ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >28. ஸ்ரீ ஜிநேந்திர பகவானின் தாசனத்திற்குயவிதிகள் யாவை?

</span><br>
<p><b>பதில் :</b> வடிகட்டிய சுத்த ஜலத்தால் ஸ்நானம் செய்து ஆலயத்திற்குச் செல்லுவதற்குய ஆடை அணிந்து, மிதியடி யணியாமல் வழியைப் பார்த்துக்கொண்டே செல்லவேண்டும். ஆலயத்தைக் கண்டதுமே இருகைகளையும் குவித்து மூன்று சுற்று சுற்றி சிரசுவரை உயர்த்தி நமஸ்காரம் செய்ய வேண்டும். இதன் கருத்து நான் மன வசன காயத்தால் வணங்குகிறேன் என்பதாகும். பின்னர் வாயிற்படியருகில் பாதங்களை சுத்தம் செய்து குனிந்து பார்த்துக்கொண்டு உள்ளே செல்லுகையில் ஜய ஜய ஜயஹி நிஸஹி:நிஸஹி:நிஸஹி: என்று சொல்லிக்கொண்டே செல்ல வேண்டும். இதன் கருத்து பூஜை செய்யும் மனிதன் குறுக்கே யாரேனும் நின்று கொண்டிருந்தாலும் விலகி நில்லுங்கள் என்பதாகும். பின்னர் விக்கிரகத்திற்கு முன்சென்று வீதராக பகவானின் உருவத்தை சாயாகப் பார்த்தறிதல் வேண்டும். ஆலயம் செல்லுகையில் அக்ஷதை (அசி) பழம் முதலியன எடுத்துச் செல்லவேண்டும். அத்திரவியங்களை மந்திரம் சொல்லி ஆராதிக்க வேண்டும். வெறுங்கையுடன் ஆலயத்திற்கு செல்லதுல் கூடாது. பின்னர் இருகைகளையும் குவித்து மூன்று சுற்று சுற்ற வேண்டும், பிரதக்ஷணம் முடிகையில் நான்கு பக்கங்களிலும் ஒவ்வொரு திசையிலும் மூன்று சுற்று சுற்றி ஒருமுறை தலைவணங்கிச் செல்ல வேண்டும். கை குவித்தபடியே ஸ்துதி செய்ய வேண்டும். பின்னர் முன்னால் நின்று 9-முறை ணமோங்கார மந்திரத்தை உச்சாத்து பிம்பத்தின் தோற்றத்தை நினைத்தல் ஆன்மாவில் மனதை நிறுத்தி அஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். பிறகு கந்தோதக ஜலத்தை தன் சிரசிலும் கண்களிலும் ஒத்திக்கொள்ளல் வேண்டும். குவிந்துள்ள கைகளை தன்முகத்திற்கு முன்பாக வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கமாக சுற்றுவதற்கு ஆவர்த்தனம் என்கிறோம். குவித்துள்ள கைகளின்மீது சிரசைத் தாழ்த்துவதற்கு சிரோ வணக்கம் என்கிறோம்.


</p>

Previous Question Next