ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >23. அறங்கேட்கத் தகுதியற்றவர் யாவர்? அவர்களின் குணங்கள் யாவை?
</span><br>
<p><b>பதில் :</b> 14-வகையினர். 1. மண்ணிற்குச் சமமானவர் : இவர்கள் கேட்கும்போது ரசித்துக் கேட்டுப்பின்னர் பொருட்படுத்தவே மாட்டார். 2. சல்லடைக்குச் சமமானவர் : குணங்களை விட்டு குற்றத்தை கொள்வோர். 3. வெள்ளாட்டுக்குச் சமம் : விஷய வாசனையில் மனம் அலைபவர்கள், 4. பூனை போன்றவர் : தீய எண்ணமுடையவர்கள். 5. கிளிபோன்றவர் : ஒருவர் சொல்லியபடியே சொல்பவர் தானே அறியாதவர். 6. கொக்கு போன்றவர் : பகிரங்கத்தில் பண்புடையவராகவும் அந்தரங்கத்தில் அழுக்கு உடையவராகவுமிருப்பர். 7. கல்போன்றவர் : எப்போதும் மனமிரங்காதவர், 8. பாம்பு போன்றவர் : அமிர்தத்தையும் விஷம் போல் கிரகிப்பர். 9. பசுபோன்றவர் : சிறிதளவு கேட்பினும் பொதும் லாபமடைவர். 10. அன்னம் போன்றவர் : பொருளுள்ள பதார்த்தங்களையே கொள்வர். 11. எருமை போன்றவர் : சபையில் உபத்திரவம் செய்வோர். 12. பொத்தல் பானை போன்றவர் : உபதேசம் பதியவே பதியாது. 13. போன்றவர் எல்லோருக்கும் தீமை விளைவிப்பவர். 14. அட்டை போன்றவர் : குணங்களை விட்டு குற்றத்தைக் கொள்வோர். இவர்களில் பசு, அன்னம் போன்றவர்கள் உத்தமர்கள். மண்ணும், கிளியும் போன்றவர்கள் மத்திமர், மீதம் 10 வகையினரும் அதமராவர்.
</p>
 

Previous Question Next