங்கிய பாசிலைப் போதி
யணிதிகழ் நீழ லறவோன் றிருமொழி
யந்தர சாரிக ளறைந்தனர் சாற்று
மிந்திர விகார மேழுடன் போகிப்
புலவூண் டுறந்து பொய்யா விரதத்
தவல நீத்தறிந்து அடக்கிய கொள்கை
மெய்வகை யுணர்ந்த விழுமியோர் குழீஇய
வைவகை நின்ற வருகத் தானத்துச்
சந்தி யைந்துந் தம்முடன் கூடி
வந்து தலைமயங்கிய வான்பெரு மன்றத்துப்
பொலம்பூம் பிண்டி நலங்கிளர் கொழுநிழ
னீரணி விழவினு நெடுந்தேர் விழவினுஞ்
சாரணர் வரூஉந் தகுதியுண் டாமென
வுலக நோன்பிக ளொருங்குட னிட்ட
விலகொளிச் சிலாதலந் தொழுது வலங்கொண்டு
மலைதலைக் கொண்ட பேர்யாறு போலு
முலக விடைகழி யொருங்குட னீங்கி" (சிலப்பதிகாரம் 1:10:8-27)

என்று கூறுகின்றார். இவ் வா˘களில் இளங்கோவடிகள் இரண்டு விதக் காட்சிகளை நமக்கு அளிக்கின்றார். அக் காட்சிகளிலேயே அவர் சமயப்பற்றும் விளங்கக் காட்டுகின்றார். கோவலனும், கண்ணகியும் வீதி வழியாக வருகையில் மூன்று ஆலயங்கள் அவர்கள் எதிரே தென்படுகின்றன. அவைகளைக் கடந்து செல்லும் போது, திருமால் கோயிலையும், புத்தன் கோயிலையும் வணங்காது தங்களுக்கு வலப் பக்கமாக போகவிட்டுச் செல்லுகின்றார்கள். "மணிவண்ணன் கோட்டம் வலம் செயாக்கழிந்து" என்பதை அரும்பத உரையாசிரியரும், அடியார்க்குநல்லாரும் முறையே 'வலத்திலேயிட்டு' என்றும், 'வலத்திட்டேகுதல்' என்றும் விரிவுரையில் குறித்துள்ளார்கள். புத்தர் கோயிலையும் அவ்வாறே கடந்து சென்றனர். எனவே, ஜைன சமயப்பொ˘யோர்கள் எந்தத் தெய்வத்தையும் அவமதிக்காது மா˘யாதை காட்டிச் செல்லுகின்ற உண்மையை இளங்கோவடிகள் தனது சமயத்தவராகிய கோவலன், கண்ணகி இருவா˘ன் வாயிலாக நமக்கு விளக்குகின்றார். பிறகு அருகன் கோயில் வருகிறது. அதனைக் கூறப்புகுந்த ஆசிரியர், "புலவூண் துறந்து பொய்யா விரதத்து" என்று ஆரம்பித்து "இலகொளிச் சிலாதலத் தொழுதுவலங் கொண்டு" சென்றதாக முடிக்கின்றார். ஆசிரியர் இங்கே தமது சமயக்கோட்பாட்டை சிறந்த வார்த்தைகளால் பல அடிகளில் புகழ்ந்து விளக்குகின்றார்.

