முகப்பு வாயில்

 


இதுபோன்று மற்ற ஒன்பது குறள்களில் கூறும் ஆதிபகவனின் இயற்பண்புகள் அனைத்தும் மேலே கூறிய அறநூல்களிலும், தொல்காப்பியம், சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம் போன்ற பல நூல்களிலும், வட மொழி இலக்கியங்கள் பலவற்றுள்ளுங் காணலாம். எனவே, இப்போ˘லக்கியங்களினின்றும் ஆதிபகவன் என்று போற்றப்படுவர், நாம் முன்னர்க்கூறிய சமுதாய அமைப்பாளரும், இல்லறம், துறவறம், ஆகிய இருபேரறங்களை வகுத்தவருமாகிய பகவான் விருஷபதேவரே என்பது தெளிவாகிறது.

விருஷபதேவர் தாம் வகுத்த அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய அறநெறிகளை முறையே வாழ்க்கையில் நடத்திக் காண்பித்தார். இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு மனைவி மக்களுடன் பல ஆண்டுகள் வாழ்ந்து மகிழந்திருந்தார். பின்னர், ஆத்மார்த்திகத் துறைறைய விரும்பி, தமது மூத்த குமாரர் பரதனுக்குப் பட்டஞ் சூட்டிவிட்டுத் தாம் துறவறத்தை மேற்கொண்டார். பல மலைகளிலும், காடுகளிலும் அலைந்து தவமியற்றலானார்.

எனவே உலகியல் முன்னேற்றமும் ஆத்மீக முன்னேற்றமும் அவசியம் என்பதை உலகுக்கு அறிவிக்கவே தாம் இல்லறத்தினின்றும் துறவை மேற்கொண்டார் என்பது போதரும் இவ்வுண்மையை,

"மன்னுயிர் காத்தலான் மனம்விட்ட வருளினொடு
இன்னுயி ருய்கென்ன வில்லறமு மியற்றினையே
புன்மைசா லற நீக்கிப் புலவர்கள் தொழுதேத்தத்
தொன்மைசால் குணத்தினாற் றுற வரசாய்த்
தோற்றினையே"
-யாப் விருத் சூத்தரம் 84 உரை.

என்ற தோத்திரத்தாலும், இல்லறம் துறவறம் ஆகியவற்றின் சிறப்பினை.

"காமம் சான்ற கடைகோட்காலை
ஏமம் சான்ற மக்களொடு துவன்றி
அறம் புரிசுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே"
-தொல்காப்பியம்.

"மக்களொடு புணர்ந்து மனையறம் காத்து
மிக்ககாம வேட்கை தீர்ந்துழி
தலைவனுந் தலைவியும் தம்பதி நீங்கித்
தொலைவில் சுற்றமொடு துறவறம் காப்ப"
-அகப்பொருள் விளக்கம்.

என்ற பண்டைய நூல்களாலும் அறியலாம். உலக இயற்கையோடியந்த இவ்வற நெறிகளின். உண்மைகளை அறியாதாரே ஜைனதருமம் மக்களைக் காட்டிற்கு அனுப்பிவிடுகிறது. என்று சுலபமாகக் கூறிவீடுகிறார்கள். பகவான் விருஷபதேவா˘ன் துறவறம் மிகமிகச் சிறந்தது. அவர் முற்றுந் துறந்த முனிவரானார். விருஷபதேவர் மேற்கொண்ட துறவறத்தின் இயல்பினையே நமது குறளாசிரியர்.

"அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு"

"இயல்பாகும் நோனபிற் கொன்றின்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து"

"மற்றுந்தொடர் பாடெலன்கொல் பிறப்பறுக்க
லுற்றார்க்கு உடம்பும்மிகை"

என விளக்கியுள்ளார். இத்தகைய சிறந்த பற்றமற்ற நிர்வான நிலையையுடைய விருஷப தேவா˘ன் உருவச் சிலையை நாடெங்கும் வைத்து வணங்கினர். தமிழகத்தில் ஆதிநாதர், ஆதிஸ்வரர், ஆதிபட்டாரகர், கைலாசநாதர், திரிலோகநாதர், ஆதிஜினன், விருஷப ஸ்வாமி என்ற பெயர்களால் அழைக்கப்படும் கோயில்களை எங்கும் காணலாம். விருவபர் மலை என மதுரைக்கருகில் ஒரு மலை இன்றும் காட்சியளிக்கின்றது. இந்நிர்வாண நிலையையே வைதீக வேதங்களில் சிசனதேவதையை வழிபடுகின்றவர்கள் என்று பேசப்படுகின்றனர்.

எனவே விருஷபதேவர் ஆத்மீக மேம்பாட்டிற்காகத் துறவறமேற்கொண்டு இறுதியாகக் கைலாச மலையில் நின்று கடுந்தவம் புரிந்தார். அங்கு அவருக்குக் கேவல ஞானம் எதயமாயிற்று. வனைகளை வென்று வீடுபேறு பெற்றார். வினையின் நீங்கி விளங்கிய அறிவனாய்; பா˘நிர்வாணம் (வீடுபேறு) அடைந்தமையால் அவரைப் பகவன், சித்தன், சிவன், சிவகதிநாயகன், எண்குணன், அருகன், அறவாழி வேந்தன் எனப் பல நிர்வாணமடைந்த திருநாளைத்தான் இன்றும் சிவராத்திரியெனக் கொண்டாடிவருகிறோம். மக்கள் பண்பிற்கும் வாழ்விற்கும் வழிவகுத்தருளிய விருஷபதேவா˘ன் திருவறம் உலகெங்கும் பரவிவரலாயின. இவ்வாறு பல நூற்றாண்டுக்குள் சென்ற பின்னர், வெவ்வேறு காலங்களில் விருஷப தேவரைப் போன்றே, இருபத்து மூவர் தோன்றினர். அவர்களும் போதித்துத் தாங்களும் அவ்வறநெறியில் நின்று தவமியற்றி வீடுபேறு பெற்றனர். அவர்கள் அனைவரையும் பகவன், சித்தன், சிவகதிநாயகன், என்றே போற்றலாயினர். ஆகவே இவ்விருபத்து மூவருக்கும் முதல்வராக விருஷபதேவர் விளங்கினமையாலும், அவர் அருளிய அறநெறிகளையே முதல் நூலாகக் கொண்டமையாலும் அவரை ஆதிபகவன் எனச் சிறப்புப்பெயரால் அழைத்து இருபத்து நான்கு தீர்த்தங்கரர்களாகப் போற்றினர். தீர்த்தங்கரர் என்றால் அறவுரை பகர்வோர் என்பது பொருள்.


ஆதிபகவன் வரலாற்றுண்மை :

