ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >57. காயோத்ஸர்க்கம் என்பது என்ன?

</span><br>
<p><b>பதில் </b>:
அடியிற்கண்ட முறைப்படி நிற்கும் ஆசனத்திற்கு காயோத்சர்க்கம் என்கிறோம். இருகைகளும் கீழ் நோக்கி நீண்டும், பாதங்கள் 4 அங்குல வித்தியாச இடைவெளியில் சமமாக இருக்க வேண்டும். எல்லா அங்கங்களும் நேராகவும் அசையாமலிக்க வேண்டும். முனிகளின் சாரமுதலியவற்றால் ஏற்படும் மமதையை விட்டு ஆத்மாவையே சிந்தித்திருப்பது காயோத்சர்க்கம். காயோத்சர்க்கத்தின் உச்சகாலம் ஒருவருடம் குறைந்த காலம், அந்தர்முகூர்த்தம் 9 ணமோங்கார மந்திரத்தை 27 ஸ்வாசோச்வாசத்தில் படித்தல் இவ்வளவு நேரத்தில் பிரசித்த காயோத்சர்க்கமாகி விடுகிறது. கிரந்த முதலிய ஆரம்பம் பூர்த்தியாக ஸ்வாத்தியாயம் வேதனாவில் முனி 27 உச்வாச நிச்வரசத்தில் காயோத்சர்க்கம் செய்கின்றனர். சஞ்சலமடைந்தும் சிறிய பொய சந்தேகத்திலும் 25 உச்ஸ்வாசத்தில் காயோத்சர்க்கம் ஏற்படுகிறது. இவர்கள் 32 தோஷங்களை நீக்க வேண்டும்.
புருவங்களை நெறித்தல் முகத்தை நீட்டல் தலையை யசைத்தல் சுவால் சார்தல் முதலியன.<br>
</p>

Previous Question Next