முகப்பு வாயில்

 


இத்தகைய சிறப்பு வாய்ந்த பொருளாதார சமத்துவத்தை அறநெறிகளில் ஒன்றாக வகுத்தளித்த பகாவன் விருஷப தேவரைத் தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள் தாமியற்றிய "அருகன் அருகே" என்ற அறிவு சான்ற நூலிலும், "பொருளும் அருளும்" என்ற பொருள் செறிந்த நூலிலும் மிக அழகாக விளக்கியுள்ளார்கள். தமிழ்ப் பொயார் திரு.வி.க. அவர்களின் அறத்தொண்டும் அரசியல் தொண்டும் இமயம் முதல் குமாவரை நன்கு அறியும். இப்போது அப் பொயாரின் இரு கண்களும் படலம் மறைக்கப்பட்டு ஒளியிழந்துள்ளன. எனினும் அவர் தம் இயற்கைப் பண்பும் இணையற்ற அறிவும், வாளாவிருக்கவில்லை. மேல்நாட்டு அறிஞர் மில்டன் போன்று இன்று திரு.வி.க. அவர்களின் அறிவும் சுடர் விட்டு ஒளி வீசுகின்றது. இவ்வொளியினின்றும் உதித்தவை தான் மேலே கூறிய இரு அரசியல் அறநூல்களுமாகும். அவ்விரு நூல்களிலும் மிகுபொருள் விரும்பாமை என்னும் பேரறத்தை விளக்குகையின் முறையே அவர்கள்,

"பொருளொரு பாலே பெருகி மறுபால்
அருகின் குழப்பம் ஆர்க்கும் என்பதை
என்றோ! என்றோ! என்றோ உணர்ந்து
மிகுபொருள் வேட்டலை விடுக வென்றவன்"

எனத் திருக்குறள் ஆசிரியர் போன்றேபகவான் விருஷப தேவரைப் போற்றுகின்றார்கள். அதுமட்டுமல்ல,

"ஆதி அருகன் ஓதினான் மூலம்;
அகிம்சை மேலாம் அறமென முதல்முதல்
அருளிய பெருமை அருகனுக் குண்டே;
அகிம்சை உயிர்ப்பை அளித்த ஐயன்
சீலப் போர்வையும் கால அமைத்தவன்
சீலம் வளர்வழி கோலினன்: அதுவே
மிகுபொருள் விரும்பா மேன்மை ஒழுக்கம்
மிகுபொருள் விரும்பாத் தகுதி யிடத்தில்
அகிம்சா தருமம் ஆடல் புரியும்;
மிகுபொருள் விரும்பும் விலங்குள இடத்தில்
அகிம்சை அகலும்; புகுங்கொலை களவு;
மிகுபொருள் விரும்பாத் தகுதி, அகிம்சை,
உண்மை சீலம் ஓழுக்கம் காக்கும்,
பொருளின் நிலைக்கும் அருளின் நிலைக்கும்
உற்றுள தொடர்பை உற்று நோக்குக;"

என்று, கடலிலே திசை தொயாது கலங்கும் மாலுமிக்குத் திசையறிவிக்குங் கலங்கரை விளக்கம்போல, பண்டைய அரசியல் கொள்கையை இன்றைய மக்களுக்கு நன்கு விளங்குன்றார்கள். எனவே தமழ்ப் பொயார் திரு.வி.க. அவர்களின் உள்ளமும் பாட்டாளி மக்களின் பக்கமே பேசுகின்றத. மகாத்மா காந்தியடிகளும் அஹிம்ஸை, மிகுபொருள் விரும்பாமை என்னும் அறங்களையே மேற்கொண்டா ரென்பதற்கறிகுறியாக மிகுபொருள் விரும்பா மேனிலையை விளக்கும்போது "நமது பொருள்களுக்கு நம்மை உரியவர்களாக நினைத்துக் கொள்ளாமல் தருமகர்த்தாக்களாகவே கருத வேண்டும். அப்பொருள்களை சமூக நலனுக்காகப் பயன்படுத்தித் தாமும் பொதுச்சேவையில் ஈடுபட வேண்டும். பொதுச் சேவை செய்வதன்பொருட்டு நமக்குத் தேவையான சிறிது பொருளை அதில் எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு தனவந்தவர்களும் செய்ய முன்வந்தால். நாட்டில் ஏழை என்றும், செல்வம் என்றும் பாகுபாடின்றி, மக்கள் அனைவரும் இன்புற்று வாழ்வார்கள்" என்று கூறியுள்ளார்கள்.