மேலே கூறிய விருஷபதேவர் வரலாற்றை மெய்ப்பிக்கவே திருக்குறளாசிரியர் தேவர், கடவுள் வாழ்த்தின் முதற் குறளில் "ஆதிபகவன்" என்ற விருஷப தேவா˘ன் சிறப்புப் பெயரை அமைத்து மற்ற ஒன்பது குறள்களிலும் அவர்தம் இயற்பண்புகளைப் போற்றியுள்ளார். அக்காலத்தில் ஆதிபகவன் என்ற பெயரே வழக்காற்றில் அமைந்திருந்தமையால் அப்பெயரையே தமது குறளில் வழங்கியுள்ளார். மேலும் ஆதிபகவானால் அருளப்பட்ட அறங்களையே முப்பாலாகக் கூறியுள்ளார். இவ்விருப்பத்து நான்கு தீர்த்தங்கரர்களில் 23-வது தீர்த்தங்கரர் பாĄŁஸ்வநாதரும், 24-வது தீர்த்தங்கரர் மகாவீரவர்த்தமானரும் வரலாற்றுப் புருடர்களாக விளங்குகின்றனர் என்பது தெளிவு, தற்கால ஆராய்ச்சிப்படி விருஷபதேவரும் (ஆதிபகவன்) வரலாற்றுப் புருடராகவே பல அறிஞர்களால் நிலை நிறுத்தப்படுகின்றார். விருஷபதேவர் வரலாற்றை அவரால் அருளிய அறநெறிகளை மேற்கொண்ட ஆதிபுராணம், பத்மபுராணம் போன்ற ஜைன இலக்கியங்கள் தவிர வைதிக சம்பந்தமான வேதங்களும், புராணங்களும் போற்றிப் புகழ்கின்றன. அவைகளை விளக்குவதாயின் இடம் போதாதாகையால், அந்நூல்களின் விவரங்களை மட்டும் ஈண்டுக் குறித்துள்ளேன். ரிக் வேதம் (10-12-166-வது சூத்திரங்கள்) பாகவதம் (5-வது ஸ்கந்தம்) மார்க்கண்டேய புராணம் (அதி 50 பக்கம் 150 ) கூர்ம புராணம் (அதி 41 பக்கம் 61) பிரம்மாண்ட புராணம் (பாகம் 1 அதி 14 பக்கம் 24) வாயு புராணம் (பாகம் 1 அதி 33 பக்கம் 51 )ஸ்காந்தம் (அதி 37 பக்கம் 148) சிவபுராணம் (அதி 4 பக்கம் 24) லிங்க புராணம் (அதி47 பக்கம் 68) விஷ்ணு புராணம் (பாகம் 2 அதி 1 பக்கம் 77) இவ்வாறே பல நூல்களிலும் விருஷபதேவர் போற்றப்படுகின்றபடியால் அவர் தம் அறம் உலகுக்கே உரியதாக விளங்கிற்றென்பதோடு அவர்; ஒரு சிறந்த வரலாற்றுப் புருடர் என்பதும் தெளிவாகிறது. மேலும், மொஹஸ்சதாரோ, ஹரப்பாவில் கிடைத்த முத்திரைகளிலும் விருஷபதேவர் உருவமும் விருஷபாய நம் ஜினேசாய நம; என்ற எழுத்துக்களும் பொறிக்கப்பட்டுள்ளன. அது மட்டுமல்ல, சுவாமி கர்மானந்தா என்ற பேராசிரியர் தமது ஆழ்ந்த ஆராய்ச்சியின் முடிவாகத்தாம் எழுதிய "தர்மகா ஆதி பிரவர்த்தகா" என்ற நூலில் "இப்பூவுலகத்தின் முதன் முதலாக அறம் வகுத்தவர் விருஷபதேவரே என்பது உறுதி" என்றும் எழுதியுள்ளார். மேலும் விருஷபதேவா˘ன் மூத்த குமாரர் பரதன் பெயராலேயே, இந்நாட்டிற்குப் பரத கண்டம் என வழங்குவதினின்றும் அவர் வரலாற்றுப் புருஷரே என்பது மறுக்க முடியாத சான்றாகும். இவ்வுண்மைகளை ஆராய்ந்தே உயர் திருவாளர்கள் ராவ்பகதூர் அ. சக்கரவர்த்தி நயினார் எம்.ஏ.ஐ.இ.எஸ். அவர்கள், பேராசிரியர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பேராசிரியர் ஆர்.டி. ரானடே அவர்கள். டாக்டர் எஸ்.கி.வித்தியாபூஷன் அவர்கள், டாக்டர் என்.எஸ் பாஸ¤ அவர்கள் ஆகிய பல வரலாற்றுப் பேராசிரியர்கள் விருஷபதேவரை வரலாற்றுப் புருடர் என்றே நிருபித்துள்ளார்கள்.

