ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

48. தபம் என்பது யாது? அது எத்தனை வகைப்படும்?

பதில் :
கர்மங்களை நாசம் செய்வது தபசு. ஆத்மதியானம் செய்வதே தபசு ஆகும்.
எப்படி எனில் காய்ச்சப்பட்ட பொன் எப்படி சுத்தமாகிறதோ அப்படியே ஆத்ம தியான அக்னியால் ஆத்மா சுத்தமாகிறது.
முக்கிய தபம் தியானமேயாகும். அத்தபத்தில் சித்திபெறவே தபம் செய்யப்படுகிறது. அத்தபம் 2 வகை

1. பாஹ்யதபம் : வெளியிலுள்ள திரவியங்களை இச்சிப்பதும் பிறருக்கு வெளியிடுவதும்.

2. அந்தரங்கதபம் : மனதாலேயே இச்சித்தல்

பாஹ்யதபம் 6 வகைப்படும் :

1. அனசனம் : ஆசை முதலியவற்றை நாசம் செய்யவும், தியானத்தில் சித்தியடையவுமே. உண்பன, தின்பன, நக்குவன,
பருகுவன என்னும் நான்குவகை ஆகாரங்களைவிட்டு உபவாசமிருத்தல்.

2. அவமோதர்யம் : நித்திரை மயக்கத்தை ஜெயிக்க பசியை அடக்க சிறிது உணவு உண்ணல்.

3. விருத்திபாசால் சியானம் : ஆசையை அறவே ஒழிக்க இரண்டொரு வீடு செல்வதன்றி பிறிதொரு நியமத்துடன்
பிக்ஷக்குப் போதலும், சொல்லி அனுப்புதலும் இல்லை. பிரதிக்ஞை நிறைவேறிடில் பிக்ஷ கொள்ளல். இல்லையேல்
சந்தோஷத்துடன் திரும்பி விடுதல்.

4. ரசபாத்யாகம் : இந்தியங்களை ஜயிப்பதற்காக எல்லாவித ரசங்களையோ அல்லது சிலவற்றையோ நீக்கிவிடல்.

5. ரவிக்தசய்யாசனம் : பிரம்மசாயம், ஸ்வாத்யாயம் தியானம் இவற்றிற்றாக தனியாக சயனித்தல்

6. காயகிலேசம் : சார சுகத்தை அழிப்பதற்கும் கஷ்டங்களைப் பொறுத்தற்கும் செய்ய தானே வெயிலில்,
மரத்தடியில், நதிக்கரையில் இருந்து நானாவித ஆசனங்களாலும் தியானம் செய்தல்.

அந்தரங்க தபசு 6 வகைப்படும் :

1. பிராயச்சித்தம் : மனம் பலவீனம் அல்லதுவேறு தவறால் ஏற்பட்ட தோஷங்களை தண்டனை ஏற்று சோதித்தல்.

2. வினயம் : பூஜிக்கத்தக்கவர்களிடம் மாயாதை வைத்தல்.

3. வையாவிருத்யம் : தன் சாரம் முதலியவற்றால் பிறருக்கு சேவை செய்தல்.

4. ஸ்வாத்யாயம் : அறிவில் கருத்தைச் செலுத்த சோம்பலை நீக்கி சாஸ்திரம் படித்தல் அல்லது சிந்தித்தல்.

5. வியுத்சர்க்கம் : பிறபதார்த்தங்களில் ஆன்மா ஈடுபடுவதைத் துறத்தல்.

6. தியானம் : மனதை அடக்கி தருமத்தில் (அ) ஆன்ம ஸ்வரூபத்தில் லயித்தல் முதலியன.

Previous Question Next