ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >30. ஜைன தர்மத்தின் லக்ஷயம் அஹிம்சை பூஜை ஆரம்பிப்பதால் ஹிம்சை ஏற்படுகிறது எனின் பூஜிப்பதற்கான ஏற்பாடுகளை உபதேசிப்பது ஏன்?

</span><br>
<p><b>பதில் :</b> ஆரம்பத்தில் சொல்லப்பட்ட திரவியபூஜை முதலிய சுப காயங்களை கிரகஸ்தர்கள் செய்கின்றனர். சகலமும் துறந்த முனிவர்கள் ஒருக்காலும் செய்யார்கள். இருந்தபோதிலும் பூஜை முதலிய பூரண செயல்களில் கிரகஸ்தர்களை மிக்க முயற்சியுடன் ஈடுபட்டு செய்யும்படி ஆரம்பித்து வைக்க அதிகாரமுள்ளது. இதனால் பக்தி பூர்வமாக பாபம் சிறிதுகூட ஏற்படாது. புண்ணியம் அதிகாக்கும் இருந்த போதிலும் சம்யகஞானி கிரகஸ்தன் சுத்தோப யோகத்தையே தான் விரும்பியதாக நினைக்கிறார். அப்படி நினைத்தபோதிலும் கிரகஸ்த நிலையிலுள்ளவனின் அஸப துறவு சுபத்தில் பற்று ஏற்படுவது சகஜமேயாம்.
</p>
 

Previous Question Next