ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >99. திரஸகாயிக ஜீவன் எது?
</span><br>

<p><b>பதில் </b>: ஈந்திபம் முதல் பஞ்சேந்தியம் வரையிலும் உள்ள சாரதா ஜீவன்கள் திரச ஜீவன்களாம். இவை திரசநாளிகையிலேதான் பெறப்படுகின்றன. அதாவது மரண சமயத்தில் ஆயுள் ஒரு அந்தர் முகூர்த்தகாலம் இருக்கும்போது ஆத்மாதான் அடைந்துள்ள சாரத்தை விடாமலே அடைய வேண்டிய சாரம் வரை பரவி பின்னர் மூல சாரத்தை அடைந்து மறுபடியும் தான் பிறக்குமிடம் செல்லும் இச்செய்கை நடந்துகொண்டும் சாரம் விட்டு சாரம் செல்ல திரச நாளிகையின் வெளியே வந்துகொண்டும் கேவலி சமுத்காதத்தில் கேவலிகளுக்கு அகாதி கர்மங்கள் நான்கில் ஆயுள் கர்மஸ்திதி மற்ற மூன்றையும்விட குறையுமாயின் அந்நிலையை சமமாக்கும் பொருட்டு கேவலிகளின் ஆத்ம பிரதேசம் பரவிக்கொண்டும் இம்மூன்று காரணங்களைத் தவிர திரசஜீவன்கள் திரச நாளிகையிலிருந்து வெளிப்படுவதில்லை.<br>
</p>

Previous Question Next