ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

182. முனிகள் ஆகாரம் எடுத்துக்கொள்ள ஐந்து முக்கிய விதிகள் யாவை?

பதில் :

1. வயிற்றில் உற்பத்தி ஆகும் பசி என்னும் அக்னி சாந்தமடையுமளவிற்கு மட்டுமே ஆகாரம் எடுத்துக்கொள்ளவேண்டும்.

2. வண்டி ஓடுவதற்காக சக்கரங்களுக்கு எண்ணெய் போல இந்த சாரம் மோக்ஷத்தை அடைவதற்கு மட்டும் ஆகாரம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

3. பசு எப்படி தீனி கொடுப்பவர்களைக் கவனிக்காமல் தீனியை மட்டும் பார்க்கிறதோ, அதே போல் ஆகாரம் கொடுப்பவர் பணக்காரரா, ஏழையா என்று கொடுப்பவர் நிலைமைபற்றி யோசிக்காமல் ஆகாரம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

4. பானையை மண், குப்பை போன்றவற்றால் நிரப்புவது போல் ருசி பாராது ஆகாரம் எடுத்துக்கொள்ளவேண்டும்.

5. வண்டு பூக்களுக்கு எந்த கஷ்டமும் கொடுக்காமல் தேனை எடுத்துக்கொள்வது போல் இல்லறத்தாருக்கு எந்த கஷ்டமும் கொடுக்காமல் ஆகாரம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

Previous Question Next