ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >44. பிரம்மசாகளால் தடுக்கக்கூடிய கியைகள் யாவை?
</span><br>
<p><b>பதில் :</b>ஸ்திகளின் கதையை விஷயஉத்பத்தி உண்டாகும் முறையில் விவரங்களைக் கேட்டல், சொல்லல், படித்தல், முதலியவற்றை விட்டுவிடல், ஸ்திகளின் சங்கீதம், நாட்டியம்பற்றி தொந்துகொள்ளவோ அவர்களுடைய சேஷ்டைகளை காணவேண்டுமென்ற எண்ணத்தையோ விட்டுவிடல். தன் கருத்தை கீழ்மையிலும் விஷய வாசனைகளிலும் ஈடுபடாமல் வைத்துக்கொள்ளல், உத்சவம், நாடகம், சினிமா, நாட்டியம் முதலிய விஷய வாசனைகளைப் பெருக்க வல்ல காக்ஷகளை (காட்சிகளை) பார்க்காதிருத்தல், ஒழுக்கங்கெட்ட மனிதர்களிடமிருந்து விலகியிருத்தல். போதை தரும் தாம்பூலம் புஷ்பமாலை அத்தர் முதலிய வாசனைதிரவியம் முதலியவற்றை விட்டுவிடுதல். இரவு போஜனம் கொள்ளாமை. விஷய வாசனைக்குய ஆபரணம், வஸ்திரம் உடுக்காமை, ஏகாந்தத்தில் எந்த ஸ்தியினிடத்தும் உரையாடமை, ரசனேர்திய வெறியைவிடல், ஏனெனில் நாவினால் ருசிப்பதை அடக்க முடியாத மனிதனின் சந்தோஷமெல்லாம் நஷ்டமடைந்து விடுகிறது. சமதா எண்ணத்தை கனவிலும் நினைக்க முடியாது. அவனுடைய உலக விவகாரம் நஷ்டமடையும். விரதமும் பங்கமடையும்.

</p>
 

Previous Question Next