ஆதிபகவன் (விருஷபதேவர்) அமைத்த சமுதாயம் வர்க்க பேதமற்றது. அறமோ உலகுக்கே உரியது. தேவமூடம், உலகுமூடம், பாசண்டி மூடம் ஆகிய மும்மூடங்களை அகற்றி, நற்காட்சி, நவ்ஞானம், நல்லொழுக்கம் ஆகிய நல்லறிவையும் ஒழுக்கத்தையும் வளர்ப்பது. அன்னதானம், அபயதானம், ஒளஷததானம், வித்தியாதானம், ஆகிய நான்கு தானங்களால் மக்கள் வாழ்க்கை நலத்தைப் பாதுகாப்பது பற்பல கலைகளை வளர்க்க ஆங்காங்குப் பள்ளிகளையும், மடங்களையும் சங்கங்களையும் அமைப்பது. இவ்வுண்மைகளைச் சங்க இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும் காவியங்களிலும் காணலாம். எனவே, அறிவியக்கக் கொள்கையாகிய விருஷபதேவர் அறத்தினைக் கீழை நாடு மட்டுமல்ல மேல் நாடுகளிலும் பலபேரறிஞர்கள் பாராட்டியும் மேற்கொண்டும் உள்ளார்கள். சமீபகாலத்தில் இங்கிலாந்திலே வசித்த வரும் உலகெலாம் அறிஞர் எனப் போற்றப்பட்டவருமாகிய ஜார்ஜ் பெர்னாட்ஷா சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்தார். அது சமயம் தாம் இந்தியாவில் அறிந்து கொண்ட ஓர் உண்மையை விளக்குகையில் "எனது சமயம் சமணமாயிருப்பதை அறிந்து கொண்டேன்" எனக் கூறியுள்ளார். எனவே அவர் தம் ஒழுக்க நெறியும் பகுத்தறிவின் பண்பும் இங்குள்ள சமண அறத்தோடு ஒத்திருப்பது புலனாகிறதல்லவா? நடுநிலைமையாளர் எவரும் சமண அறத்தினைப் போற்றாமலிருக்க முடியாது. 24-4-48ல் டில்லிமாநகா˘ல் நடந்த மகாவீரஜெயந்தியில் தலைமை தாங்கிய ஆச்சார்ய வினோபாஜீயின் தலைமையுரையும் நமது கொள்கைக்கு அரண் செய்வதால் அவ் அறிவுரையையும் இங்கே அளிக்கின்றேன்.

"மகாவீரர் ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தோன்றியவர். அவர் மக்கட்கு அருளிய நல்லுரைகள் இந்தியாவுக்கு புதியனவல்ல. சமண ஆசிரியர்களான இருபத்து நான்கு தீர்த்தங்கரருள், மகாவீரர் கடைசி தீர்த்தங்கரராகக் கருதப்பட்டார். இதனால், சமண சமய சித்தாத்தங்கள் மகாவீரர் தோன்றுவதற்குப் பல நூற்றாண்டுகட்கு முன்பே இங்கு நிலைபெற்று விட்டன என்பது அறியக்கிடக்கின்றது.

இரிக்வேதத்தில், 'ஓ அருகனே! நீ இவ்வுலகத்தின்மாட்டு மிக்க தயையுடையவன்' என்ற வாழ்த்துரை ஒன்று வந்திருக்கிறது. இது ஒரு மந்திரமொழி. இதில் சமண சமயத்தின் அருஞ்சொற்களான 'அருகன்' 'தயை' என்ற இரு சொற்களும் பயின்றிருக்கின்றன. இதைக் காணும்போது, சமண சமயம் வேதகாலத்தைவிட பழைமையுடையது என்றும் கொள்ளக் கிடக்கின்றது.

ஒரு மதம் சிறப்புடையது என்பதற்கு அதுகாலத்தால் மிகப் பழைமையுடையதாக இருக்கவேண்டுமென்பது அவ்வளவு முக்கியமான ஒரு காரணமல்ல. இˇது உண்மை தான். ஒரு மதம் மிகவும் பழமையுடையது. ஆனால் உலகத்தின் உண்மை நெறிகள் அதில் நன்கு விளக்கப்பட்வில்லை இன்னொரு மதம் பழைமையுடையதல்ல. புதியதுதான். எனினும் அதில் உண்மை நெறி நன்கு விளக்கப்பட்டிருக்கிறது. என்றால், இந்த மதந்தான் சாலச் சிறந்ததே தவிர, முன்னைய மதம் அவ்வளவு சிறப்புடையதல்ல. மனிதனுக்கு மிக இன்றியமையாதது எப்பொரளையும் நன்கு ஆராய்ந்து அறிதல். இவ்வறிவுரையை வளர்ப்பதில், சமணம் பொ˘தும் பணியாற்றி யிருக்கிறது.

