ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

3. ஸ்ராவகர்களின் குணங்கள் யாவை? அவர்கள் எத்தனை வகையினர்?

பதில் : ஸ்ராவகர்கள் மூலகுணம், உத்திரகுணம் இவற்றைக் கடைப்பிடித்து பஞ்சபரமேஷ்டிகளின் குணங்களைச் சொல்லித் தலைவணங்குதலும், தானமளித்தலும் பூஜை செய்தலுமாகிய இவையே முக்கிய குணமாகும். மேலும் அறிவுமயமாகிய தர்மாமிருதத்தையே பானம் பண்ணப்பட்டவராவர். (ஸ்ராவகர்களின் வகைக் கீழ்க்கண்டவாறு:)

1) பாக்ஷக் ஸ்ராவகன், 2) நைஷ்டிக் ஸ்ராவகன், 3) ஸாதக் ஸ்ராவகன் எனப்படுவர்.

1. பாக்ஷக் ஸ்ராவகன் : நற்காட்சியுடன் எட்டுமூல குணங்களைக் கொண்டு ஏழு விஸனங்களை விட்டு பன்னிரண்டு விரதங்களை (முதல் ப்ரதிமா நியம ரூபத்தாலன்றி) அப்பியாசத்துடன் கடைபிடிப்பவன்.

2. நைஷ்டிக் ஸ்ராவகன் : 11 நிலைகளிலும் தோஷமின்றி ஒன்றிரண்டு அல்லது யாவற்றையும் கடைபிடிப்பவன்.

3. ஸாதக் ஸ்ராவகன் : சாரம் பற்றிய கர்வமும், நான்கு வகை ஆகாரமும், மனம், வசனம், காயம் மூன்றினாலும் ஏற்படக்கூடியவற்றையும் விட்டுவிட்டு தியான சுத்தத்தினால் பிராணன் நஷ்டமடையும் சமயம் தன் ஆத்மாவின் அந்தக்கரணத்தை (மனதை) சுத்தம் செய்பவன்.

Previous Question Next