ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >34. துர் கர்மம் என்பது என்ன? அது எத்தனை வகைப்படும்?
</span><br>
<p><b>பதில் :</b>(பெரும்பாவ மயமான வேலை) கொடுமையான காயத்திற்கு துர்கர்மம் என்கிறோம்.
அவைகள் 15 ஆகும்
1. வனஜீவிகா-மரம் வெட்டி விற்றல்
2. அக்னி ஜீவிகா-கா, செங்கல் முதலியன செய்துவிற்றுப் பிழைத்தல்
3. சகட ஜீவனம்-வண்டி முதலியன செய்வித்தும் உழவிற்கான கயிறு வகைகள் செய்வித்தும் ஜீவித்தல்
4. (படாசுவெடி ஜீவனம்) வெடி படாசு தயாத்து விற்பனை செய்தல்
5. பாடக் ஜீவனம் - வண்டி, குதிரை முதலியவற்றின் மேல் பாரம் ஏற்றி பொதி சுமத்தல்.
6. யந்திர கஷ்டம் - யந்திரங்களைச் செலுத்துதல் செக்காட்டி எண்ணை எடுப்பது போன்றது.
7. நிர்லாஞ்சன்-சாரத்தின் அங்கத்தை சோதித்தல் மாட்டிற்கு மூக்கு குத்துவது
8. அசதி தோஷம்-பூனை, நாய் வளர்த்தல், தாசி, தாசர்களை காப்பாற்றி அவர்களின் மூலம் தீயவழியில் பணம் சம்பாதித்தல்
9. சர:சோஷ-குளம் கிணறு முதலியவற்றை தூர்த்தல். (தூர்வாருதல்)
10. தவ:பிரத் - தீ வைத்தல்
11. விஷவியாபாரம் - விஷ வஸ்துக்கள் விற்றல்
12. லாக்ஷ - அரக்கு வியாபாரம்
13. தந்தம் - யானைத் தந்தம் முதலிய வியாபாரம்
14. கேசவியாபாரம் - தாசி தாசன் மிருகம் விற்றல்
15. ரச வியாபாரம் - வெண்ணெய், மது முதலியவைகளை விற்றல் முதலியன.

</p>
 

Previous Question Next