'எல்லா வுயிர்களிடத்திலும் அன்பா யிருத்தல்தான் சமணத்தில் நன்கறியப்பட்ட முதல் சித்தாந்தம் சமண சமயம் கற்பித்த இரண்டாவது அறிவுரை எந்த ஒரு பொருளையும் நன்கு ஆராய்வதும், ஆராயுமிடத்து நடுவு நிலைமையை மேற்கொள்ள வேண்டுமென்பதுமாகிய இவ்வறிவுரை, 'அன்பாயிரு' என்பதைப்போல, எல்லாரும் அறிந்த ஒன்றாக இல்லாவிட்டாலும் அதைப்போல அவ்வளவு முக்கியத்துவமும் உள்ளதுதான். பிடிவாத மனப்பான்மையுடன் ஒருபொருளின் ஒரு பக்கத்து உண்மையைத் தான் காட்டவல்லது. ஆனால், பக்கத்து உண்மையைத் தான் காட்டவல்லது. ஆனால், சமணம் கற்பிப்பது என்ன வென்றால் ஒரு பொருளின் எல்லா அமிசத்தையும் நன்கு ஆராயவேண்டும் என்பது இதனைச் சம்யக்த் தா˘சனம் (நற்காட்சி) என்ற சொல்லால் குறிப்பிட்டனர். அˇதாவது முழுவதும் சிந்தித்தல், என்பது. இது சமணத்தின் சிறப்பான ஒரு படிப்பினை. இவ்விதமான பிடிவாதமற்ற பொதுநோக்கினால்தான். சமணத்தைத் தழுவுவோர் தொகை குறைந்து நின்றது என்றும் கருதப்பட்டது. என் கருத்துப்படிச் சமணம் வெகுவாகப் பரவியிருக்குமானால், அது தனது மேன்மையை யிழந்திருக்கும். அதனைப் பின்பற்றுவோர் குறைவாகவுள்ளனர் என்பதிலேயே அதன் பெருமையும் அடங்கியிருக்கிறது.

சமணம் எந்த மதத்துடனும் விரோதம் பாராட்டுவதில்லை. அந்தந்த மதங்களில் குறைபாடுகளைச் சீர்திருத்தி அமைக்கவேண்டும். என்றே அது கருதியது. எல்லா வுயிர்களிடத்திலும் அன்பாயிருத்தலையும், எல்லாப் பொருளையும் நடுநிலையுடன் ஆராய்தலையும், முப்பது கோடி இந்துக்களும் மேற்கொண்டொழுகுவாரானால், அது சமணத்துக்கு வந்தவெற்றியேதான். 'ஜைன' என்ற சொல்லே 'வெற்றி' என்று பொருள்படும். தன்னை வென்றவன் எவனோ, அவனே உண்மை வீரன். உலகத்தை வென்றவன் வீரன். ஆனால், மகாவீரர் தம்மையே வென்றநாடு நில்லாது. இவ்வுலக அண்டத்தில் தாமும் இரண்டறக் கலந்துவிட்டார். பாலில் சருக்கரை கலந்தது போல.

