ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >20. கொலை (ஹிம்ஸை) என்பது யாது? அது எத்தனை வகைப்படும்?
</span><br>
<p><b>பதில் :</b> கோபத்தினால் (மனம், வாக்கு, காயம்) எண்ணம், சொல், செயல் மூலம் உயிரும் மனமும் உள்ளதுமான ஓருயிரைக் கொல்வது ஹிம்சையாகும். அது நான்கு வகைப்படும்.

1. சங்கல்பணி ஹிம்சை : தான் குறிப்பிட்ட ஓருயிரை கொல்ல வேண்டுமென்ற எண்ணத்துடன் கொலை செய்வது.

2. ஆரம்ப ஹிம்சை : கொலை செய்ய வேண்டுமென்ற எண்ணமின்றியும் செய்வதாகும். (உ-ம்) இல்வாழ்க்கையில் சமைத்தல், தண்ணீர் எடுத்தல் போன்றவை.

3. உத்யோஹிணி ஹிம்சை : முக்கியமாக வாள், எழுத்து, உழவு, வாணிகம், சிற்பம், கல்வி முதலிய அறுவகைத் தொழிலின் மூலம் செய்வதாகும்.

4. விரோதினி ஹிம்சை : தீயோர், பகைவர், திருடர் முதலானவர் வந்து விடில் அவர்களை எதிர்த்தல் தடுத்தல் முதலியவற்றால் ஏற்படுவதாகும்.
</p>

Previous Question Next