ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >49. உபவாசத்தின் விவரம் யாது?
</span><br>
<p><b>பதில் </b>:ஐந்து இந்திกขயங்களாலும் நுகரக்கூடியவற்றை விட்டு விட்டு நான்கு வகையான ஆகாரத்தையும் விட்டுவிடுவதற்கு உபவாசம் என்று பெயர். உபவாசதினத்தில் பஞ்சேந்திกขயங்களால் ஏற்படும் விஷயங்களையும் மனதால் ஏற்படும் கோபம் முதலாகிய கஷாயங்களையும் ஆகாரத்தையும் விட்டுவிடல் வேண்டும். விஷயகஷாயங்களை விடாமலும் தருமத் தியானம் செய்யாமலுமிருப்போமாகில் அதுவெறும் பட்டினியேயாம். உத்தம உபவாசம் 16 ஜாமகாலம் அதாவது முதலாவது நாளும், கடைசி நாளும் ஒரு வேளை உணவும் இடையிலுள்ள தினம் உபவாசதினமுமாகும். இதனிடையில் நீர் அருந்துதல் கூடாது. 14 ஜாமம் வரை உபவாச மிருப்பின் அதுமத்திம உபவாசமாகும். 12 ஜாமம் வரை உபவாசமிருப்பின் அலு ஜகன்ய உபவாசமாகும் சப்தமி தினம் மாலை முதல் நவமிதினம் முற்பகல் வரை 12 ஜாமமாகும். சப்தமி தினம் முற்பகல் 2-ம் ஜாமம் முதல் நவமி தினம் 3 ஜாமம் வரை 14 ஜாமமாகும்.
<br>


</p>
 

Previous Question Next