ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

45. முனிகள் (அ) யதிகள் எத்தனை வகையினர்?

பதில் :1. ஆச்சாயார் : சங்ககுரு முனி தருமத்தைத்தானே வழுவாமல்காப்பதும் காக்கச்செய்பவருமாவர்.
2. உபாத்தியாயர் : சாஸ்திரங்களை படிப்பவர்
3. தபசி : மகா உபவாசகர்த்தாவாகவும் பாஷகங்களை பொறுத்துக்கொண்டும் தபம் செய்பவர்.
4. சைக்ஷ : புதியதாக தீக்ஷ பெற்ற சிஷ்யர்கள்.
5. க்ளான : ரோகத்தினால் களைப்படைந்தவர்
6. கணம் : முனிசம் பிரதாயமுள்ள சாதுகணம்
7. குலம் : தீக்ஷயளிக்கும் குருவின் சகோதரன்
8. சங்கம் : ஷி, முனி, யதி, அனகாரர் முதலியவர்கள்
9. சாது : நீண்டகாலமாக தீக்ஷத்துள்ளவர்கள்
10. மனோக்ஞர் : லோகமான்ய பிரசித்தர்கள். ஆக 10 வகையினர்.

45a. ஜினலிங்கத்தின் ஸ்வரூபம் யாது?

பதில் :ஜினனுடைய தோற்றம் நிர்வாண திகம்பர ரூபமாகும். போலி ஆச்சாரமின்றி சுத்த நல்லெண்ணங்களால் மகாவிரதங்களை கடைபிடித்து தியானாப்யாசமும் செய்யப்படுகின்றது. ஜினலிங்கத்தின் முன்னம் மயிலிறகின் கொத்து (புஞ்சம்) ஒன்றும் மரத்தினால் செய்த கமண்டலம் ஒன்றுமாகும். புஞ்சத்தால் ஜீவன்களை ரக்ஷப்பதற்கும், கமண்டலம் செளசத்திற்காக தண்ணீர்வைத்துக் கொள்ளவுமாம் அவசியமான சாஸ்திரங்களை வைத்துக்கொள்ளல், வஸ்திரம் கிடையாது. ஸ்ராவகர்களின் உத்கிருஷ்ட லிங்கம் ஜலக் ஒரு லங்கோட்டணிபவராகவும் க்ஷல்லக் ஒரு லங்கோட்டுடன் அறைவஸ்திரம் ஒன்றும் வைத்துக்கொள்ளல் இருவருக்கும் புஞ்சம் கமண்டலம் உண்டு.

Previous Question Next