ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >27. ஜைன சமயத்தின் மூல சித்தாந்தம் யாது?

</span><br>
<p><b>பதில் :</b> 1. இவ்வுலகம் அழியாதது, ஜீவன் புத்கலம், தர்மாஸ்திகாயம், அதர்மாஸ்திகாயம், ஆகாசம், காலம் இவற்றின் சேர்க்கையாகும். இதனால் இந்த அழியாத் தன்மை நிலையானதாகும்.
2. சம்சா ஆத்மா அனாதி காலம் முதல் தொடர்ந்து புண்ணிய பாப கர்ம தன்மையுடைய சாரத்துடனுள்ளது. இதில் புதிய கர்ம பரமாணு சேர்ந்துகொண்டே இருக்கிறது. பழைய பரமாணு உதிர்ந்து கொண்டேயிருக்கிறது.
3. இந்த ஆத்மா தனக்குத் தானே ஆசை, கோப, மயக்கமாகிய எண்ணங்களால் கர்ம பரமாணுக்களின் சேர்க்கையை உண்டு பண்ணி தானே அவைகளின் செல்வாக்காலான பலனை அனுபவிக்கிறது. தனக்குத்தானே வீதராக எண்ணங்களால் அவைகளை நாசம் செய்து பரமாத்மாவாக முடிகிறது.
4. சுத்த ஆத்மாவை பரமாத்மா அல்லது ஈஸ்வரன் என்கிறோம். அது மாயாதைக்குயது தன் எண்ணங்களை பாணாமங்களை நிர்மலமாக்குவதற்காகவே அதற்கு பக்தி பூஜை செய்யப்படுகிறது. அது ஒன்றும் கொடுப்பதுமில்லை. சந்தோஷமோ வருத்தமோ கொள்வதுமில்லை.
5. ஆத்ம சாதனையே மோக்ஷ மார்க்கமாகும். இதற்கான சாதனை துறவறத்தில் பூர்ணமும், இல்லறத்தில் பூர்ணமற்றதுமாகும். இதனால் சுக சாந்தி கிடைக்கிறது. பழைய கர்மம் உதிர்ந்து புதிய பந்தமேற்படுகிறது.
6. ஜீவ, அஜீவ, ஆஸ்ரவ, பந்த, சம்வர, நிர்ஜரா, மோக்ஷ மென்கிற ஏழு தத்துவங்களும் நிறைந்துள்ளன.
7. அஹிம்சை : கஷாயங்களின் மூலம் தன்னுடைய (அ) பிறருடைய உயிருக்கு துக்கமுண்டு பண்ணுதல் சேதித்தல் பேதித்தல் முதலியன செய்தல் ஹிம்சையாகும். கொல்லாமை தேசத்திற்கும் மதத்திற்கும் உயர்வளிக்கவல்ல முக்கிய சாதனமாகும்.
8. சாம்யவாதம் : எல்லாவுயிர்களும் ஒரே சாசமானமாகும் பாபத்தால் துக்கமடைகிறோம். பாபியால் அல்ல. சிறிய பொய எல்லா ஜீவன்களும் தர்மத்தின் அதிகாயாகும் நுண்ணிய ஜீவன்கூட உன்னதமானதைச் செய்து உயர்வான நிலையை அடைகிறது.

</p>

Previous Question Next