ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >97. நிகோதம் என்பது யாது?
</span><br>

<p><b>பதில் </b>: சாதாரண நாமகர்மத்தின் உதயத்தால் நிகோத சாரத்தையுடைய சாதாரண ஜீவனாகிறது. நி : நியமனமின்றி அனந்த ஜீவன்களுக்கு, கோ : ஒரேக்ஷத்ரத்தை, த : கொடுக்கத்தக்கது. அது நிகோத சாரமாகும். எவற்றிற்கு இந்த சாரமுள்ளதோ அவைகள் நிகோத சாரத்தையுடையனவாகும். அவைகளே சாதாரண ஜீவன்கள். ஒரு சாரத்தில் அநேக உயிர்கள் உள்ளவைகள் நிகோத சாரம். இப்படிப்பட்ட சாரத்தையுடைய ஜீவன். சூக்ஷ்ம பாதர என்று இருவகைப்படும். மூவுலகிலும் பரவி தடையின்றி உள்ளவைகள் சூக்ஷ்மஜீவன்கள், தடையுடனும் ஆதாத்துடனும் உள்ளவை பாதர ஜீவன்கள் எனப்படும். ஒரு நிகோத சாரத்தில் அனந்த ஜீவன்கள் ஒன்று சேர்ந்து பிறக்கின்றன. அப்படிப்பிறப்பவைகளின் சுவாசம் சேர்ந்தே சுவாசிக்கின்றன. ஒரு நிகோத சாரத்தில் ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொரு அனந்தானந்த ஜீவன் சேர்ந்தே உற்பத்தியாகின்றன. சேர்ந்தே மாக்கின்றன. ஆனால் அது நிகோத சாரத்தை உண்டுபண்ணிக்கொண்டே யுள்ளது. நிகோத சாரத்தின் உச்சநிலை அசங்கியாத கோடா கோடி சாகரமாகும். எந்த சாரத்தில் போதிய ஜீவன்கள் உற்பத்தியாகின்றனவோ அவற்றில் எல்லாம் போதுமானதே உற்பத்தியாகின்றன. எதில் போதாக் குறைவான ஜீவன்கள் உற்பத்தியாகிறதோ அவைகள் எல்லாம் குறைவாகவே உதிக்கும். ஒரு சாரத்தில் இருவகையான ஜீவன்கள் உற்பத்தியாவதில்லை. இவைகள் எல்லாம் சாதாரண சார வனஸ்பதி காயத்திலுள்ளன. ஒவ்வொரு வனஸ்பதியும் நிகோதம் அல்லது சாதாரண ஜீவசாரத்துடன் உள்ளது. அவைகளை நிலையற்ற பிரத்யேகம் என்கிறோம். எந்த நிகோத ஜீவன் குறைந்த கர்ம உதயத்தால் குறைவானதாகிறதோ அவைகளின் ஆயுள் ஸ்வாசத்தின் பதினாலாவது பாகமாகும். எந்த வனஸ்பதியின் கிழங்கு (அ) வேர் (அ) அல்பமான பிவுகளுடையது, கிளையினது பட்டை பருமனாக உள்ளவை அனந்தகாய சகிதம் நிலைத்திருக்கும் தனித்தனியானதுமாகும். மெல்லியபட்டை உள்ளவை நிலைபெறாத தனித்தனியாகும்.<br>
</p>

Previous Question Next