ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >22. ஆகமம் (அ) சாஸ்திரம் என்பது யாது?
</span><br>
<p><b>பதில் :</b> பதினெண் குற்றமற்றதும், வீதராக சர்வக்ஞனால் கணதரர்கள் மூலமாகச் சொல்லப்பட்டதும், மூவுலகிலுள்ள பதார்த்தங்களை அறிவிப்பதில் தீபத்திற்குச் சமமானதும், வீட்டின்பத்தில் பற்றுண்டாக என்னேரமும் தர்மத்தை விளக்கவல்லதும், பிரத்யக்ஷ, பரோக்ஷ ப்ரமாணத்தால் வாதத்திற்கிடமில்லாததும், எந்த யுக்தியாலும் கண்டிக்க முடியாததும் தீயவழியில் செல்லாது தடுக்க வல்லதும் எல்லா உயிர்களுக்கும் நன்மையேயளிக்க வல்லதுமாய் இருக்கப்பட்ட ஆகமத்தைத்தான் உண்மையான சாஸ்திரம் என அறிய வேண்டும்.
</p>

Previous Question Next