ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >95. புத்கலதிரவியமென எதைச் சொல்லுகிறோம்?
</span><br>

<p><b>பதில் </b>: எவை நிறைவாகவும், குறைவாகவும் உள்ளதோ அவைகளுக்கு புத்கலம் என்று பெயர். நம்முடைய ஐந்து இந்தியங்களாலும் கிரகிக்க வல்லனவெல்லாம் புத்கலங்களே. புத்கலமானது பரமாணு ஸ்கந்தம் என இருவகைப்படும். புத்கலத்தில் ஸ்பாச ரசகந்த வர்ணமென்னும் குணங்களுள்ளன. ஒவ்வொன்றின் கிரமத்தால் 8+5+2+5 = 20 ஆகிறது. பரமாணுவில் ஒரு சமயத்தில் ஐந்து குணங்கள் பெறப்படும். ஸ்பாசம் 2 அதாவது சொரசொரப்பு-வழவழப்பு/சீதம் (அ) உஷ்ணம் லேசான (அ) பளுவான மிருது (அ) கடினம்/மனம்/ரஸம்/கந்தம்/வர்ணம் புத்கலத்திற்கு அநேக பேதங்களின் பின்ன பாயாயங்களைப் பார்ப்பதற்காக செய்யப்பட்டுள்ளன. சப்தம் 2, பந்தம் 2, சூக்ஷமம் 2, ஸ்தூலம் 2, ஸம்ஸ்தானம் 2, பேதம் 6 இருள் / நிழல் 2, வெய்யில் பிரகாசம்/இணை (ஸ்கந்த) 2 அணு / முதலியனவாம்.


</p>

Previous Question Next