ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >179. போகத்தை அனுபவிக்கும் போதும் ஞானிகளுக்கு ஏன் கர்மம் பற்றுவதில்லை?

</span><br>

<p><b>பதில் </b>: குழந்தை தனக்குப் பால் புகட்டியும் தூக்கிக் கொஞ்சியும் வளர்க்கும் தாதியை தன் தாய் அல்ல, பிறர் என மதித்தல் போலும், தாமரை சேற்றில் இருந்தாலும் சேற்றிலிருந்து வேறாக இருத்தல் போலும், நாக்கு எந்த ருசியை அருந்தினாலும் தனக்கென ஒரு ருசி ஏற்படுவதில்லையோ, அதுபோலும், பொன் நீกขல் எவ்வளவு காலம் இருந்தாலும் அதில் பாசி பிடிக்காதது போலும் ஞானிகள் பலவிதமான காกขயங்கள் செய்தாலும் அவர்கள் ஆத்ம சுபாவத்தால் பல கர்ம உதயம் ஏற்பட்டாலும் அவர்களுக்கு கர்ம பந்தம் ஏற்படுவதில்லை.<br>


</p> 

Previous Question Next