ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >94. சாதாரண வனஸ்பதி என்பது யாது?
</span><br>

<p><b>பதில் </b>: எந்த வனஸ்பதியில் ஒன்றில் அனந்த ஏகேந்திய ஜீவன் ஒன்றாய் வசிக்கின்றதோ பிறக்கின்றனவோ இறக்கின்றனவோ அவைகளை சாதாரண வனஸ்பதி (அ) அனந்தகாயம் என்கிறோம். சாதாரண வனஸ்பதியில் நிலைத்துள்ள பிரத்யேகம் நிலையாகவுள்ள பிரத்யேகம் என்றும், நிலையற்ற பிரத்யேகத்தை நிலையில்லா பிரத்யேகம் என்றும் சொல்லுகிறோம். ஒரு ஜீவன் அதற்கு பிரதானமாகுமேல் அது பிரத்யேகம் எனப்படும். நிலையான பிரத்யேகத்தையறிய கணு வெளிப்படாமலும் அவை சிறிது வெளிவந்த அந்த பிரத்யேக வனஸ்பதியின் சாரத்தின் நுணி சந்திவுடன் சமானமாய் உடைந்து நூல் போன்ற ஒரு வஸ்து உண்டாகாதிருக்கிறதோ அது வெட்டப்பட்ட பிறகும் முளைக்கக்கூடியதாகவுமுள்ளதோ அவைகள் நிலையான பிரத்யேகம் என அறிக. இக்குறிகள் மாறுபடுமாகில் அது நிலையற்ற பிரத்யேகம் என அறிக. எந்த வனஸ்பதியின் வேர் (அ) கிழங்கு மரம், இலை, பழம், விதை சமமாய் விடுகிறதோ அவை அநந்தகாய ரூப நிலையான பிரத்யேகமாகும். அதன் வேர் முதலியன சமமாகாதது நிலையற்ற பிரத்யேகமாகும். எந்த வனஸ்பதியின் கிழங்கு வேர் சிறிய கிளை பட்டை பருமனாக உள்ளதோ, அது அனந்த காயமாகும். எதன்பட்டை மெல்லியதாக உள்ளதோ அது நிலையற்ற பிரத்யேகமாகும்.<br>

</p>

Previous Question Next