ஆச்சார்ய வினோபாஜீயின் அருள் தொண்டு

சிறப்பு வாய்ந்த இத்தத்துவத்தைத் தான் இன்ற நமது ஆச்சார்ய வினோபாஜீ நடைமுறையில் செயலாற்றி வருகின்றார். அண்மையில் காசியில் பேசிய பொதுக் கூட்டத்தில், "இன்று காரல் மார்க்ஸின் கருத்துக்கள் பரவிவிட்டன. அதைச் சிலர் விரும்பவில்லை ஆயினும் அதைப்பற்றி எல்லோரும் யோசிக்கின்றனர். மார்க்ஸின் கருத்துக்கள் எப்படி பரவின? ஹிம்ஸையால் பரவியதா? இல்லை. செயலாளர் பலர் அதை மக்களுக்கு உரைத்துப் பிரசாரம் செய்தனர். இக்கருத்துக்களின்படி வாழ்க்கை நடத்தினார்கள். மார்க்ஸ் ஒரு மகாஷி. அவர் சக்திவாய்ந்த கருத்துக்களை மக்களுக்கு எடுத்துச் சொன்னார். இப்போது அவை தம் சக்தியாலேயே பரவிவிட்டன" எனக் கர்ஜித்துள்ளார். இதனால் வினோபாஜீக்குப் பொதுவுடைமைக் கொள்கையில் நம்பிக்கையும், அது நமது நாட்டிற்கு அத்தியாவசியம் என்ற ஆர்வமும் ஏற்பட்டுள்ளதென்பது விளங்குகிறது. அது மட்டுமல்ல! அதனை அஹம்ஸா முறையில் செயலாற்றவும் துணிந்துவிட்டார்.

ஆச்சார்ய வினோபாஜீ அஹிம்ஸா தருமத்தையும் மிகுபொருள் விரும்பாமை எனும் பொதுவுடைமைத் தத்துவத்தையும் மக்கள் வாழ்க்கையில் புகுத்தி, ஒரு புத்துணர்ச்சியை வளர்த்து வரும் பொதுவுடமைச் சேவையை என்றும் மறக்க வியலாது. அளவுக்கு மிஞ்சிய நிலங்களைப் பெற்றிருக்கும் நிலச்சுவான்தார்களிடம் சென்று, ஏழை மக்களின் துன்ப நிலையைத் தமது கண்ணீரால் விளக்கி, அவர்கள் வாழ்வை நிலை நிறுத்த நிலதானங் கேட்கின்றார். வினோபாஜீயின் அறவுரைகள் நிலச்சுவான்தார்களின் உள்ளத்தே ஊடுருவிச் சென்று உருக்குகின்றன. நிலச்சுவான்தார்களும் ஏழைகள்பால் இரக்கங்கொண்டு தங்களாலான நிலங்களை மகிழ்ச்சியோடு தானம் செய்கின்றார்கள். இதுவரை ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கிடைத்துள்ளன. நமது ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத், பீகாரிலுள்ள தமது எஸ்டேட்டிலிருந்து தேவையான நிலத்தைச் தொந்தெடுத்துக் கொள்ளும்படி ஸ்ரீ வினோபாஜீயிடம் தொவித்துவிட்டார். இது போன்று தமிழ் நாட்டிலும் பல நிலச்சுவாந்தார்கள் ஏராளமான நிலங்களைத் தானம் செய்து வருகின்றார்கள். எனவே நிலப்பங்கீடு செய்வதில் மக்களுக்கு எவ்வளவு ஆர்வம் ஏற்பட்டுள்ளது என்பது இதனால் விளங்குகிறதன்றோ?

"தம்மில் இருந்து தமது பாத்துண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு"


எனக் குறளாசிரியர் கூறியதுபோலன்றோ மக்கள் மகிழ்ச்சியோட நிலதானம் செய்து வருகின்றார்கள். ஸ்ரீ வினோபாஜீ டெல்லியில் பேசுகையில் "இந்தப் பிரயாணத்தில் எனக்குத் தினம் ஒன்றுக்கு 300 ஏக்கர்கள் வீதம் வழங்கப்பட்டன. இந்தச் சாதனையைக் கண்டு ஆச்சாயப்படத் தேவையில்லை. ஏனெனில், இந்தத் திட்டம் நாட்டில் அமைதி நிலவ உதவும் என்பதை மக்கள் தொந்துகொண்டு விட்டனர். காந்திஜீயின் போதனைகளாலும், நம் புராதன கலாசார பண்பாடுகளாலும் சமாதான பாதையில் செல்லும் இந்தியாவுக்கு எப்பொழுதும் கெளரவம் ஏற்பட்டுள்ளது." என்று இறுதியாகக் கூறினார். ஏழைகளின் நண்பரான அவர் அந்நிலங்களை பாட்டாளி மக்களுக்கே பங்கீடு செய்து சொந்தமாகின்றார். இனி உலகில் வாழ வழியில்லையே என ஏங்கி நின்ற பல குடும்பங்கள் எதிர்பாராத இவ்வின்ப நிலையை எய்தி, வாழ்க்கையை நடத்தி வருகின்றன. பகுத்துண்டு பல்லுயிரோம்பும் பண்பும் இன்று மக்களிடையே வளர்ந்து வருகிறது. நாட்டில் அமைதியும் சமாதானமும் உண்டாகவேண்டுமானால், ஆச்சார்ய வினோபாபாவேயின் வேண்டுகோலை மக்கள் மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் நாட்டில் வறுமையும் பசியும் வளர்ந்து பெரும் புரட்சியில் கொண்டு செல்லும். இவ்வுண்மையைப் பொதுவுடைமைப் பொயார் திரு.வி.க. அவர்கள் கருத்து போன்றே ஆச்சார்ய வினோபாபாவே 12-10-51ல் ஹான்ஸி என்ற ஊரில் பேசிய சொற்பொழிவில் விளக்குகின்றார், வருமாறு:-

