ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >21. சாஸ்திரம் படித்து நல்லறிவைப் பெறும் ஆசாரங்கள் யாவை?
</span><br>
<p><b>பதில் :</b> 1. சப்தாச்சாரம் : சித்தாந்தத்தின் எழுத்து, பதம், வாக்கியம் முதலியவற்றை சுத்தமாக உச்சாத்தல்.
2. அர்த்தாச்சாரம் : முழு உரையறிந்து படித்தல், படிப்பித்தல்

3. உபயாச்சாரம் : சப்த உச்சாப்பு உரை இரண்டையும் சுத்தமாகச் சொல்லுதல்.

4. காலாச்சாரம் : தகுந்த காலத்தில் சாஸ்திரத்தை மனனம் செய்தல். கோசர்க்ககாலம் - காலை 2, 4, 8, 10 மணிக்கும் மாலை 2, 4, 8, 10 மணிக்கும் அகஸ்மாத்தாக சூயன் மறைந்த பின் திசைகளில் சென்னிறமாகவும், தீ பற்றியது போலும் காணப்படும் சமயத்திலும், நட்சத்திரம் எந்து விழும்போதும், இந்திர தனுசு உண்டாகும் போதும், சூய சந்திர கிரகண காலத்திலும் புயல்காற்று பூகம்பம் முதலிய உத்பாத காலங்களிலும், சித்தாந்த நூல் படித்தல் படிப்பித்தல் கூடாது. ஆனால், ஸ்தோத்திரம் ஆராதனை தர்ம கதை படித்தல் படிப்பித்தல் முதலியவற்றிற்குத் தடையில்லை.

Previous Question Next