ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >36. தெய்வங்களாக பூஜிக்கத் தக்கவர் யாவர்?
</span><br>
<p><b>பதில் :</b>அரகந்தர், சித்தர், ஆச்சாயர், உபாத்தியாயர், சர்வ சாதுக்கள், ஜினதருமம், ஜினசுருதம், ஜிநசைத்யம் (பிரம்மம்) ஜிநசைத்யாலயம் என்போர். அரகந்தருடைய பிரதி பிம்பத்திலேயே இந்த 9-தெய்வங்களும் அடங்கி விடுகின்றன. ஆச்சாயர், உபாத்தியார், சாதுக்கள் மூவரும் அரஹந்தருடைய முந்திய நிலையேயாவர். சித்த பதவி ஏற்படும்போது அரஹந்த பூர்வகமாகவே ஏற்படுகின்றது. அரஹந்தருடைய வார்த்தைகளே ஜினவனம். அதன் மூலம் வெளிப்பட்ட பொருளின் தன்மையே ஜினதர்தம். அரகந்தருடைய பிரதி பிம்பமே ஜினபிரதிமையாகும். அதை எங்கு நிலைநிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறதோ அது ஜிநாலயமாகும். இவ்விதம் 9-தெய்வத் தன்மையுள்ள ஜிநபிம்பம் அவர்களின் பெயர் விருஷபர் முதலியவர் சித்தியடைந்த சம்மேத சிகரம் முதலிய சித்த க்ஷத்ரம் பஞ்சகல்யாணம் முதலிய காலங்கள் ரத்னத்ரயம் தச லக்ஷண தர்மம் ஷோடசபாவனை இவைகள் தினந்தோறும் பூஜிப்பதற்கு தகுதியுடையவன.


</p>

Previous Question Next