ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

53. கர்மம் என்று எதைச் சொல்கிறோம்? எத்தனை வகையாகும்?

பதில் :
எந்த கர்மம் வர்க்கணாரூபபுத்கலத்தின் ஸ்கந்தம், ஜீவன்களின் ராகத்வேஷ முதலியவற்றின் எண்ணங்களின் காரணத்தால் ஜீவனுடன் கட்டுண்டு ஞானாவரணாதி தன்மையை
அடைகிறதோ அவைகள் கட்டுப்படுவதற்கு முன்பு கர்மவர்க்கணா என்கிறோம். கண்டுண்ட பின்னர் கர்மம் என்கிறோம். இந்த கர்மங்களின் பயனால் எந்த ஜீவனுக்கு அசுத்தராகாதி எண்ணம் ஏற்படுகிறதோ அவைகளை பாவகர்மமென்றும், எது சார முதலாகிய வெளிபதார்த்த பிராந்தம் அடைகிறதோ அவைகளை நோகர்மமென்றும் சொல்லப்படுகிறது. இத்திரவிய கர்மத்தின் மூலபேதம் 8 விதமாகும்.

1. ஞானவரணம் : ஞானத்தை மறைக்க வல்லது இது 5 பேதமாகும்.

2. தாசனா வரணம் : தாசன குணத்தை மறைப்பது இது 9 பேதமாகும்.

3. மோகனீயம் : ஜீவன்தன் ஸ்வரூபத்திலிருந்து பிறவற்றில் மோகித்தும் ராகத்வேஷம் கொள்வதுமாகும். இது 28 பேதமாகும்.

4. அந்தராயம் : இது தானம், லாபம் பெறுவதையும், பலம் முதலியன வெளிப்படுவதையும், விக்னம் செய்வதாகும் இது 5 பேதமாகும்.

5. வேதனீயம் : இது சுகம் அல்லது துக்கம் அனுபவிக்க காரணமாயுள்ளது இது 2 பேதமாகும்.

6. ஆயுள் : நரகம் முதல் நான்கு கதிகளிலும் தன் ஆயுளை அனுசாத்து பந்தப்பட்டிருக்கும் இது 4 பேதமாகும்.

7. நாமம் : இதுநான்கு கதிகளிலும் சாரம் முதலியன ஆக்கப்பட்டு அநேக நாமங்களால் அழைக்கப்படுவது இது 93 பேதமாகும்.

8. கோத்திரம் : இதன் உதயத்தால் உயர்ந்த (அ) தாழ்ந்தகுலம் சொல்லப்படும் இது 2 விதமாகும்.

இவ்விதம் எல்லாம் சேர்த்து 5+9+28+5+2+4++93+2 = 148 பிரகிருதிகள். இதன் விபரம் வேண்டின் தத்வார்த்த சூத்திரத்தில் கண்டு கொள்க.

Previous Question Next