இந்தியாவில் இடைக்காலச் சா˘த்திரத்தைக் காணும்போது ஒரு காலத்தில் நமது கல்லூரிகளில் ஆசிரியர் சமணராகவும், மாணவர் இந்துக்களாகவும் இருந்தனர் என்று தொ˘கின்றது. மராட்டிய தேசத்தில் முதன்முதல் குழந்தைக்குப் பாடங் கற்பிக்கும்போது, கணேசருக்கும், சித்தருக்கும் முதலில் வழிபாடு செய்யச் சொல்லிப் பிறகுதான் மற்றைய பாடங்களைத் தொடங்குகிறார்கள். இந்துக்கள் எல்லாரும் கொண்டாடும் தெய்வமாக விருப்பதால், கணேசருக்கு முதலில் வழிபாடு செய்யும்படிச் சமண ஆசிரியர் கற்பித்தனர். விருஷபதேவருக்கு மறுபெயர் சித்தன் என்பது, எனவே சித்தனை வணங்கும்படி அடுத்தப்படியாகத் கற்பித்தனர். சமுதாயத்தில் சமணர் எவ்விதமான செல்வாக்குப் பெற்றிருந்தனர். என்பதை இந்த வுண்மைகள் நன்கு எடுத்துக்காட்டும். சமணர்கட்கு அமைந்த அடக்கம் என்ற பண்பு கணேசருக்கு முன்பு சித்தன் வழிபாட்டை நடத்த வற்புறுத்த வில்லை.

சமணர் தங்களுக்கென்ற சில தனியுரிமைகளை எப்பொழுதும் வேண்டுவதில்லை. அவர்கள் தங்களைச் சீர்திருத்தக்காரர்களாகவே கருதினார்கள். அவர்கள் செய்த பணியும் அதுவேதான். அவர்கள் உண்மையிலேயே இந்து மதத்தில் பொ˘ய சீர்திருத்தத்தைச் செய்திருக்கிறார்கள். அவர்கள் கருத்து, அந்நெறியிலேயே எதிர்காலத்திலும் செல்லவேண்டுமென்பது. அˇதாவுது மக்கட்குக் குருமாராக விளங்க அவர்கள் முனையவில்லை. மற்று, ஊழியராகவிருந்து, மக்கட்குக் கற்பிக்கவும், அவர்களைச் சீர்திருத்தாந்தங்களை மிக வெற்றிகராமாகப் பரப்ப முடியும் என்பதே இதற்குக் காரணம்."

இவ்வளவு சிறப்புற்றோங்கிய அறிவியக்கமும் அறநெறியும் 7 அல்லது 8-ம் நூற்றாண்டிற்குப் பின்னர் சிதறுண்ட செய்தி வரலாறு கண்ட உண்மை. அதனால் உலகிற்கு ஏற்பட்ட நஷ்டத்தையும் குழப்பத்தையும் உணர்ந்தே மகாத்மா காந்தியடிகள் விருஷபதேவர் கண்ட அஹிம்ஸா தருமத்தையும் சமுதாய ஒற்றுமையையும் மேற்கொண்டாரென முன்னரே கூறியுள்ளோம். அதனை மெய்ப்பிக்கும் வகையில் நமது ஆச்சார்ய வினோபாபாவே அவர்களும் 30-10-51-ல் தாம் ஆற்றிய சொற்பொழிவின் இடையே "ஜைன சமூகம் எண்ணிக்க¨யில் சிறியதாயினும், தனிப்பட்ட சிறப்புடைதாயிருக்கிறது அதனுடைய நிலை பாலில் சர்க்கரைக்கு ஒப்பானது. அது இந்தியக் கலாச்சாரத்தின் அளவைகளை உயர்த்தியுள்ளது. அது மதிப்பிடமுடியாத இலக்கியக் குவியலைப் பெற்றுள்ளது. அதனுடைய உயிர் அஹிம்ஸை என்னும் நறுமணத்தை உடைத்தாயுள்ளது. மகாத்மா காந்தியடிகள் பிராசாரம் செய்து வந்த அஹிம்ஸையின் தத்துவம் ஜைன அஹிம்ஸைக் கொள்கையே யாகும். இந்த அஹிம்ஸை தத்துவம் புதியதல்ல, ஆனால் பழமையானது-மிகமிகப் பழமையானது-மிகமிகப் பழமையானது." என அறிவித்துள்ளார்.

1  2  3  4  5  6


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com