ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >4. ஸ்ராவகர்களின் மூல குணங்கள் யாவை?
</span><br>
<p><b>பதில் :</b>(i) சில நூல்களில் தேன், மாமிசம், கள் இம் மூன்றுடன் ஆல், அரசு, அத்தி, இரளி, கல்லத்தி இவ்வைந்தின் பழங்களையும் சாப்பிடாமல் விடுவது (8-மூலகுணம்) என்றும் (ii) வேறுசில நூல்களில் மது, கள்ளு, மாமிசத்துடன், கொலை, களவு, பொய், காமம், பாக்ரஹம் முதலிய எட்டும் விடுதலே அஷ்ட மூலகுணம் என்றும் (iii) மற்றுமொரு நூலில் அநுவிரங்களுடன் மது, மாமிசம், சூது முதலிய மூன்றையும் விடுதல் மூலகுணமென்றும் (iv) மற்றும் சில நூல்களில் மது, மாமிசம், கள், பஞ்சோதும்பரமும் சேர்ந்து ஒன்றாகவும் மற்ற இரவு போஜனம் செய்யாமை, தினசா தேவ பூஜை, ஜீவகாருண்யம், வடித்த ஜலம் உபயோகித்தல் முதலியவை அஷ்டமூலகுணம் என்றும் சொல்லப்படுகின்றன.
</p>

Previous Question Next