ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

72. ஐந்து சாரங்களின் ஸ்வரூபங்கள் யாவை?

பதில் : ஒளதாகம், வைக்யகம், ஆஹாரகம், தைஜஸம், கார்மணம் என்பன.

1. ஒளதாக சாரம் : சாரநாம கர்மோதயத்தால் ஒளதாக முதலாகிய சாரங்கள் உண்டாகின்றன. ஒரு ஜீவன் ஒரு சாரத்திலிருந்து வேறொரு சாரத்தில் அடைவதற்கு அதன் ஒளதாக சார நாமகர்மத்தின் உதயத்தால் ஒளதாக சாரத்திற்குத்தக்க தோற்ற அளவில் கிரகித்து சாரமாகிறது. ஒளதாக சாரம் பூர்ண மெய்தாதவரை அதாவது சார மெடுத்ததற்குப் பின்னர் சார மாறுதலில் பூர்ணமடையாதவரை ஒளதாகம் மிஸ்ரகாய யோகமாயுள்ளது. இதில் ஒளதாகத்துடன் கார்மணயோகத்தின் மிஸ்ரமேற்படுகிறது. இச்சாரம் மனிதர்களுக்கும் திர்யஞ்ச ஜீவன்களுக்கும் உண்டாகிறது.

2. வைக்யக சாரம் : இது வைக்யக சார நாமகர்ம உதயத்தால் ஏற்படுகிறது. விஷயவாசனைக் குத்தக்கபடி மாறுவதற்கேற்ற சாரம் தேவர்களுக்கும் நாரகர்களுக்கும் உண்டாகிறது.

3. ஆஹாரக சாரம் : ஆஹாரக சார நாம கர்மோதயத்தால் பிரமத்த ஆறாம்குண ஸ்தான முனிவான் ஆஹாரக வர்க்கணாவிலிருந்து ஆஹாரக சாரம் உண்டாகிறது. இச்சாரம் ஏற்பட ஒரு அந்தர் முகூர்த்த காலம் பிறக்கிறது. இது ஒரு கை பிரமணம் ரசம் முதலிய ஏழு தாதுக்கள் இன்றி உள்ளது, மிக அழகாகவும் வெண்ணிறமாகவும் உள்ளது. இது முனிவான் தலையிலிருந்து வெளிவருகிறது எங்கும் தடைபடுவதில்லை. 2 1/2 தீபத்தில் எங்கு தன்னால் போக சக்தியில்லையோ அங்கு இந்த சாரம் போகிறது. கேவலி, சுருதகேவலி தாசனம் செய்வதால் சந்தேகம் நீங்கி விடுகிறது. இச்சாரத்தின் காரணத்தால் முனிவர்கள் தன்னுடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்து சூக்ஷ்ம அர்த்தத்தை கிரகித்துக்கொள்கின்றனர். இதனால்தான் இதற்கு ஆஹாரக சாரம் என்கிறோம்.

4. தைஜஸ சாரம் : தைஜஹ வர்க்கணாக்களால் தைஜஸ சாரம் உண்டாகிறது. அது சகல சம்சார ஜீவன்களுடன் ஒவ்வொரு சமயமுமிருந்து இறந்த பிறகும் உடன் போவது.

5. கார்மண சாரம் : இது ஞானாவரணாதி எட்டு கர்மங்களின் சாரம் இது உலக ஜீவன்களுடன் ஒவ்வொரு சமயமுமிருந்து இறந்த பின்னரும் உடன் செல்லுகிறது.

Previous Question Next