ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >7. ஸ்நான விதிகள் யாவை?
</span><br>
<p><b>பதில் :</b> ஜிந பூஜை செய்ய இல்லறத்தான் தினந்தோறும் ஸ்நானம் செய்ய வேண்டும். முதலில் வடிஜலத்தால் ஸ்நானம் செய்து (சந்தியா வந்தனை) சுத்தமாகி புலனடக்கம், மெளனம் இவைகளைக் கொண்டு பகவானுக்கு பூஜை செய்தல், சாதாரண கிரகஸ்தன் கை, கால் சுத்தம் செய்து செளசம், தந்தசுத்தி, வாய் சுத்தி செய்து ஸ்நானம் செய்ய வேண்டும். பிறகு சுத்தமான வஸ்திரத்தை அணிந்து புனிதமுள்ள பொருள்களால் பகவானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். ஸ்நானம் ஐந்து வகையாகும். 1. பாதம் வரை கழுவுதல், 2. முழங்கால் வரை, 3. இடுப்பு வரை, 4. கழுத்து வரை, 5. சிரசுவரை கழுவுதலாம். பிரம்மசாกขயானவன் விவசாயம் வியாபாரம் முதலிய தொழிலை விட்டு இவற்றில் எவ்வகையான ஸ்நானமும் செய்யலாம். ஆனால் ஆரம்ப இல்லறத்தான் கழுத்து வரை, (அ) சிரசுவரை (இரண்டே) ஸ்நானம் செய்ய வேண்டும்.
குறிப்பு : பூஜைக்காக சிரசுவரை ஸ்நானம் செய்தேயாக வேண்டும்.
</p>
 

Previous Question Next