ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >35. வீதராக பகவானுக்கு நித்யாபிசேகம் செய்யவேண்டிய அவசியம் யாது?
</span><br>
<p><b>பதில் :</b>இவ்விஷயத்தில் ஜைன மதத்தின் பெருங்கருத்து நிறைந்துள்ளது. மூர்த்தியை ஜலத்தால் சுத்தம் செய்வதால் உண்டாகும் உட்கருத்து இப்படிப்பட்ட புனிதமான தியானத்திலுள்ள தோற்றம் பக்கத்தில் இருப்பதனால் அவருடைய வீதராகத்வத்தை முழுமையாக தாசிக்கிறோம் அதைத் தொடுவதால் சித்தம் புளகாங்கிதம் அடைகிறது. அரஹந்த தேவரையே தொட்டது போலாகிறது. கந்தோதகத்தைச் சிரசில் தெளித்துக்கொள்வதால் சிரசும் எல்லா சாரமும் புனிதமாகிறது. மனதில் தீர்த்தங்கர பகவானுக்கே அபிஷேகம் செய்ததைப் போன்ற எண்ணம் உண்டாகிறது. வெளிக் கருத்து மூர்த்தியின்மீது தூசு, குப்பை, சிலந்தி வலை, அழுக்கு அதனாலேற்படும் ஒருவகைப் புள்ளி ஏற்படாமலிருப்பதற்கே யாகும். இவைகளால் மறைக்கப்படுவதால் மூர்த்தியின் வீதராகத் தன்மை கெட்டு தாசனத்திற்கு தடை ஏற்படுகிறது. கிரகஸ்தனுடைய பரிணாமம் சுத்தாத்மத் தன்மையின் சிந்தையிலேயே ஈடுபடுவதில்லை. சாசமானமான எண்ணமும் இருப்பதில்லை. தனித்து நிலைப்பதில்லை. இதனால் பரமாத்ம சிந்தனை செய்து வீதராக சொரூபமுடைய பிரதி பிம்பத்தில் உறுதி பூண்டு பரமாத்மாவின் தியானம், ஸ்துதி, பூஜை முதலியன செய்யப்படுகிறது. இச்சமயத்தில் கஷாயம் முதலியவற்றில் விருப்பமின்மையால் கெட்ட நினைவுகள் விடுபடுகின்றன தூய்மையான நல்லெண்ணங்களின் வல்லமையால் தேவ மனித, திர்யஞ்ச என்ற மூன்று நல்லாயுளைத் தவிர மீதியுள்ள கர்மங்களின் நிலை குறைந்து விடுகிறது. புண்ணிய கர்ம குணத்தில் விருப்பம் அதிகமாகி பாப கர்ம விருப்பம் குறைந்து உதிர்ந்து விடுகிறது. பாப கர்ம நாசமாகி புண்ணிய கர்மம் ஏற்படுகிறது.

</p>

Previous Question Next