ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

79. சுக்லத்தியானத்தின் ஸ்வரூபம் யாது?

பதில் :நிர்மலமான ஆத்ம தியானத்தில் பாபூர்ணமாக மனம் ஈடுபட்டு லயித்து விடுவதை சுக்கிலத்யானம் என்கிறோம். இத்தியானம் உத்தம ஸம்ஹனனமுடையவான் எட்டாவது அபூர்வகரண குணஸ்தானத்தால் உண்டாகிறது. இது நான்கு வகைப்படும்.

1. பிரதர்க்க விதர்க்க விசாரம் : இது 8வது குண ஸ்தானம் முதல் 11வது குணஸ்தானம் வரை சிறிதுபாகம் 12வது குணஸ்தானம் வரையிலுமுள்ளது. இதில் தனித்தனியாக்கி யோகம், சப்தம், அர்த்தத்தின் மாறுதல், அபுத்தி பூர்வகம் ஏற்படுகிறது. இதனால் மோகக்ஷயம் ஏற்படுகிறது.

2. ஏகத்வவிதர்க்க விசாரம் : இது தனி ரூபமானது. ஏதேனுமோர் யோகத்தில் ஸ்திரரூபமடைகிறது. இது 12ம் குணஸ்தானத்தில் ஏற்படுகிறது. இதனுடைய பிரதாபத்தால் காதி அகாதி கர்மங்கள் நாசம் செய்யப்பட்டு கேவலக்ஞானம் உண்டாகிறது.

3. சூக்ஷமகியாபிரதிபாதி : 13ம் குணஸ்தானத்தின் அந்தியத்தில் சூக்ஷமயோகத்தில் ஏற்படுகிறது.

4. வ்யுபரத்கியா அனிவர்த்தி : சகலவேலைகளும் முடிந்த பின்னர் 14வது அயோகி குணஸ்தானத்தில் ஏற்படுகிறது. அப்போது மோக்ஷமடைகிறது.

Previous Question Next