"பொய மிராசுதார்களுடைய மனோபாலத்தில் மாறுதல் ஏற்படும்படிச் செய்து நிலத்தில் உழுது பாடுபடுகிறவர்களிடம் அனுதாப உணர்ச்சி ஏற்படும்படி செய்வதே என்னுடைய நோக்கமாகும். நிலத்தின் சொந்தக்காரர் கடவுளே யன்றித் தாங்கள் அல்ல என்பதை மிராசுதார்கள் உணரவேண்டும் மற்ற இயற்கைச் சாதனங்களை பகிர்ந்து அனுபவிக்க எல்லா மக்களுக்கும் சம உரிமை இருப்பதைப்போலவே, நிலத்தையும் பகிர்ந்து அனுபவிக்க அவர்களுக்கு உரிமை உண்டு என்பதை மிராசுதார்கள் அறியவேண்டும்.

"தேவைக்கு அதிகமான நிலத்தை வைத்துக்கொண்டிருப்பதே பெரும் பாவகாரியம் என்ற மனோநிலை நிலச்சுவான்தார்களுக்கு ஏற்படவேண்டும் என்றே நாம் விரும்புகிறேன். இதில் நான் வெற்றிபெற்று விடுவேனாயின், ரத்தம் சிந்தாமலேயே சமூக அமைப்பில் பொய மாறுதல் ஏற்பட்டதாகும் இது இல்லையானால் இரத்தஞ் சிந்தி புரட்சி உண்டாகும். இதனால் துன்பங்கள், படுகொலைகள் பட்டினி போட்ட கஷ்டங்கள், ராணுவங்களுக்கேயன்றி நிரபராதியான மக்களுக்கும் அதிகமாக உண்டாகும்."


கி.மு. 6-வது நூற்றாண்டில் பொதுவுடைமை!

நமது நாட்டில் பகவான் விருஷபதேவரால் அருளப்பட்ட ஐம்பெரும் அறங்களில் ஒன்றாகிய மிகுபொருள் வெகாமை என்ற பொதுவுடைமைத் தத்துவத்தைக் கடைப்பிடித்து மக்கள் வாழ்ந்ததாக ச்சாத்திரச் சான்றுகளும் இருக்கின்றன. 9-6-47 "பாரததேவி" யில் அன்பர் எஸ். என். என்ற அறிஞரால் எழுதப்பட்ட "ஆதிகால இந்தியாவில் பொதுவுடைமை" என்ற கட்டுரையில், "கிறிஸ்து பிறப்பதற்குமுன் 6-வது நூற்றாண்டில் அதாவது ஜைனமதம் தலையெடுத்தபொழுது. நம் நாட்டில் பொதுவுடைமை அமுலில் இருந்திருக்கிறது. எல்லா நிலங்களும் பொதுவாக உழப்படும் பலன் எல்லாருக்கும் பங்கிடப்படும். பொது நிலங்களைத் தனிப்பட்டவர்கள் யாரும் சொந்தமாகக் கொள்ளமுடியாது. கிராமங்களில் செல்வம் சாயாகப் பங்கிடப் பட்டிருந்தது. அப்பொழுது பிச்சைக்காரர்கள் கிடையாது. நிலச்சுவான்தாரும் கிடையாது" என விளக்கியுள்ளார்.

இவ்வரலாற்றுச் செய்திக்கு அரணாக பகவான் விருஷபதேவர் அருளிய அறத்தின் வழிவந்த இலக்கியங்களான சீவக சிந்தாமணி காவியத்திலும் மேருமந்திரபுராணத்திலும் விளங்குகின்ற இருபெரும் பொதுவுடைமைக் கவிகளை இங்கே கண்டு மகிழ்வோம்.