கொல்லாமையையும், புலாலுண்ணாமையையும் ஆதிகாலந்தொடங்கி, தங்கள் முதற்கொள்கைகளாகக் கொண்டுள்ளவர்கள் ஜைனர்களே. வேறு எம்மதத்தினரும் இவ்விரண்டையும் வற்புறுத்தவில்லை. புத்த மதம் அகிம்சையை வற்புறுத்தினாலும், புலாலுணவைக் கண்டிக்கவில்லை. புலாலை விலை கொடுத்து வாங்கிப் புசிக்கலாமென்பதே அவர்கள் கொள்கை. எனவே, ஜைன சமயத்தின் உயிர் நாடியாய் விளங்கும் புலாலுண்ணா நோன்பினை நினைவுறுத்துகின்றார் இளங்கோவடிகள். திருக்குறளாசிரியர் 'புலாலுண்ணாமை' என ஒரு அதிகாரமே அமைத்துள்ளார். இளங்கோவடிகள் தமது முடிவுரையில், 'ஊனூண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்' (3:30:189) என அறிவுறுத்துகின்றார். சீவகசிந்தாமணி ஆசிரியர் திருத்தக்கதேவர், காட்டில் வேட்டுவனுக்கு ஊனுண்ணாமையின் உயர்வை எடுத்துக்காட்டி, அவனை அறநெறியில் புகுத்தியுள்ளதை அவர்தம் காவியக் கடலிலே காண்கின்றோம். நாலடியார், சூளாமணி, பெருங்கதை, அறநெறிச்சாரம் போன்ற பல ஜைன நூல்களும் புலாலுண்ணாமையை வற்புறுத்திக் கூறுவதைக் காணலாம். தொல்காப்பிய உரையாசிரியர்களில் முதல்வராகிய இளம்பூரணரை நச்சினார்க்கினியர் "புலவுத்துறந்த நோன்புடையாரதலிற் பொய் கூறார்" எனப் புகழ்ந்து போற்றியுள்ளார். மேல் நாட்டு அறிஞர் ஜார்ஜ் பெர்னாட்ஷா தமது ஒழுக்க மேன்மையையும் புலாலுண்ணாக் கொள்கையையும் ஒப்பிட்டுப் பார்த்துத் தாம் ஒரு ஜைனர் எனக் கூறிக்கொண்டார். ஜைன சமயம் அவரை ஜைனரென்றே போற்றக் கடமைப்பட்டிருக்கின்றது. மகாத்மா காந்தியடிகள் வைதிக சமயத்தைச் சார்ந்தவராயினும் ராய்ச்சந்த ஜெயின் என்பவரை ஆசிரியராகக்கொண்டு, அகிம்சையையும் புலாலுண்ணாமையையும் தமது வாழ்க்¨யில் கொண்டு விளங்கியதால், அவரும் ஜைனரென்றே ஜைன உலகம் போற்றுகிறது. திருத்தக்கதேவர் 'எங்குள அறத்தினோரும் இனிதூழி வாழ்க' (சீவக சிந்தாமணி நூலின் கடைசி வாழ்த்துப்பாடல்) என்பதனாலும், நீலகேசி ஆசிரியர்,

"அன்னான் பயந்த வறவா ரமிர்துண்டு நின்றார்
இன்னா ரினையரென வேண்டுவதில்லை" (நீலகேசி, 2)

என்பதனாலும், மகாத்மா காந்தியடிகளும் ஜார்ஜ் பெர்னாட்ஷாவும் சிறந்த ஜைனப் பெருமக்களேயாவார்கள்.

ஜைன சமயம் இயற்கையின் பாற்பட்டது; மக்களுடைய பண்பாட்டின் நிலைக்களமானது; மக்கள் நல மேம்பாட்டிற்குரிய அறநெறிகளைப் போதிப்பதில் உண்மையைக் கடைப்பிடிப்பது. ஜைன சமய அறவோர்கள், உண்மை வழியில், அதாவது அறிவுக்குப் பொருந்தும் வழியில் மக்கள் சமுதாயத்தை வளர்த்தாலன்றி மக்கள் உயர்வடைய மாட்டார்கள் என்பதையும் அறிந்தவர்கள். எனவே அவர்கள் தங்கள் அறநெறிகளை மெய்ப்பொருள் என அழைத்து வந்தனர். அவ்வறங்களை உரைக்கும் அறவோர்களை "மெய்வகை உணர்ந்தோர்" என்றனர். இளங்கோவடிகளும், "மெய்வகை உணர்ந்த விழுமியோர்" என ஆகாயசாரிகளாகிய சாரணப் பரமேட்டிகளைப் போற்றுகின்றார்.

இத்தகைய ஆகாயசாரிகளாகிய அறவோர்கள், கவுந்தியடிகள், கோவலன், கண்ணகி ஆகிய மூவருக்கும் காட்சியளித்து அறமுரைப்பதைப் பின்னர் காண்போம். அது மட்டுமல்ல! இச்சாரணப் பரமேட்டிகள் செங்குட்டுவனைச் சந்திக்கும் சிறப்பையும் செங்குட்டுவன் வரலாற்றிலே காண்போம்.

 

1   2   3   4   5   6   7   8   9   10  11   12   13   14  15   16  17  18  19


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com