ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

75. புத்தித்தி என்பது யாது? அது எத்தனை வகைப்படும்?

பதில் : தபத்தின்மூலம் ஆத்மாவிற்கு விசேஷஞானம் உண்டாகிறது அதை புத்தித்தி என்கிறோம் ஞானசக்தி 18 வகை.

1. அவதிக்ஞானம் : தன் முற்பிறப்பறிதல்.

2. மனப்பர்ய்யஞானம் : தனதும் பிறரதும் மனதிலுண்டானதையறிதல்.

3. கேவலக்ஞானம் : மூன்று காலங்களிலும் நிகழ்வதை யுணர்தல்.

4. பீஜபுத்தி : ஒரு பீஜாக்ஷரத்தை தொந்தும் அதன் அநேக பதார்த்தங்களின் ஞானமுண்டாதல்.

5. கோஷ்டபுத்தி : தனித்தனி பதார்த்தங்களின் ஞானமுண்டாதல் கிடங்கிலுள்ள சாமான்களுக்குச் சமமாக வேண்டியபோது கொள்ளல்.

6. பதானுசா : ஒரு பதத்தைக் கொண்டு எல்லா கிரந்தத்தையுமறிதல்.

7. சம்பின்னஸ் ரோத்ரத்வம் : 12 யோஜனை நீளமும் 9 யோஜனை அகலமும் உள்ள க்ஷத்திரத்தில் மனித மிருகங்களின் சப்தத்தை ஒரே காலத்தில் தனித்தனியாக கேட்டறிதல்.

8. ரஸ்னேந்திய ஞானம் : 9 யோஜனைக்கும் வெளியிலுள்ள பதார்த்தங்களின் ருசியை அறிதல்

9. ஸ்பாசனேத்தியஞானம்.

10. கிராணேந்திய ஞானம்.

11. சக்ஷஇந்திரய ஞானம்.

12. ஸ்ரோத்ரேந்திய ஞானம். இந்நான்கின் நியத உத்திருஷ்ட விஷயத்தால் வெளி விஷயங்களை அறிதல்.

13. தசபூர்வதா ஞானம்.

14. சதுர்தசபூர்வ ஞானம் : 14 பூர்வத்வமும் சகல சுருத ஞானமும்

15. அஷ்டாங்கநிமித்த ஞானம்

16. பிரக்ஞாஸ்ரவணத்வ ஞானம் : 14 பூர்வத்தில் படிக்காவிடினும் ஒரு பூர்வத்தில் ஒரு பதம் சொன்னால் அதை சந்தேகமின்றி அறிந்து கொள்ளக்கூடியது.

17. பிரத்யேக ஞானம் : பிறருடைய உபதேசமின்றியே தன் அறிவினாலேயே ஞான சம்யமத்தில் பற்று.

18. வாத்திய ஞானம் : வாதத்தில் இணையற்றவனாக்கும் சக்தி.

Previous Question Next