"ஒன்றுடைப் பதினையாண்டைக்
குறுகடன் இறைவன் விட்டான்
இன்றுளீர் உலகத்தென்றும்
உடனு ளீராகி வாழ்மின்
போன்றாக பசியும் நோயும்
பெருந்தலில் பகையும் என்ன
மன்றல மறுகுதோறும்
மணி முரசார்ந்த தன்றே"
-சீவக சிந்தாமணி.

" பாரிலுள்ளவர்க் கெலாம் படுபயன் பொதுவுமாய்
ஏர்மலிக் திடங்களெங்கும் இன்பமே பயந்துநல்
வோசாந்த மூடுபோகி மேவியாடல் பாடலோடும்
வாரமாதர்போன்ற மாடவூர்க டோறும் மாடெலாம்"
மாடெலாம் = செல்வமெல்லாம்.
- மேருமந்தர புராணம்

உலகமே வியப்புறும் இவ்வின்பக் காட்சியாம் பொருளாதார சமத்துவத்தை, அறிவியல் கொள்கையை முதல் முதல் உலகுக்குப் போதித்த பகவான் விருஷப தேவர் யார் என்பதை ஆராய்வோம்.

"பகவான் விருஷபதேவர் யார்?"

"அகரமுதல வெழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு"
என்ற திருக்குறள் கடவுள் வாழ்த்தின் முதற்குறளையும் அதனைத் தொடர்ந்து வரும் மற்ற ஒன்பது குறள்களையும் கடவுள் வாழ்த்தாகத் கொண்டாடுகின்றோம். ஆனால், திருக்குறள் ஆசிரியர் கருத்திற் கேற்ப, கடவுட் கொள்கையை அறிந்துளளோமா என்றால், அதுதான் இல்லை. நமது தமிழகத்தின் துரதிர்ஷ்டம் தருமர் போன்ற பேரறிஞர்களின் உரைகள் கிடைக்காமையால், பிற்காலத்தெழுந்த மதவாதிகளின் உரைகளே இன்று காணப்படுகின்றன. அதனால் அந்தந்த உரையாசிரியர்களின் மதக்கொள்கைகளுக்கேற்பக் கடவுட் கொள்கையும் வலிந்து உரைகாணப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல! பெரும்பாலும் அம்மதக் கொள்கைகளுக்கு முரணாக இருப்பதால், சிலர் இப்பத்துக் குறட்பாக்களும் இடைச்செருகல் என்று கூடக் கூசாமல் எழுதியும் பேசியும் விடகின்றார்கள். எனவே, திருக்குறள் ஆசிரியரைப் பற்றியும் அவராற் போற்றப்படும் ஆதிபகவனைப் பற்றியும், பெரும்பாலோரால் நன்கு அறிந்துகொள்ள முடியாமற் போய்விட்டது. எனினும் திருக்குறள் சார்பான தமிழ் இலக்கியங்களும், நீதி நூல்களும், தோத்திரப்பாக்களும் ஆதிபகவானைப் பற்றியும் அவரது அறநெறிகளைப் பற்றியும் வெள்ளிடைமலைபோல விளக்கிக் கொண்டிருக்கின்றமையால், அக்கொள்கை என்றும் நிலைத்து நிற்குமென்பது உறுதி.

"மன்னிய பேருகலனைத்தும்
நின்னுள்ளே நீ யொடுக்கினை
நின்னின்று நீ விரித்தனை
நின்னருளின் நீ காத்தனை
எனவாங்கு.
ஆதிபகவானை யருகனை
மாதுயர் நீங்க வழுத்துவம் பலவே"
எனத் திருக்கலம்பகமும்,

"ஆதிபகவன் அசோகவசலன்
சேதிமுதல்வன் சினவரன் தியம்பகன்"
எனத் திருப்பாமாலையும்,

"அத்தனே யென்னை ஆளீர் சரணம்
ஆதிபகவா னருளே சரணம்"
எனத் தோத்திரத்திரட்டும்.

கோதி வருகன் றிகம்பர ணெண்குணன் முக்குடையோன்
ஆதிபக னசோகமர்ந்தோ னற வாழியண்ணல்
சோதி முனைவன் சினேந்திரன் பொன்னெயில்
நாதன் சுத்தன்
போதி னடந்தோ னதிசமன் சாந்தனற் புங்கவனே
எனக் கயாதர நிகண்டும், ஆதிபகவன் என்ற சொற்றொடரையே கொண்டு கடவுள் நிலையை விளக்குகின்றது.
 

1  2  3  4  5  6


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com