ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

80. ஸம்ஹனனம் என்பது யாது? அது எத்தனை வகைப்படும்?

பதில் :ஸம்ஹனன நாமகர்ம உதயத்தால் ஒளதாக சாரத்தால் திரசஜீவன்கள் விசேஷ எலும்புகளைப் பெறுகின்றன : அதை ஸம்ஹனனம் என்கிறோம் அவைகள் 6 வகை.

1. வஜ்ரவிரஷபநாராச ஸம்ஹனனம் : இதில் வஜ்ரமயமான நரம்புகளின் வலை, கீல்மூட்டு, எலும்புகளுமிருக்கும்.

2. வஜ்ரநாரச ஸம்ஹனனம் : வஜ்ரமயமான மூட்டுகளும், எலும்புகளுமிருக்கும்.

3. நாராச ஸம்ஹனனம் : எலும்பு உறுதியாயிருப்பதற்காக நிறைய கீல்கள் இருக்கும்.

4. அர்த்தநாராச்ச ஸம்ஹனனம் : அப்படிப்பட்ட எலும்பு இதில் பாதி கீல்களிருக்கும்.

5. கீலிதம் : இதில் எலும்பு ஒன்றுக்கொன்று சேர்ந்திருக்கும்.

6. அசம்பிராப்தஸ்ரபடி காஸம் ஹனனம் : இதில் எலும்பு மாமிசத்தால் ஒன்று சேர்ந்திருக்கும்.

Previous Question Next